க.பொ.த. உயர் தர பரீட்சையின் பின்னர் அடுத்து என்ன செய்வது என்று நீங்கள் யோசிப்பீர்களேயானால் அல்லது உங்கள் தகுதிகளை மேம்படுத்தி (உங்கள் வாழ்க்கையில் எந்த வயதிலும் அல்லது நிலையிலும்) வேலை தேட முயற்சிக்க விரும்புகிறீர்களேயானால் அல்லது உங்கள் வாழ்க்கையை அடுத்த நிலைக்கு உயர்த்தத் திட்டமிடுகின்றீர்களேயானால், உங்களுக்கான அனைத்து தெரிவுகள், விருப்பங்கள், வாய்ப்புகளை அறிந்து கொள்ள, நீங்கள் EDEX Expo 2023 ஐப் பார்வையிட வேண்டும். கொழும்பில் உள்ள இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் (SLECC) பெப்ரவரி 24 – 26 வரையும் மார்ச் 04, 05 ஆம் திகதிகளில் கண்டியில் உள்ள கண்டி சிட்டி சென்டரிலும் (KCC) இக்கண்காட்சிகள் நடைபெறுகிறது.
EDEX என்பது இலங்கையின் மிகப்பெரிய, முன்னணி உயர்கல்விக் கண்காட்சி மற்றும் வேலைவாய்ப்பு கண்காட்சியாகும். இது இலங்கையில் உள்ள முன்னணி உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் பல முக்கிய வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் மூலம் வழங்கப்படும் பல்வேறு தெரிவுகள் மற்றும் வாய்ப்புகளை (தரம் மற்றும் அளவு ஆகிய இரண்டிலும்) கொண்டது என பெயர்பெற்றுள்ளது. சுமார் இரண்டு தசாப்தங்களாக “Empowering the Sri Lankan Youth to be Globally Competitive” (இலங்கை இளைஞர்களை உலகளாவிய ரீதியில் போட்டித்தன்மை மிக்கவர்களாக ஆக்குதல்) எனும் அதன் வாக்குறுதியை EDEX நிறைவேற்றி வருகிறது. அந்த வகையில் அது தனது 19ஆவது பதிப்பை 2023 இல் கொண்டாடுகிறது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட EDEX தலைவர் மஹிந்த கலகெதர, “தனது புத்தாக்கமான மற்றும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட ஒன்லைன் கல்விக் கண்காட்சியை அறிமுகப்படுத்தியதன் மூலம், கொவிட்-19 தொற்று மற்றும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் உள்ளூர் இளைஞர்களுக்கு டிஜிட்டல் நிகழ்வு அனுபவத்தை EDEX வழங்கியது. அந்த வகையில், 2022 மார்ச் மாதம் இலங்கையில் முதன்முறையாக ஒரு ஹைப்ரிட் கண்காட்சி மூலம் தனது இருப்பை EDEX வெளிப்படுத்தியது. தனது தொலைநோக்குப் பார்வைக்கு அர்ப்பணிப்பாக செயற்பட்டு, கல்விக் கண்காட்சித் துறையை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்வதில் அதன் நேரம், நிதி மற்றும் முயற்சியை அது தொடர்ச்சியாக முதலீடு செய்து வருகிறது” என்றார்.
இவ்வருடம் இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் (SLECC) நடைபெறும் EDEX Expo கண்காட்சி, மீண்டும் ஒரு முறை உள்நாட்டு மற்றும் அவுஸ்திரேலியா, ஜப்பான், பிரான்ஸ், துபாய், பாகிஸ்தான், இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் உள்ளடங்கிய பாரிய அளவிலான உயர்கல்வி நிறுவனங்களை கொண்டிருக்கும். EDEX Expo 2023 கண்காட்சியில் பிரத்தியேகமாக அனைத்து சாத்தியமான பங்கேற்பாளர்களுக்கும் 1,000 இற்கும் மேற்பட்ட புலமைப்பரிசில் உள்ளிட்ட பல்வேறு நன்மைத் திட்டங்களும் வழங்கப்படவுள்ளன.
EDEX Expo 2023 இல் இலங்கையின் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மூலம், அதே இடத்தில் நேர்முகப் பரீட்சைகள் மற்றும் உடனடி ஆட்சேர்ப்பு வாய்ப்புகளை வழங்குகின்ற வேலைவாய்ப்பு கண்காட்சியும் உள்ளடக்கப்பட்டிருக்கும். EDEX Careers தொழில் கண்காட்சியானது, மாணவர்கள் மற்றும் வேலை தேடும் அனைத்து வயதினருக்குமான (தொழில்துறை நிபுணர்களால் நடத்தப்படும்), சைக்கோமெட்ரிக் சோதனை (Psychometric Testing) வசதிகள் மூலம், அவர்கள் தங்களுக்கு ஏற்ற சிறந்த தொழில் பாதைகளைத் தீர்மானிக்க உதவியாக அமையும். அத்துடன் சவாலான நெருக்கடியான சூழ்நிலைகளைச் சமாளிக்க உள்ளூர் இளைஞர்களின் அபிலாஷைகளை ஒருங்கிணைக்கும் வகையிலான அவசியமான முக்கிய தலைப்புகளை உள்ளடக்கிய, முன்னணி தொழில் வல்லுநர்கள் மற்றும் விடயம் தொடர்பான நிபுணர்களால் நடத்தப்படும் பல்வேறு தொழில்சார் கருத்தரங்குகளும் இக்கண்காட்டசியில் இடம்பெறும்.
EDEX Entrepreneurship தொழில்முனைவோர் பிரிவினால், EDEX Expo 2023 உடன் இணைந்ததாக ‘Entrepreneurs Club’ (தொழில்முனைவோர் கழகம்) இனை அறிமுகப்படுத்தவுள்ளது. இது இலங்கை சமூகத்தில் காணப்படும் ஒரு முக்கியமான இடைவெளியைக் குறைக்கும் நோக்குடன், நாடு முழுவதிலுமிருந்து வளர்ந்து வரும் தொழில்முனைவோரை ஒன்றிணைக்கிறது. தற்போதைய பொருளாதார சவால்களை எதிர்த்துப் போராடுவதற்கு தொழில்முனைவோர் திறன்களைக் கொண்டிருக்க வேண்டிய இன்றியமையாத தேவைகளைக் கண்டறிந்து, இளம் தொழில்முனைவோரின் வணிக முன்மொழிவுகளை வெற்றிகரமாக வழிநடத்தவும், அவற்றை சிறப்பாக வடிவமைக்கவும், நாட்டின் முக்கிய மற்றும் அனுபவம் வாய்ந்த தொழில்முனைவோர்களால் நடத்தப்படும் தொடர் அமர்வுகளை EDEX ஏற்பாடு செய்துள்ளது.
இதில் கேமிங் வலயம் மற்றும் நாடு முழுவதும் உள்ள கிராமப்புற பாடசாலைகளில் தேவையுள்ள மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கும் ‘நெனபஹன’ காட்சிக் கூடம் உள்ளிட்ட பல்வேறு தனித்துவமான மற்றும் அற்புதமான அம்சங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. EDEX – Think Green இனால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள Sustainability Quiz (நிலைபேறான கேள்வி பதில்) போட்டியையும், EDEX Sithuwam சித்திரப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கும் நிகழ்வுகளையும் EDEX Expo 2023 கண்காட்சியில் நீங்கள் காணலாம்.
எனவே, நீங்கள் உயர்கல்வி, வேலை வாய்ப்புகள், தொழில்துறை பாதைகள், தொழில் முனைதல் உள்ளிட்ட எதைத் தேடுகின்றீர்களோ, அவை பற்றிய அறிவுரைகள், வழிகாட்டல்கள் மற்றும் புத்தக நன்கொடை வழங்கல், கேமிங் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை EDEX Expo 2023 கண்காட்சியில் அனுபவிக்கலாம் அல்லது இவை அனைத்தையும் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது!
END