வெற்றிகரமான 67ஆவது TAAI மாநாட்டிற்காக இலங்கையின் உள்நாட்டு சுற்றுலா நடத்துநர்களின் சங்கத்துடன் கைகோர்த்த HUTCH

இலங்கையில் 25 வருட வரலாற்றைக் கொண்ட முன்னணி தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான HUTCH, 67ஆவது TAAI மாநாட்டில் SLAITO (Sri Lanka Association of Inbound Tour Operators) மற்றும் TAAI (Travel Agents Association of India) உடன் மேற்கொண்ட வெற்றிகரமான கூட்டாண்மை தொடர்பில் அண்மையில் அறிவித்துள்ளது. இம்மாநாடு கொழும்பில் நடைபெற்றதோடு, அதில் 500 இற்கும் மேற்பட்ட இந்தியாவைச் சேர்ந்த பயணத் தொழில்துறை பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இலங்கைக்கு மிக அதிகமான சுற்றுலா பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தருகின்றனர்.. அந்த வகையில், தொழில் வல்லுநர்கள், பயண முகவர்கள், சுற்றுலா நடத்துபவர்கள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்களுக்கு அர்த்தமுள்ள இணைப்புகளை உருவாக்குவதற்கும் ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கான புதிய வழிகளை ஆராய்வதற்கும் ஒரு தனித்துவமான தளத்தை, 67ஆவது TAAI மாநாடு வழங்கியது. சுற்றுலா உட்பட அனைத்துத் தொழில்துறைகளுக்கும் உறுதியான பங்காளி எனும் வகையில், இந்தியாவில் உள்ள பல முன்னணி தொலைத்தொடர்பு சேவை வழங்குனர்களான Jio, Airtel, Vodafone Idea உள்ளிட்டவற்றுடன் HUTCH கூட்டுச் சேர்ந்துள்ளது. மேலும் நாளொன்றிற்கு 1 டொலர் எனும் குறைந்த விலையிலான திட்டங்களை HUTCH அறிமுகப்படுத்தியதுடன், சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் சுற்றுலா பயணிகள் தாங்கள் தங்கியிருக்கும் காலத்தில் எதிர்பாராத கட்டண அறவீடுகளை தவிர்க்க முடியும்.

HUTCH இன் CMO, ஹம்தி ஹஸன் இது தொடர்பில் தெரிவிக்கையில், “67ஆவது TAAI மாநாட்டு வேளையில், SLAITO மற்றும் TAAI உடனான எமது கூட்டாண்மைக்கு கிடைத்த அமோகமான வரவேற்பு தொடர்பில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை நிறுவனம் எனும் வகையில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கு சிறந்த கையடக்கத் தொலைபேசி சேவை அனுபவத்தை வழங்க நாம் கடமைப்பட்டுள்ளோம். இலங்கையின் பொருளாதாரத்தில் சுற்றுலாவின் முக்கியத்துவம் மிகப் பெரும் பங்கு வகிக்கின்றது. அது பொருளாதார வளர்ச்சிக்கு உந்துசக்தியாக இருப்பதோடு, வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், நாடுகளுக்கு இடையே கலாசார பரிமாற்றத்தை ஊக்குவித்தல் போன்ற பயன்களை தருகிறது. எமது நாடளாவிய மற்றும் உலகளாவிய வலையமைப்பு பரவலானது, E-SIM போன்ற இலகுவான அணுகல்கள் மூலம், இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கும் இலங்கையைச் சுற்றிப் பயணிக்கும் போதும், சிறந்த தகவல் தொடர்புப் பங்காளியாக HUTCH ஐ மாற்றுகிறது.

சுற்றுலாப் பயணிகளுக்கான பயண அனுபவத்தை மேம்படுத்துவதில் HUTCH கொண்டுள்ள அர்ப்பணிப்பு தொடர்பில் SLAITO இன் தலைவர் நிஷாத் விஜேதுங்க, பாராட்டு தெரிவித்தார். அவர் இங்கு தெரிவிக்கையில், “இம்மாநாட்டின் தொடர்பாடல் பங்காளியாக HUTCH ஐ நியமித்திருப்பதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். அவர்களின் நம்பகமான சேவைகள் சந்தேகத்திற்கு இடமின்றி 67ஆவது TAAI மாநாட்டின் வெற்றிக்கு பங்களித்துள்ளன. நாம் ஒன்றிணைவதன் மூலம், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான சுற்றுலாவை மேலும் மேம்படுத்த முடியுமென நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.” என்றார்.

HUTCH ஆனது, Fortune 500 இன் கீழுள்ள ஒரு நிறுவனமாகும். Hutchison Holdings Limited (CK Hutchison) ஆனது புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பத்தில் உறுதி பூண்டுள்ள ஒரு புகழ்பெற்ற பன்னாட்டு நிறுவனமாகும். அதன் பலதரப்பட்ட வணிகங்களுக்காக, உலகம் முழுவதிலும் உள்ள 50 நாடுகளில் அல்லது சந்தைகளில் 300,000 பேரை பணிக்கு அமர்த்தியுள்ளது. அந்த வகையில், 67ஆவது TAAI மாநாட்டின் வெற்றியானது தடையற்ற இணைப்பை மேம்படுத்துவதற்கும் இலங்கைக்கு வருகை தரும் அனைவருக்கும் சிறந்த பயண அனுபவத்தை வழங்குவதற்குமான HUTCH இன் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த மாநாட்டின் மூலமான சாதகமான தாக்கத்தின் மூலம், இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான சுற்றுலாத்துறையில், சுற்றுலாப் பயணிகளால் விரும்பப்படும் இடமாக இலங்கையின் நிலையை உறுதிப்படுத்துகிறது.

END

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *