17ஆவது PropertyGuru Asia Property Awards மாபெரும் நிகழ்வில் சிறந்த ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள், திட்டங்கள் கௌரவிப்பு

விருது பெற்ற டெவலப்பர்கள் குழு, விருதுகள் தொடரின் இறுதிப் போட்டிக்காக பெங்கொக்கில் கூடுகின்றனர்

தென்கிழக்கு ஆசியாவின் முன்னணி சொத்து தொழில்நுட்ப நிறுவனமான PropertyGuru Group (NYSE: PGRU) ஆனது, Kohler இனால் வழங்கப்படுகின்றதும் உலகின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்களால் ஆதரிக்கப்படுகின்றதுமான 17ஆவது வருடாந்த PropertyGuru Asia Property Awards மபெரும் இறுதி நிகழ்வில் ஆசியாவின் சிறந்த பிரதிநிதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பிராந்திய வெற்றியாளர்களை அறிவித்துள்ளது.

சீனாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி (ஹொங்கொங் மற்றும் மக்காவ்) Best Developer (ஆசியா) விருதை New World Development Company Limited பெற்றுக் கொண்டது. வடிவமைப்பு நடைமுறையில் Lead8 உடன் இணைந்து, 11 SKIES திட்டத்திற்காக Best Mega Mixed Use Development (ஆசியா) விருதையும் பெற்றது.

சீனாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி, Shougang Park Urban Weaving District திட்டத்திற்காக Best Retail Architectural Design(ஆசியா) விருதை Lead8 வென்றது. Benoy Limited  ஆனது, CRL MixC Qianhai திட்டத்திற்காக Best Mixed Use Architectural Design (ஆசியா) விருதை சீனாவை பிரதிநிதித்துவப்படுத்தி பெற்றது.

Aboitiz InfraCapital Economic Estates திட்டத்திற்காக Best Industrial Developer (ஆசியா) பட்டம் மற்றும் Global-Estate Resorts, Inc. (GERI) திட்டத்திற்காக Best Lifestyle Developer (ஆசியா) பட்டம் ஆகியவற்றை பெற்றதன் மூலம் ஏழு பிராந்திய வெற்றிகளை பிலிப்பைன்ஸ் பெற்றுக் கொண்டது. Aboitiz InfraCapital Economic Estates ஆனது LIMA Estate திட்டத்திற்காக Best Industrial Development (ஆசியா) மற்றும் Best Green Development (ஆசியா) ஆகிய விருதுகளையும் வென்றது.

AppleOne Mactan, Inc. ஆனது, Sheraton Cebu Mactan Resort இல் உள்ள குடியிருப்புகளுக்காக Best Branded Residential Development (ஆசியா) விருதை வென்றது. அதே சமயம், Sofitel Cebu City திட்டத்திற்காக Best Hospitality Architectural Design (ஆசியா) விருதை Cebu Landmasters, Inc. வென்றுள்ளது. Arquitectonica ஆனது, Mega Tower திட்டத்திற்காக Best Office Architectural Design (ஆசியா) விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Frasers Property Holdings (தாய்லாந்து) Co., Ltd. இனது One Bangkok (FPHT) திட்டத்திற்காக Best Landmark Mixed Use Development (ஆசியா) விருது உள்ளிட்ட ஏழு பிராந்திய வெற்றிகளை தாய்லாந்து பெற்றது. Magnolia Quality Development Corporation Limited ஆனது The Forestias இலுள்ள The Aspen Tree

இற்காக Best Condo Development  (ஆசியா) மற்றும் Best Health and Wellness Development(ஆசியா) ஆகிய இரண்டு விருதுகளை வென்றது. PMT Property Co., Ltd. ஆனது, Best Condo Interior Design (ஆசியா) மற்றும் Best Condo Landscape Architectural Design (ஆசியா) ஆகிய விருதுகளை 125 Sathorn திட்டத்திற்காக பெற்றது. Hongkong Land and Property Perfect PCL இனது Lake Legend Bangna-Suvarnabhumi திட்டத்திற்காக Best Waterfront Housing/Landed Development (ஆசியா) விருதையும், Jaytiya Property Co., Ltd இனது Jaytiya 2 Private Pool Villas Residence திட்டத்திற்காக Best Housing/Landed Landscape Architectural Design (ஆசியா) விருதையும் பெற்றுள்ளன.

இம்மாபெரும் இறுதி விருது நிகழ்வில் சிங்கப்பூர் ஆறு பிராந்திய வெற்றிகளைப் பெற்றது. GuocoLand ஆனது Best Luxury Developer (ஆசியா) மற்றும் Best Sustainable Developer (ஆசியா) விருதுகளையும் UOL Group Limited Best Hospitality Developer (ஆசியா) விருதிற்காகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளது. Pan Pacific Orchard திட்டத்திற்காக UOL Group Limited ஆனது Best Hotel Development (ஆசியா) விருதையும் வென்றுள்ளது.

Shun Tak Holdings இனது, Park Nova Best Condo Architectural Design (ஆசியா) விருதைப் பெற்றது. Artyzen Hospitality Group இனது Artyzen Singapore திட்டத்திற்கு Best Hospitality Interior Design (ஆசியா) விருது வழங்கப்பட்டது.

இந்தோனேசியாவும் ஆறு பிராந்திய விருதுகளுடன் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டது. இங்கு Best Township Development (ஆசியா) விருதை PT. Belaputera Intiland இனது Kota Baru Parahyangan பெற்றுக் கொண்டது. Best Township Masterplan Design (ஆசியா) விருதை Agung Sedayu Group & Salim Group இனது PIK2 Sedayu Indo City திட்டத்திற்கு வழங்கப்பட்டது.

Thamrin Nine Complex உள்ள Galeon Group இனது உறுப்பினரான PT Putragaya Wahana நிறுவனத்தின் Autograph Tower இற்கு Best Office Development (ஆசியா) விருது வழங்கப்பட்டது. KSO PT Adhi Commuter Properti Tbk. மற்றும்  PT Urban Jakarta Propertindo Tbk இனது LRT City Jatibening திட்டத்திற்கு Best Connectivity Condo Development (ஆசியா) விருது வழங்கப்பட்டது. PT Metropolitan Land Tbk இன் துணை நிறுவனமான PT Fajarputera Dinasti இனது Metland Cibitung திட்டமானது Best Connectivity Housing/Landed Development (ஆசியா) விருது வென்றது. LOGOS Indonesia இனது LOGOS Cikarang Logistics Park திட்டத்திற்கு Best Green Industrial Development (ஆசியா) விருதுக்கு தெரிவு செய்யப்பட்டது.

Spacious Group இற்கான Best Boutique Developer (ஆசியா) விருது உள்ளிட்ட ஐந்து பிராந்திய வெற்றிகளை அவுஸ்திரேலியா பெற்றது. SPG Land இனது Paradiso Place திட்டமானது, Best Smart Building Development (ஆசியா) மற்றும் Best Integrated Work From Home Development (ஆசியா) ஆகிய இரு விருதுகளை வென்றது. Dare Property Group ஆனது, Zero Gipps இற்காக Best Eco Friendly Commercial Development (ஆசியா) விருதையும் The Archwood Residences திட்டத்திற்காக Mayrin Group ஆனது Best Housing/Landed Architectural Design (ஆசியா) விருதையும் வென்றுள்ளன.

Keppel Land இற்காக Best Mixed Use Developer (ஆசியா) விருது உள்ளிட்ட நான்கு பிராந்திய வெற்றிகளை வியட்நாம் பெற்றது. CapitalLand Development (வியட்நாம்) இனது Sycamore திட்டம் Best Housing/Landed Development (ஆசியா) மற்றும் Best Eco Friendly Housing/Landed Development (ஆசியா)

ஆகிய விருதுகளை வென்றது. Gamuda Land இனது Artisan Park திட்டம் Best Retail Development (ஆசியா) விருதை பெற்றது.

Greater Niseko விலுள்ள, Blue Waves Group இனது Andaru Collection Niseko திட்டத்திற்கு Best Completed Housing/Landed Development (ஆசியா) மற்றும் Best Housing/Landed Interior Design (ஆசியா) ஆகிய இரண்டு விருதுகளையும் வென்றது. H2 Group இனது HakuVillas ஆனது Best Completed Condo Development (ஆசியா) விருதை வென்றது.

கம்போடியா மற்றும் மலேசியா ஆகியன தலா இரண்டு பிராந்திய வெற்றிகளைப் பெற்றன. Best Breakthrough Developer (ஆசியா) விருதை Kambujaya Development Co., Ltd பெற்றது. Best Waterfront Condo Development (ஆசியா) விருதை The Peninsula Capital Co., Ltd இனது Vue Aston பெற்றதோடு, KL Wellness City Sdn Bhd இனது KL Wellness City திட்டம் Best Mixed Use Development (ஆசியா) விருதை பெற்றது. Infinity Group நிறுவனத்தின் Infinity8 Reserve JBCC ஆனது Best Co-Working Space (ஆசியா) விருதை வென்றது.

Embassy TechVillage – Central Garden இற்கு Best Commercial Landscape Architectural Design (ஆசியா) விருதை Embassy REIT வென்றதன் மூலம் இந்தியாவும் மாபெரும் இறுதிப்போட்டியில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டது.

Ciputra குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் PT Ciputra Development Tbk இன் தலைவர்/ பணிப்பாளர் Candra Ciputra, PropertyGuru Icon விருதைப் பெற்றார்.

PropertyGuru Asia Property Awards & Events இனது பொது முகாமையாளர் Jules Kay இதன்போது கருத்து வெளியிடுகையில் , “PropertyGuru Asia Property Awards மாபெரும் இறுதி நிகழ்வின் வெற்றியாளர்கள் தமக்குரிய சொத்து சந்தைகளின் பன்முகத்தன்மை, முன்னேற்றம் மற்றும் நெகிழ்வுத்தன்மை ஆகியவற்றைப் பொருத்தமாகப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். சிறிய குடியிருப்புகள் முதல் பரந்த ஒருங்கிணைந்த திட்டங்கள் வரையிலான திட்டங்களுடன், இவ்விருதுகளை பெற்ற இத்திட்டங்களானவை, ஆசியாவிலேயே சிறந்த திட்டங்கள் எவ்வாறு இருக்கும் என்பதற்கான ஒரு சிறிய எடுத்துக்காட்டை வழங்குகின்றன. மாபெரும் நிகழ்வுகள் மூலம் மேடையில் கொண்டாடப்பட்டாலும் சரி, அல்லது ஒன்லைன் மூலம் உலகிற்கு நிகழ்வை வழங்கினாலும் சரி, இவ்விருதைப் பெற்றவர்கள் ஆசிய ரியல் எஸ்டேட்டில் உயர் தரமான Gold Standard இற்கு இணையாக பிரகாசிக்கிறார்கள். எமது பிராந்திய மாபெரும் இறுதி நிகழ்வில் அறிவிக்கப்பட்ட வெற்றியாளர்களே – உங்கள் அனைவரினதும் வெற்றியை நாம் கொண்டாடுகிறோம். வாழ்த்துகள்.” என்றார்.

2021 இல் வெற்றிகரமாக இடம்பெற்ற ஒன்லைன் நிழ்வைத் தொடர்ந்து இடம்பெறும் இம்மாபெரும் இறுதி நிகழ்வின் சமீபத்திய பதிப்பானது, கறுப்பு டை இரவு விருந்து (black-tie gala dinner) மற்றும் விருது வழங்கல் மூலம் மீண்டும் அதன் முழு வடிவத்திற்கு திரும்பியதை சுட்டிக் காட்டுகின்றது.

HLB International Real Estate Group இனது Paul Ashburn இனது தலைமையிலான, அனைத்து தெரிவு செய்தல் செயன்முறைகளிலும் நேர்மை, வெளிப்படைத்தன்மை, நம்பகத்தன்மையை நிலைநிறுத்துவதில் முன்னணி சர்வதேச கணக்கியல் மற்றும் ஆலோசனை நிறுவனம் முன்னின்று செயற்பட்டது.

2005 ஆம் ஆண்டில் தாய்லாந்தில் ஆரம்பிக்கப்பட்ட PropertyGuru Asia Property Awards திட்டமானது, பல ஆண்டுகள் கடந்து தற்போது 18 சொத்து சந்தைகளுக்கு விரிவடைந்துள்ளது. PropertyGuru Asia Property Awards நிகழ்ச்சித் தொடர் ஆனது, ஆசிய பசுபிக் முழுவதும் உள்ள சிறந்த ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள், கட்டடக் கலைஞர்கள், உள்ளக வடிவமைப்பாளர்களுக்கான ஒரு சர்வதேச தளத்தை அதன் நேரடி மற்றும் ஒன்லைன் விருது நிகழ்வுக் கொண்டாட்டங்கள் மூலம் வழங்கியுள்ளது.

மேலதிக தகவலுக்கு, உத்தியோகபூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்:  AsiaPropertyAwards.com.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *