பெறுமதியான அந்நியச் செலாவணியை நாட்டிற்கு சேமிக்கும் தனது பயணத்தைத் தொடரும் பெல்வத்தை டெய்ரி

பல்வேறு வகையான பால் பொருட்களை உற்பத்தி செய்து பெறுமதியான அந்நியச் செலாவணியைச் சேமித்து வரும் இலங்கையின் முன்னணி உள்ளூர் பால் வர்த்தக நாமமான Pelwatte Dairy நிறுவனம், கொழும்பு 03 இல் உள்ள அதன் புதிய நிர்வாக அலுவலகத்தை திறந்து வைத்துள்ளது. அனைவராலும் நன்கு அறியப்பட்ட கொழும்பு 03, கொள்ளுப்பிட்டி, காலி வீதியில் அமைந்துள்ள மையப் பகுதியில் அனைவராலும் அணுகக் கூடிய இடத்தில் இந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.

அண்மையில் இடம்பெற்ற அதன் திறப்பு விழா நிகழ்வில் உரையாற்றிய பெல்வத்தை டெய்ரி நிறுவனத் தலைவர் ஆரியசீல விக்ரமநாயக்க, பால் உற்பத்தித் துறையில் தனது ஆரம்ப தொழில் முயற்சியை நினைவுகூர்ந்தார். “பெல்வத்தையை கட்டியெழுப்பும் போது, நான் எனக்காக வியர்வை சிந்தவில்லை, தமது உற்பத்திகளுக்கு நியாயமான விலை கிடைக்காமல் போராடும் எமது பால் பண்ணையாளர்களுக்காகவே பாடுபட்டேன். எமது விவசாயிகளுக்கு ஒரு சிறந்த வாழ்க்கைத் தரத்தை பெற்றுத் தருவதற்காக நான் உழைத்த வேளையில், ஒரு எளிய மற்றும் முக்கியமான தொலைநோக்கு பார்வையினால் உந்துதளிக்கப்பட்டேன். பால் உற்பத்தியில் இலங்கையை தன்னிறைவு அடையச் செய்வதும், நாட்டில் வெளிநாட்டு விநியோகங்களைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கும், அதன் மூலம் பெறுமதியான அந்நியச் செலாவணியைச் சேமிப்பதுமே அதுவாகும். இந்த தொலைநோக்குப் பார்வையால், நிறுவனம் வளர்ச்சியடையத் தொடங்கியது. மேலும் எமது உயர்தர பால் பொருட்கள் மற்றும் சந்தையில் போட்டித்தன்மை வாய்ந்த விலை நிர்ணயம் காரணமாக, பெல்வத்தை வர்த்தகநாமத்தினால் தொடர்ந்தும் முன்னேற முடிந்தது. Pelwatte Dairy Industry Ltd (PDIL) குடும்பத்தின் கடின உழைப்பு மற்றும் அதன் அர்ப்பணிப்பு ஆகியன நிறுவனத்தை மிக பலமான இடத்தை நோக்கி கொண்டு சென்றன. இதன் விளைவாக, பெல்வத்தை இன்று இலங்கையின் முன்னணி உள்ளூர் பால் வர்த்தக நாமமாக மாறியுள்ளது. பெல்வத்தை, அதன் வளர்ச்சிப் பாதையில் செல்லும் நேரத்தில் அதை மேலும் முன்னோக்கி செலுத்துவதற்காக அதன் இளம் ஊழியர்களை மேம்படுத்துவதில் அது கவனம் செலுத்துகிறது. அது போன்றே,, இன்றைய பெல்வத்தையில், பல முக்கிய செயற்பாடுகளை பெல்வத்தை குடும்பத்தின் இளைஞர்கள் முன்னெடுத்து வருவது தொடர்பில் நான் மகிழ்ச்சியடைகிறேன். பெல்வத்தையின் எதிர்காலம் இளைஞர்கள் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது” என்றார்.

பெல்வத்தை டெய்ரியின் முகாமைத்துவப் பணிப்பாளர் அக்மல் விக்ரமநாயக்க தெரிவிக்கையில்: “பெல்வத்தையை அதன் தற்போதைய தரத்திற்குக் கட்டியெழுப்வுவதற்காக வழங்கப்பட்ட கடின உழைப்பு மற்றும் பெல்வத்தை குடும்பத்தின் அர்ப்பணிப்பு இல்லாவிட்டால், அது இன்றைய நிலைக்கு வந்திருக்காது. பெல்வத்தையின் ஊழியர்களின் குழுவாக இயங்கும் தன்மை மற்றும் அவர்களது அர்ப்பணிப்பு காரணமாக, சில நேரங்களில் தங்களது வேலை நேரம் மற்றும் பாத்திரங்களுக்கு அப்பாற்பட்ட விடயங்கள் தொடர்பில் ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். குறிப்பாக எமது ஊழியர்களிடையே காணப்படும் அர்ப்பணிப்பு மற்றும் குழுவாக இயங்கும் தன்மையின் காரணமாக நாட்டில் கொவிட் முடக்கம் நிலவிய காலத்தில் அனைத்து பணிகளும் சுமூகமாக இடம்பெற்றன. பால் என்பது எல்லா வயதினரும் தினமும் பல முறை உட்கொள்ளும் ஒரு பொருளாகும். மேலும், வெவ்வேறு நுகர்வோர் பிரிவுகள், வெவ்வேறு கொள்வனவு முறைகளின் அடிப்படையில் பல்வேறு பால் பொருட்களுக்கான கோரிக்கைகள் காணப்படுகின்றன. இதன் விளைவாக, எமது தயாரிப்பு வகைகளில் உள்ள வெவ்வேறு தயாரிப்புகளை ஒவ்வொரு வாடிக்கையாளர் பிரிவுக்கும் பொருத்தமாக கொண்டு சேர்ப்பதே பெல்வத்தையின் வெற்றியை உறுதி செய்துள்ளது. இதில் எனது பங்காக, எமது தயாரிப்பு வகைகளுடன் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பொருந்தச் செய்யும் செயன்முறையை ஏற்படுத்த முடிந்ததுடன், எமது குழுவின் ஆதரவுடன் அதனை விநியோகிக்கவும் முடிந்தது. நாட்டின் முடக்க காலத்தில் பால் பொருட்களின் தேவை தொடர்ந்து அதிகரித்ததன் அவசியத்தை உணர்ந்து, உற்பத்தியின் அளவை உச்சபட்சமாக விரிவுபடுத்தி சந்தை தேவையை பூர்த்தி செய்வதில் நாம் வெற்றியடைந்தோம்.

Pelwatte Dairy நிறுவனத்தின் புதிய நிர்வாக அலுவலகம், இல 234, கொள்ளுப்பிட்டி, கொழும்பு 03 இல், அனைவராலும் நன்கு அறியப்பட்ட காலி வீதியிலிருந்து ஒரு திருப்பத்தில் அமைந்துள்ளது. கடந்த பெப்ரவரி 02 ஆம் திகதி இடம்பெற்ற அதன் திறப்பு விழா நிகழ்வில், பெல்வத்தை நிறுவனத்தின் பணிப்பாளர் சபையினர், விநியோகத்தர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் அதன் பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

ENDS

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *