இந்தியாவின் குஜராத்தின் கௌதாவில் முதலாவது 551 மெகாவாற் சூரிய சக்தியை திட்டத்தை செயற்படுத்துகிறது
- வருடாந்தம் சுமார் 81 பில்லியன் அலகு மின்சாரத்தை உற்பத்தி செய்ய கௌதாவில் 30 GW தூய மின்சக்தியை உருவாக்க AGEL திட்டம்
- இது 16.1 மில்லியன் வீடுகளுக்கு மின்சாரம் வழங்குவதோடு, வருடாந்தம் 58 மில்லியன் தொன் CO2 வெளியேற்றத்தைத் தடுக்கும்
தெற்காசியாவின் மிகப்பெரிய மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி (RE) நிறுவனங்களில் ஒன்றும் உலகின் இரண்டாவது மிகப் பெரும் சூரிய மின்கலத் தொகுதி மேம்படுத்துனருமான Adani Green Energy Limited (AGEL), இந்தியாவின் குஜராத்தின் கௌதாவில் 551 மெகாவாற் சூரிய மின்சக்தி திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
வீதிகள் மற்றும் தொடர்பு இணைப்புகள் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்புகள் மற்றும் தன்னிறைவான சமூக சூழலை உருவாக்கியமையை ஆரம்பித்தது முதல், கௌதாவின் RE பூங்காவின் பணிகளை ஆரம்பித்து 12 மாதங்களுக்குள் AGEL இந்த மைல்கல்லை அடைந்துள்ளது. சவாலான மற்றும் தரிசு நிலமான Rann of Kutch நிலப்பகுதியை தனது வலிமையான 8,000 பணியாளர்கள் மூலம், வாழக்கூடிய சூழலாக AGEL மாற்றியமைத்துள்ளது.
இந்த RE பூங்காவில் 30 GW மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திறனை உருவாக்க AGEL திட்டமிட்டுள்ளது. இந்த திட்டமிடப்பட்டள்ள கொள்ளளவுத் திறனானது எதிர்வரும் ஐந்து வருடங்களில் செயற்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிர்மாணித்து நிறைவு செய்யப்பட்டதன் பின்னர், உலகின் மிகப்பெரிய மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி தளமாக கௌடா RE பூங்காவாக அமையும்.
கௌடா RE பூங்காவானது, வருடாந்தம் 16.1 மில்லியன் வீடுகளுக்கு மின்சக்தியை வழங்கும். பாரிய அளவிலான மீள் புதுப்பிக்கத்தக்க திட்டங்களை உருவாக்குவதில் நிபுணத்துவம் கொண்ட, வலுவான விநியோகச் சங்கிலி வலையமைப்பு மற்றும் தொழில்நுட்ப வல்லமை ஆகியவற்றுடன், உலகின் தூய வலுசக்தித் துறையில் முன்னொருபோதும் இல்லாத வகையில், இந்த சாதனை மிக்க ஜிகா மட்டத்திலான மின்னுற்பத்தி நிலையத்தை AGEL உருவாக்கியுள்ளமையானது, அது கொண்டுள்ள பலத்தை எடுத்துக் காட்டுகின்றது.
இப்பிராந்தியத்தில், இந்நாடானது சிறந்த காற்றாலை மற்றும் சூரிய சக்தி வளங்களை கொண்ட ஜிகா மட்டத்திலான மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மேம்பாட்டிற்கு ஏற்றதான ஒன்றாக காணப்படுகின்றது. இது தொடர்பில் விரிவான ஆய்வுகளை நடத்திய AGEL, மின்னுற்பத்தி நிலையின் வளர்ச்சியை துரிதப்படுத்த பல்வேறு புத்தாக்கமான தீர்வுகளை பயன்படுத்தியது. இச்செயற்பாடுகளில், உள்நாட்டு விநியோகச் சங்கிலி மற்றும் நிலைபேறான விநியோகச் சங்கிலிகளின் வளர்ச்சியை இது ஆதரிக்கிறது.
அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி இது பற்றி தெரிவிக்கையில், “சூரிய சக்தி மற்றும் காற்றாலைக்கான உலகின் மிக விரிவான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சூழல் கட்டமைப்புகளில் ஒன்றை, Adani Green Energy உருவாக்கி வருகிறது. பலம் வாய்ந்த மற்றும் புத்தாக்கமான கௌடா RE மின் நிலைய திட்டத்தின் மூலம், உயர்ந்த உலகளாவிய வரையறைகளை அமைத்தவாறு, ஜிகா மட்டத்திலான புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டங்களுக்கான திட்டமிடல் மற்றும் செயற்படுத்தல் தொடர்பான அம்சங்களில், உலகளாவிய தரநிலைகளை AGEL மீள் வரையறை செய்துள்ளது. இந்த மைல்கல்லானது, 2030 இற்குள் 500 ஜிகாவாற் மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திறனை அடைதல் மற்றும் காபன் நடுநிலையாக்கம் ஆகிய Adani குழுமத்தின் இலட்சிய இலக்குகளை நோக்கியதாகவும், இந்தியாவின் தூய வலுசக்தி மாற்ற பயணத்தை விரைவுபடுத்துவதில் அதானி குழுமத்தின் அர்ப்பணிப்பு மற்றும் முன்னிலையான பங்காக விளங்குகின்றது.” என்றார்.
இந்த தளத்தின் நிர்மாணத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர், புவித் தொழில்நுட்ப ஆய்வு, நில அதிர்வு ஆய்வு, மையவிலக்கு சோதனைகள், வள மதிப்பீட்டு ஆய்வுகள், நில ஆய்வுகள், சுற்றுச்சூழல் மற்றும் சமூகத் தாக்க மதிப்பீடு, சுற்றுச்சூழல் மற்றும் சமூக அக்கறை, விரிவான சாத்தியக்கூறு ஆய்வுகள் போன்ற பல்வேறு ஆய்வுகளை Adani Green கடந்த 5 வருடங்களாக மேற்கொண்டிருந்தது. புத்தாக்கமான தீர்வுகளை AGEL கௌடாவில் பயன்படுத்தியுள்ளது. இது உலகம் முழுவதும் ஜிகா அளவிலான RE பூங்காக்களை உருவாக்க உதவும் வகையிலான வரைபடத்தை வழங்குகின்றது. உதாரணமாக, தனித்துவமான மண் படைகள் தொடர்பான பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய, மண்ணின் வலிமையை அதிகரிக்கும் வகையில் நிலத்தடி கல் தூண்களை AGEL பயன்படுத்தியுள்ளது.
5.2 மெகாவாற் திறன் கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய கரையோர காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தில், bifacial solar PV modules, horizontal single-axis tracker systems அமைப்புகளை நிறுவனம் பயன்படுத்துகிறது. இது AI/ML ஒருங்கிணைப்புடன், அதன் அதிநவீன Energy Network Operation Centre (ENOC) தளத்தை நிகழ்நேரத்தில் செயற்படுத்துகின்றது.
இது தொடர்பான மேலதிக தகவலுக்கு: www.adanigreenenergy.comENDS