மறைக்கப்படும் உண்மை: வலுசக்தி எதிர்காலத்திற்கான இலங்கையின் போர்

– சானக டி சில்வா

இலங்கையின் முதலீடு மற்றும் வலுசக்தி துறைகளில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய, 386 மில்லியன் டொலர் முதலீட்டுடனான புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டத்திற்கு எதிராக ஏன் இத்தனை எதிர்ப்புகள் எழுந்துள்ளன?

கண்ணீர்த் துளி வடிவிலான இலங்கை எனும் தீவில் சூரியன் மறையும் போது, தேசத்தின் வலுசக்தி நிலப்பரப்பில் ஒரு சர்ச்சைக்குரிய நிழல் போர் உருவாகியுள்ளது.

நாடு பொருளாதார முன்னேற்றத்தின் ஒரு மாற்றுப் பாதையை நோக்கி நிற்கும் நிலையில், முன்மொழியப்பட்டுள்ள 250 MW கொள்ளவு கொண்ட மன்னார் காற்றாலை மின்சக்தித் திட்டம் தொடர்பில், குறுகிய மனப்பான்மை கொண்டவர்களின் பொய்யான, பல்வேறு குற்றச்சாட்டுகள் வந்து கொண்டிருக்கின்றன. தற்போதுள்ள அனைத்து காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்களுடன் ஒப்பிடும் போது, அதிக உற்பத்தியுடன் கூடிய, குறைந்த கட்டணம் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்கள் கொண்ட, குறைந்தபட்ச காபன் வெளியேற்றம் கொண்ட இத்திட்டம் உறுதியளிக்கப்பட்ட பின்னரும், இவ்வாறான நிலை தொடர்வது கவலைக்குரிய விடயமாகும்.

மன்னார் காற்றாலை மின்சாரத் திட்டம் தொடர்பான விவாதம் தீவிரமடைந்துள்ள நிலையில், திரைகளால் மறைக்கப்பட்ட உண்மைகளை தோலுரித்து, உண்மையான நோக்கங்களை அம்பலப்படுத்த வேண்டிய நேரம் இதுவாகும்.

வெளிநாட்டுக்கு சொந்தமான ஒரு நிறுவனத்திடம் இருந்து பசுமை வலுசக்தியை கொள்வனவு செய்வது என்பது நாட்டின் நிதி நிலையை பாதிக்கலாம் என விமர்சகர்கள் வாதிடுகின்றனர். இருப்பினும், இந்த விமர்சனங்கள் எதுவும் வெளிநாட்டு நேரடி முதலீட்டின் (Foreign Direct Investment – FDI) மூலம் வரும் கணிசமான பொருளாதார நன்மைகளை கவனிப்பதில்லை. மன்னார் மின்னுற்பத்தித் திட்டமானது, இலங்கையின் பொருளாதாரத்தில் 386 மில்லியன் அமெரிக்க டொலர் மூலதனத்தை கொண்டு வருவதோடு மட்டுமன்றி சர்வதேச ஒத்துழைப்பை ஊக்குவிப்பதோடு, வணிக வாய்ப்புகளுக்கு இலங்கை திறந்துள்ளது என்பதை உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்களுக்கு சமிக்ஞை செய்கிறது.

இது நாட்டின் செழிப்புக்கும் நிலைபேறான தன்மைக்குமான முதலீடாகும்.

மன்னார் காற்றாலை மின்னுற்பத்தித் திட்டமானது, உள்ளுர் சமூகங்களில் குறிப்பாக வட மாகாணத்தில் ஏற்படுத்தும் சாதகமான தாக்கத்தை குறைத்து மதிப்பிட முடியாது. தொழில்வாய்ப்பு உருவாக்கம், திறன் மேம்பாட்டு திட்டங்கள், சிறு வணிகங்களுக்கான வாய்ப்புகள் ஆகியன இத்திட்டத்தின் ஒருங்கிணைந்த கூறுகளாகும் என்பதோடு, இது பிராந்தியத்தின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்கு பங்களிக்கிறது. இந்த நன்மைகளின் விளைவானது 25 ஆண்டுகளுக்கு அப்பால் நீண்டு செல்வதன் மூலம், நிலைபேறான வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. நீண்ட கால தூரநோக்குப் பார்வையானது, குறுகிய கால அச்சங்களால் தடுக்கப்படக் கூடாது. ஏராளமான இயற்கை வளங்களால் ஆசீர்வதிக்கப்பட்ட பூமியான இலங்கை, அதிக மின்சார கட்டணத்தின் பிடியில் சிக்கித் தவிக்கும் ஒரு தௌிவான உண்மைக்கு மத்தியில், இந்த கதைகள் யாவும் ஆரம்பிததுள்ளன.

