காலியில் உள்ள 22 பிரதேச செயலகங்களில் உள்ள பெண்களுக்கு ஆதரவளிக்கும் தீவாவின் ‘கரங்களுக்கு வலு’ பயிற்சித் திட்டம்

இலங்கையின் முன்னணி சலவைப் பராமரிப்பு வர்த்தக நாமமான தீவா மற்றும் Women in Management (WIM) ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டு முயற்சியான ‘தீவா தேத்தட்ட திரிய’ (தீவா கரங்களுக்கு வலு) திட்டமானது, பெண் தொழில்முனைவோருக்கு ஆதரவளிக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றது. இந்த திட்டமானது, விசேட தொழில்முனைவோர் பயிற்சி அமர்வுகள் மூலம், வணிக முயற்சிகளில் பெண்கள் எதிர்நோக்கும் பிரத்தியேகமான தேவைகளை நிவர்த்தி செய்ய உதவுவதோடு, அவர்களின் வளர்ச்சி மற்றும் வெற்றியையும் ஊக்குவிக்கிறது. மிகக் கவனமாக திட்டமிடப்பட்ட இந்த அமர்வுகள், பங்கேற்பாளர்களுக்கு அத்தியாவசியமான வளங்கள் மற்றும் பயிற்சி வாய்ப்புகளை வழங்குகின்றன. இது பெண்களின் தொழில் முனைவுப் பயணத்தில் தன்னம்பிக்கையை ஊட்டுவதன் மூலம் வணிக வளர்ச்சியையும் ஊக்குவிக்கின்றது.

Women in Management (WIM) உடன் இணைந்து தங்கொட்டுவையில் நடத்தப்பட்ட முதலாவது அமர்வின் வெற்றியைத் தொடர்ந்து, யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற அமர்வுகளின் வெற்றியைக் கட்டியெழுப்பும் வகையிலும், தீவா கரங்களுக்கு வலு பயிற்சித் திட்டம் தற்போது காலி வரை விரிவடைந்துள்ளது.

இத்திட்டம் பலதரப்பட்ட தலைப்புகளை உள்ளடக்கிய, விரிவான பயிற்சி அமர்வுகளை கொண்டிருந்தது. உற்பத்தியாளர்கள் எனும் நிலையிலிருந்து தொழில்முனைவோராக தம்மை மாற்றும் மனநிலையை ஏற்படுத்துதல், சிறந்த கணக்கு முகாமைத்துவம், நிதி முகாமைத்துவம், மூலோபாய விலை நிர்ணயம், சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் சந்தைப்படுத்தல், வாடிக்கையாளர் பராமரிப்பு நடைமுறைகள், டிஜிட்டல் சந்தையை எவ்வாறு மேம்படுத்துதல், வர்த்தகநாம நுட்பங்கள் போன்ற முக்கிய விடயங்களில் இந்த அமர்வுகள் கவனம் செலுத்தியிருந்தன.

பங்கேற்பாளர்களின் குறிப்பிடும்படியான முன்னேற்றத்தை அங்கீகரிக்கும் வகையில், 2023 ஜூலை 20ஆம் திகதி காலி மாவட்டச் செயலகத்தில் அவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது. இந்நிகழ்வில் 22 பிரதேச செயலகங்களைச் சேர்ந்த பெண் தொழில்முயற்சியாளர்களின் பயிற்சித் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த நிகழ்வு கொண்டாடப்பட்டது. அது மாத்திரமன்றி பங்கேற்பாளர்களுடன் தொடர்ச்சியான தொடர்பை இத்திட்டம் பேணும் என்பதோடு, அவர்கள் அந்தந்த பிரிவுகளில் வளர்ச்சியுறுவதை அவதானிக்கும் வகையில், அவர்களது முன்னேற்றத்தை தொடர்ச்சியாக கண்காணிக்கும். அந்த வகையில் குறிப்பிடும்படியான வகையில், முதல் மூன்று இடங்களை பெறும் பெண் தொழில்முனைவோர், தங்கள் தொழில் முனைவு முயற்சிகளில் மேலும் முன்னேற்றமடைவதற்கான நிதியுதவியை பெறுவார்கள்.

தீவாவின் கரங்களுக்கு வலு பயிற்சி அமர்வுகளானது, உள்ளீர்க்கப்பட்ட மற்றும் செழிப்பாக வளரும் வணிகப் பிரிவுகளை உருவாக்குவதில் அபரிமிதமான சக்தியைக் கொண்டுள்ளன. பெண்களை ஆதரிப்பதற்கும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் நிறுவனத்தின் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கான மாற்றத்தை ஏற்படுத்த, இத்திட்டம் உறுதியான சான்றாக உள்ளது. பெண் தொழில்முனைருக்கு அத்தியாவசியமான திறன்கள் மற்றும் அறிவை வழங்குவதன் மூலம், வளர்ச்சியை நோக்கிய பாதையை இது  அவர்களுக்கு ஏற்படுத்துவதோடு, பிரகாசமான எதிர்காலத்திற்கான ஒப்பற்ற திறனைப் பெறவும் வழி ஏற்படுத்துகிறது.

இலங்கை நுகர்வோரின் இதயத்தில் இடம்பிடித்த ஒரு சலவை வர்த்தக நாமமான தீவா, பல ஆண்டுகளாக அவர்களது நம்பிக்கையைப் பெற்றுள்ளது. இலங்கை நுகர்வோரின் தனித்துவமான சலவைத் தேவைகள் தொடர்பான இவ்வர்த்தக நாமத்தின் ஆழமான புரிதலே அதனை ஏனையவற்றிலிருந்து வேறுபடுத்துவதோடு, முழுக் குடும்பத்திற்கும் ஒரு சிறந்த தெரிவாக அமைகிறது. தீவாவின் சலவைத் தயாரிப்புகள் மிக சிறப்பாக தயாரிக்கப்பட்டு, எளிமையான மற்றும் சிரமமில்லாத சலவை அனுபவத்தை உறுதிசெய்வதன் மூலம், நாளாந்த நம்பகமான துணையாக விளங்குகிறது.

Hemas Consumer பற்றி

வீடுகள் மற்றும் தனிநபர் பராமரிப்புப் பொருட்களை உற்பத்தி செய்யும் இலங்கையின் முன்னணி உற்பத்தியாளரான Hemas Consumer Brands ஆனது, பல ஆண்டுகளாக வலுவான நோக்கம் கொண்ட வர்த்தக நாமங்கள் மற்றும் முற்போக்கான நிலைபேறான தன்மையான நடைமுறைகள் மூலம் நுகர்வோர் இதயங்களை வென்றுள்ளது. Hemas Consumer Brands ஆனது, உலகத் தரம் வாய்ந்த தயாரிப்பு வகைகளின் மூலம், ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் தனிநபர் பராமரிப்புத் தீர்வுகளை வாழ்க்கையில் கொண்டு வர முயற்சிக்கிறது. வளர்ச்சியின் மூலம் ஈர்க்கப்பட்ட புத்தாக்கம் கொண்ட குழுக்கள் மூலம், உள்ளூர் தேவைகளை அறிந்து அதன் மூலம் சந்தையில் முன்னணியான மற்றும் விருது பெற்ற சிறந்த தயாரிப்புகளை உருவாக்குவதற்காக நிறுவனம் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. அர்த்தமுள்ள வரப்பிரசாதங்களை உருவாக்குவதன் மூலமும், நம்பகமான கூட்டாண்மைகளை வளர்ப்பதன் மூலமும்  சூழலுக்கு உகந்த உலகத்தை உருவாக்குவதன் மூலமும் அது நாடு முழுவதிலுமுள்ள சமூகங்களின் வாழ்க்கையை சென்றடைகிறது.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *