இலங்கையில் முன்னணியில் உள்ள பல்வகைத் துறை கூட்டு நிறுவனமான DIMO, Diversified பிரிவில் ஒருங்கிணைந்த தங்க விருதையும், Integrated Reporting இற்காக மற்றுமொரு தங்க விருதையும் வென்றுள்ளதன் மூலம், South Asian Federation of Accountants (SAFA) Best Presented Annual Report Awards, Integrated Reporting Awards and SAARC Anniversary Awards for Corporate Governance Disclosures Competition 2022 ஆகிய விருது நிகழ்வுகளில், நிறுவன அறிக்கையிடலில் DIMO நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை கோடிட்டுக் காட்டப்படுவதோடு, அதன் பிரதிபலன் சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
தெற்காசியாவில் பெருநிறுவன அறிக்கையிடலில் வெளிப்படைத்தன்மையைப் பேணுவதில் அதன் புத்தாக்கமான அணுகுமுறைகளின் பலனாக, DIMO இந்த விருதுகளை வென்றுள்ளது. அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற இவ்விருது வழங்கும் விழாவில், DIMO நிதிப் பொது முகாமையாளர் சுதத் மஹகெதர, DIMO குழும நிதித் திட்டமிடல் மற்றும் கட்டுப்பாட்டு சிரேஷ்ட முகாமையாளர் திருமதி அமாலி டி சொய்சா ஆகியோர், DIMO நிறுவனம் சார்பாக இவ்விருதுகளை பெற்றுக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
END