தெற்காசியாவில் உள்ள எமது அண்டை நாடுகள் கட்டுபடியான விலையில் மின்சக்தியை அனுபவித்து வரும் அதே வேளையில், இலங்கையர்கள் காரணமின்றிய அதிக கட்டண சுமைகளை அனுபவித்து வருகின்றனர். இந்த விடயத்தின் மையத்தை நோக்கி எமது பார்வையைத் திருப்பும் வகையில், Verité Research முன்னெடுத்த ஆய்வானது ஒரு வெளிப்படையான யதார்த்தத்தை வெளிப்படுத்துகிறது. இங்கு இலக்கங்கள் பல உண்மைகளை குறிப்பிட்டன. எமது பிராந்தியத்திலுள்ள ஏனைய நாடுகளை விட 2.5 முதல் 3 மடங்கு அதிகமாக மின்சார கட்டணத்தை நாம் செலுத்துகிறோம். இது, அதிகளவான குடும்பங்களை நிதி நெருக்கடிக்குள் தள்ளுகிறது. மின்சக்தி துறையின் தவறான நிர்வாகத்தின் வரலாற்று கதையில் உள்ள ஒரு எதிரி இதுவாகும்.

இலங்கையின் பிரதான மின்சக்தி விநியோகம், எரிபொருள் மற்றும் நிலக்கரியை பாரிய அளவில் நம்பியுள்ளது. இவை பொருளாதார சுமை மற்றும் சூழல் சீரழிவுக்கு காரணமாகும் விடயங்களாகும். ஆயினும், பசுமை வலுசக்திக்கு எதிராக எழுப்பப்படும் குரல்கள், எரிசக்தி நெருக்கடி காரணமான பிரச்சினைகளைத் தீர்க்க குரல் எழுப்புவதில்லை. நாட்டின் ஒவ்வொரு குடிமகனினதும் அன்றாட வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படத்தியுள்ள, நாடு ​​அதிக பணவீக்கத்தின் மூலம் வலுவான பொருளாதார பிரச்சினைக்கு உட்பட்ட போதிலும் கூட இக்குரல்கள் மௌனமாகவே இருந்தன. வொஷிங்டனை தளமாகக் கொண்ட Center for Global Development வெளியிட்டுள்ள ஆய்வின், அடிப்படை பின்னடைவு குறிகாட்டியின் படி, மோசமான உலகளாவிய நிதி நிலைமைக்கு மத்தியில் இலங்கை பாதிக்கப்படக்கூடிய நாடாகவே உள்ளது. இதையே REUTERS நிதிச் சந்தை நிபுணர்கள் மற்றும் இலங்கை ஊடகங்களும் தெரிவிக்கின்றன.

நாம் இவ்வாறான உண்மைகளை வெளிக் கொண்டு வரும்போது, ​நாட்டை வீழ்த்த நினைப்போரின் கதையும் எரிபொருள் மாபியாக்களின் ஆட்சியின் கதையும் வெளிப்படுகிறது. மன்னார் காற்றாலை மின்சக்தித் திட்டமானது, இலங்கையின் காற்றின் சக்தியை நிலைபேறான எதிர்காலத்திற்காக பயன்படுத்த முயற்சி செய்கிறது. இருப்பினும், முன்னேற்றத்தைத் தடுக்கும் சக்திகள் இதற்கு எதிராக முயற்சிகளை மேற்கொள்கின்றன. தேசத்தின் எரிசக்தி ஆதாரங்கள் மீது ஏகபோக உரிமைகளைக் கொண்ட இத்தகையவர்கள், மக்களின் கூட்டு நலன்களை கருதாமல், தங்களின் நலன்களை மாத்திரம் கவனத்தில் கொள்கின்றனர் என்பது தெளிவாகின்றது. இதன் பின்புலத்தில், பொதுக் கருத்தைக் கையாளுகின்ற, ஒரு சமூக விரோத, தேசவிரோத நிகழ்ச்சி நிரலுக்கான ஒரு பொய்யான பிரசார வலை விரிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார செழுமைக்கு எதிரான ஒரு பாரிய விளையாட்டின் கருவிகளாக, சூழல் தொடர்பான அடிப்படையற்ற, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் பறவைகளின் வாழ்விடங்கள் பற்றிய விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த கவலைகள், உண்மையாகவே சூழல் தொடர்பில் வேரூன்றியதா, அல்லது அவை மிகவும் மோசமான நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியா? நாட்டின் விரக்தியின் கடலில் நம்பிக்கைக் கலங்கரை விளக்கமாக அமையும் மன்னார் காற்றாலைத் திட்டமானது, நாசவேலைகளுக்கு இலக்காகி, குறுகிய மனப்பான்மை கொண்ட நிகழ்ச்சி நிரல்களின் பெயரால் வீணடிக்கப்பட்ட தேசத்தை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளாக மாறுகிறதா என பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன.

இந்த நாடகத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் விடயத்தில் அமைச்சர் கஞ்சன விஜேசேகர முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார். அவர் மின்சக்தித் துறையின் ஆட்சிக்கு வந்த போது, ​​குழப்பம் உச்சத்தில் இருந்தது. விநியோகத் தரப்பைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான கஞ்சனவின் முயற்சிகள் மிகவும் பாராட்டத்தக்கவையாகும். எனினும், செல்வாக்கு மிக்கவர்கள், திறனற்ற அதிகாரத்துவ குறுகிய மனப்பான்மை கொண்ட செயன்முறைகள் மற்றும் தற்போதைய எரிசக்தி துறை சீர்திருத்தத்திற்கு எதிராக கொடி தூக்கியுள்ள இலங்கை மின்சார சபைக்குள் உள்ள புதுப்பிக்கத்தக்க சக்திக்கு எதிரானவர்கள் என சவால்கள் நிறைந்த போர்க்களமாகவே இது உள்ளது.

இலங்கை ஒரு மாற்றுப் பாதையை நோக்கி நிற்கும் நிலையில், முன்னோக்கிச் செல்லும் அதன் பயணத்தின் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக, 386 மில்லியன் டொலர் முதலீட்டைக் கொண்ட, 250 MW மன்னார் காற்றாலை மின்னுற்பத்தித் திட்டம் திகழ்கிறது. ஊழல் மற்றும் பேராசை கொண்டோரின் பிடியிலிருந்து எமது வலுசக்தி எதிர்காலத்தை மீட்டெடுக்க வேண்டிய தருணம் இதுவாகும். புதுப்பிக்கத்தக்க வலுசக்தியைத் தழுவுவதன் மூலம், கனிய எரிபொருளின் ஏகபோக உரிமைகளிலிருந்து விடுபட்டு, அதன் மூலம் நாம் ஒரு பிரகாசமான நாளைக்கான பாதையை அமைக்க முடியும். எரிசக்தித் துறையானது, சலுகை பெற்ற சிலரின் பொக்கெற்றுகளை நிரப்புவதிலிருந்து விடுபட்டு, மக்களின் நலன்களுக்கு சேவை செய்வதை உறுதி செய்து, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அதிகாரங்களை உருவாக்க வேண்டிய நேரம் இதுவாகும்.

இலங்கையின் வலுசக்தி இறையாண்மைக்கான போரில், பங்குகள் அதிகமாக உள்ள போதிலும் மாற்றத்திற்கான சாத்தியம் எல்லையற்றதாகும். ஊழல் கறைபடிந்த குறுகிய மனப்பான்மை கொண்டவர்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு, இலங்கை மக்களின் கூட்டான விருப்பத்தின்படி, புதுப்பிக்கத்தக்க வலுசக்தியின் பயன்படுத்தப்படாத ஆற்றலால் இயக்கப்படும், புதுப்பிக்கத்தக்க வலுசக்தி துறையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களால் கொண்டு வரப்படுகின்ற, சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டின் மூலம் பொருளாதாரப் பாதைகளை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகள், இலங்கை அரசாங்கத்தின் பரிசீலனையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ENDS

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *