iPhone, Samsung உள்ளிட்ட ஸ்மார்ட் சாதனங்களுக்கான புரட்சிகர eSIM தீர்வுடன் கையடக்க தொலைபேசி சேவையை மீள்வரையறை செய்யும் HUTCH

இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை வழங்குனரான HUTCH நிறுவனம், iPhone, Samsung உள்ளிட்ட பல்வேறு ஸ்மார்ட்போன் வர்த்தகநாமங்களை கொண்டுள்ள அனைத்து பாவனையாளர்களுக்கும் அதன் புரட்சிகரமான eSIM ஐ அறிமுகப்படுத்துவதன் மூலம், கையடக்கத் தொலைபேசி இணைப்பை மீள் வரையறை செய்கிறது. உட்பொதிக்கப்பட்ட SIM என அறியப்படும்  eSIM ஆனது, உரிய வசதியை கொண்ட கையடக்கத்தொலைபேசி சாதனங்களுக்குள் தடையின்றி இணைக்கப்படும் ஒரு அம்சமாகும். இது பௌதீக சிம் அட்டைகளுக்கான அவசியத்தைத் தவிர்க்கிறது. அத்துடன் eSIM கொண்டுள்ள பல்வேறு  நெகிழ்வுத்தன்மை மூலம், பாவனையாளர்கள் தங்கள் மொபைல் சாதனங்களில் உள்ள முதன்மையான இலக்கத்துடன் செயற்படக்கூடிய இரண்டாவது இலக்கத்தை பயன்படுத்த முடியும்.

eSIM உடன் HUTCH இணைப்பை ஆரம்பிக்கும் செயன்முறை இலகுவானது:

  • பொருந்தும் தன்மையை சரிபார்த்தல்:  பாவனையாளர்கள் *#06# எனும் இலக்கத்தை அழுத்தி, தங்கள் சாதனத்தில் EID இலக்கம் உள்ளதா என சரிபார்ப்பதன் மூலம் eSIM பயன்படுத்த முடியுமா என அறிந்து கொள்ள முடியும்.
  • எளிதாக செயற்படுத்துதல்: மேற்படி விடயம் உறுதிசெய்யப்பட்டதும், பாவனையாளர்கள் eSIM இனை பதிவிறக்குவதற்கு QR குறியீட்டை ஸ்கேன் செய்து, தங்கள் முதன்மை இலக்கத்தை மாற்றாமல் இரண்டாவது கையடக்கத் தொலைபேசி இணைப்புக்கான அணுகலை பெறலாம். இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு, www.hutch.lk/esim தளத்தை பார்வையிடவும் அல்லது 0788777111 எனும் WhatsApp இலக்கம் மூலம் எம்மைத் தொடர்பு கொள்ளவும்.

HUTCH Sri Lanka நிறுவனத்தின் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி, Hamdhy Hassen இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையின் கையடக்கத்தொலைபேசி சந்தாதாரர்களுக்கு எமது eSIM சேவையை அறிமுகப்படுத்துவதில் நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். HUTCH eSIM மூலம், அதிகமான மக்கள் சிறந்த தெரிவுகளைச் செய்ய வாய்ப்பை பெறுவார்கள். விரைவான மற்றும் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட செயற்பாட்டின் மூலம், eSIM உடன் பொருந்தக் கூடிய தொலைபேசி அல்லது ஏனைய  சாதனங்களைக் கொண்ட பாவனையாளர்கள், புதிதாகவும் பாரிய அளவில் நாடு முழுவதும் விரிவாக்கப்பட்டுள்ளதுமான HUTCH வலையமைப்பு சேவைகளைப் பெறவும், அதனை அனுபவிக்கவும் முடியும். HUTCH வழங்கும் எல்லையற்ற மொபைல் டேட்டா மற்றும் அழைப்பு நேர பொதிகளின் சிறந்த தயாரிப்புகள் மூலம், பாவனையாளர்கள் பாரிய அளவிலான சேமிப்பு மற்றும் உயர் மன அமைதியைப் பெறுவார்கள்.” என்றார்.

மேலும், இந்த eSIM , நிலைபேறான தன்மை முயற்சிகளுக்கு பங்களிக்கும் அதே வேளையில், கையடக்கத் தொலைபேசி இணைப்பை மேம்படுத்தும் புத்தாக்கமான தீர்வுகளைத் தேடும் சுற்றுச்சூழல் உணர்வுள்ள நுகர்வோருக்கு ஒரு சிறந்த தெரிவாகும். பௌதீக சிம் அட்டைகளின் தேவையை நீக்குவதன் மூலம், இலத்திரனியல் கழிவுகளை குறைப்பதற்கும் பசுமையான, நிலைபேறான எதிர்காலத்தை மேம்படுத்துவதற்கும் குறிப்பிடத்தக்க படியை HUTCH எடுத்து வருகிறது.

இது பற்றிய மேலதிக விபரங்களுக்கு, www.hutch.lk/esim பக்கத்தை பார்வையிடவும் அல்லது 0788777111 எனும் WhatsApp இலக்கம் மூலம் எம்மைத் தொடர்பு கொள்ளவும்.

END

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *