விஸ்வசரண அபிஷேகா விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட ‘சொலெக்ஸ்’ குழுமம்

ஸ்ரீ ஜயவர்தனபுர குண சமரு அறக்கட்டளையின் ஏற்பாட்டில் BMICH இல் நடைபெற்ற திலிண பூஜை – 21ஆவது கௌரவிப்பு நிகழ்வில், விஸ்வசரண அபிஷேகா விருது மூலம் இலங்கையின் பெருமைக்குரிய ‘சொலெக்ஸ்’ குழுமம் கௌரவிக்கப்பட்டது.

நான்கு தசாப்தங்களுக்கு மேலாக இலங்கையில் நீர் பம்பி உற்பத்தியில் முதல் இடத்தில் உள்ள Solex குழுமம், இலங்கை நுகர்வோரின் நம்பிக்கையை வென்றுள்ளது. இலங்கை முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் நட்புறவான மற்றும் பொறுப்பான சேவைகள் காரணமாக, ஸ்ரீ ஜயவர்தனபுர குண சமரு அறக்கட்டளையினால், நிறுவனமொன்றுக்கு வழங்கப்படக் கூடிய உயர் கௌரவத்தை Solex குழுமம் பெற்றுள்ளது. அவ்விருதானது, நிறுவனத்தின் நிறுவுனரும் அதன் தலைவரும், முகாமைத்துவப் பணிப்பாளருமான தேஷபந்து தேசகீர்த்தி லங்காபுத்ர உபாலி விஜயசிறிக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

ஓர் உண்மையான இலங்கை நிறுவனம் எனும் வகையில், Solex நிறுவனம் தனது சமூகப் பொறுப்புகளை எப்போதும் கவனத்தில் கொண்டு சமூகத்தின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அநுராதபுரம் புனித நகரம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு இடங்களில் யாத்திரிகர்கள் நலன் கருதி குளிர் நீர் முகாமைத்துவ தொகுதியை வழங்குதல், கதிர்காமத்தில் 600 குடும்பங்களுக்கு குடிநீர் பிரச்சினைக்கான தீர்வு, பின்னவல யானைகள் சரணாலயத்தில் அவ்விலங்குகள் குளிப்பதற்கான வசதியை ஏற்படுத்தல், பல்வேறு பிரதேசங்களில் குடிநீர் வழங்குவதற்கான நீர்த் திட்டங்களை நிர்மாணித்தல், தேசிய பாதுகாப்பின் பொருட்டு இலங்கை பொலிஸாருக்கு வீதித்தடை உபகரணங்கள் வழங்குதல் போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் போன்ற விடயங்கள், நிறுவனத்தின் தேசிய திட்டங்களில் சிலவாகும். 2023 ஆம் ஆண்டிற்காக, கிராமப்புறங்களுக்கும் சுகாதாரப் பாதுகாப்புத் துறைகளுக்கும் ஏராளமான பொது நீர் வழங்கல் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன.

தரம் மற்றும் புத்தாக்கமான Solex குழுமத்தின் அர்ப்பணிப்பு இலங்கையில் நீர் இறைக்கும் துறையில் மிகவும் நம்பகமான பெயர்களில் ஒன்றாக மாறியுள்ளது. இந்நிறுவனம் நீடித்த, நம்பகமான, திறனான நீர் பம்பிகளை உற்பத்தி செய்வதற்காக மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் அதிநவீன உற்பத்தி செயன்முறைகளைப் பயன்படுத்தி வருகிறது. Solex நிறுவனம் வழங்கும் தயாரிப்பு வகைகளளில், வீட்டு நீர் பம்பிகள், விவசாய நீர் பம்பிகள் மற்றும் நீரினுள் இயங்கும் பம்பிகள் (Submersible Pumps), ஜெட் பம்பிகள் (Jet Pumps), ஆள்துளை பம்பிகள் (Borehole Pumps), கழிவுநீர் பம்பிகள் (Sewage Pumps), தீயணைப்பு பம்பிகள் (Fire Pumps) மற்றும் தொழில்துறை வாகனங்கள் ஆகியன உள்ளடங்குகின்றன.

Solex குழுமத்தின் வெற்றிக்குப் பின்னால் உள்ள முக்கிய காரணிகளில் ஒன்று அது தனது வாடிக்கையாளர் திருப்தியில் கவனம் செலுத்துவதாகும். நிறுவனம் ஒரு பிரத்தியேக வாடிக்கையாளர் உதவிக் குழுவைக் கொண்டுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு விற்பனைக்கு முன், விற்பனையின் போது மற்றும் விற்பனைக்குப் பின்னரான உதவிகளை வழங்குகிறது. அது தவிர, Solex அதன் வாடிக்கையாளர்களுக்கு தொந்தரவுகள் அற்ற அனுபவத்தை வழங்கும் பொருட்டு, ஒரு விரிவான உத்தரவாதத்தையும், பராமரிப்புத் திட்டத்தையும் வழங்கி வருகின்றது.

இதேவேளை, Solex குழுமத்தின் உபதலைவியும் செயற்பாட்டுப் பணிப்பாளருமான தேசாபிமானி, தேசசக்தி மஞ்சுளா விஜயசிறியின் குறிப்பிடத்தக்க சாதனைகள் மற்றும் கடின உழைப்புக்காக, ஸ்ரீ ஜயவர்தனபுர குண சமரு அறக்கட்டளையினால் தேசமான்ய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

Solex குழுமத்தின் நிர்வாக பணிப்பாளரும் வர்த்தகநாம விஸ்தரிப்பு பணிப்பாளருமான டாக்டர். சந்தினி. எச். விஜயசிறி. MD, BSc (Premedical & Health Sciences) தேசமான்ய, தேசசக்தி, தேசாபிமானி, வியாபாரபூஷண, வித்யாபதி ஜனரஞ்சன கௌரவ விருதுகis ஸ்ரீ ஜயவர்தனபுர குண சமரு அறக்கட்டளையின் மூலம் கிராமப்புற சமூகங்களுக்கு தண்ணீர் விநியோகம் மற்றும் தூய்மையான குடிநீர் வழங்கல் போன்ற திட்டங்களை இளம் வயதிலேயே மேம்படுத்துவதற்கான அவரது முயற்சிகளுக்காக குறிப்பிட்ட கௌரவப் பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார். இவ்வேளையில் Solex நிறுவன அனைத்து குழுவினருக்கும் மீண்டுமொரு முறை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *