SMART Micro-Irrigation Solutions உடன் உள்ளூர் விவசாயத் தொழில்துறையை மேம்படுத்தும் DIMO Agribusinesses

DIMO நிறுவனத்தின் விவசாயப் பிரிவான DIMO Agribusinesses ஆனது, நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் உள்ளடக்கியதாக, Micro-Irrigation Solutions மற்றும் protected cultivation systems முறைகள் உட்பட நவீன மற்றும் SMART தொழில்நுட்பங்களுடன் உள்ளூர் விவசாயத் துறையை மேம்படுத்துவதற்கு தற்போது முழுமையாகத் தயாராக உள்ளது.

DIMO Agribusinesses ஆனது, முன்னணி உலகளாவிய SMART Micro-Irrigation Solutions வழங்குநர்களான Rivulis மற்றும் Eurodrip உடன் இணைந்து, சில வருடங்களுக்கு முன்பு SMART Micro-Irrigation Solutions இனை நிறுவியது. Rivulis மற்றும் Eurodrip ஆகியன micro-irrigation solutions மற்றும் துணை மேற்பரப்பு மற்றும் மேற்பரப்பு நீர்ப்பாசன தொகுதிகளுக்கான துணைப் பாகங்களை வழங்குகின்றன. இதில் drip tapes, integral drip lines, online drippers, sprinklers, jets, lay flats, filters, valves, உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் fertigation உள்ளிட்ட பல்வேற தொழில்நுட்ப முறைகளும் உள்ளடங்குகின்றன.

உலகப் புகழ்பெற்ற SMART Micro-Irrigation Solutions வழங்குநர்களுடனான இந்த கூட்டுறவின் மூலம், DIMO Agribusinesses ஆனது, உகந்த விளைச்சலை உறுதி செய்யும் வகையில் தற்போது குறிப்பிட்ட பயிர் சார்ந்த நீர்ப்பாசனம் மற்றும் உரமிடுதல் முறைகளை வழங்குகிறது.

DIMO Agribusinesses இனது, விவசாய தொழில்நுட்ப பொது முகாமையாளர் பிரதீபா ஜயசிங்க இது தொடர்பில் தெரிவிக்கயைில், “SMART micro-irrigation systems விவசாயிகளுக்கு தங்களது உற்பத்தித்திறனை உரிய அளவில் நிர்வகிப்பதற்காக, துல்லியமான நீர்ப்பாசனம் மற்றும் உரமிடுதல் முறைகளை நிறுவுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. நீர் மற்றும் உர நுகர்வைக் குறைக்கும் தன்னியக்க நீர்ப்பாசனம் மற்றும் உரமிடுதல் முறைகள் போன்ற பல்வேறு தெரிவுகளை இது அவர்களுக்கு வழங்குகிறது. அத்துடன் தினசரி தாவரங்களின் தேவைக்கு அவசியமான நீர் மற்றும் உரமிடுதல், ஏற்படும் செலவுகள், குறைந்த தொழிலாளர் செலவுகள், நீர்ப்பாசன தொகுதிகளை அணுகும் திறன் மற்றும் பயிர் மீதான வானிலையின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் திறன் ஆகியவற்றை, எந்தவொரு இடத்திலிருந்தும் ஸ்மார்ட்போன் செயலி மூலம் மூலம் கட்டுப்படுத்தப்படலாம்.” என்றார்

“பல்வேறு விவசாயிகள் ஏற்கனவே ஸ்மார்ட் நுண்-நீர்ப்பாசன முறைகளை பயன்படுத்துகின்ற நிலையில், பலர் இந்த புதிய தொழில்நுட்பங்களைப் பின்பற்ற ஆர்வமாக உள்ளனர். உள்ளூர் விவசாயத் துறையின் ஒரு வளர்ச்சி பங்காளி எனும் வகையில் DIMO Agribusinesses ஆனது, அடுத்த தலைமுறை விவசாயத்தை நிலைபேறான வளர்ச்சிக்கு கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் இலங்கையின் விவசாய சமூகத்தின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளை ஊக்குவிக்கிறது” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

DIMO Agribusinesses ஆனது, நாடு முழுவதும் உள்ள அனைத்து புவியியல் பிரதேசங்களிலும் உள்ள விவசாய சமூகத்திலும் உள்ள எந்தவொரு விவசாயிக்கும் உதவுவதற்கு இணையற்ற நாடளாவிய ஆலோசனை மற்றும் பராமரிப்பு சேவைகளை கொண்டுள்ளது. DIMO Agribusinesses ஆனது, உலகளாவிய ரீதியில் சமீபத்தில் அங்கீகரிக்கப்பட்ட முழுமையாக 100% நீரில் கரையக்கூடிய உர வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறிப்பாக உரமிடுதல் தொகுதிகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

அனைத்து DIMO SMART micro-irrigation systems 3 வருட உத்தரவாதத்துடன் வருவதோடு, 8 தசாப்தங்களுக்கும் மேலான DIMO நிறுவன நம்பிக்கையின் ஆதரவை கொண்டுள்ளது.

END

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *