5G இலிருந்து 6G செல்ல 5.5G அவசியம்: Huawei நிறுவனத்தின் Dr. Wen Tong

அடுத்த தலைமுறை கையடக்கத் தொலைபேசி வலையமைப்புகள் (Next Generation Mobile Networks – NGMN) கூட்டணியினால் நடத்தப்பட்ட 2022 தொழில்துறை மாநாடு மற்றும் கண்காட்சி (Industry Conference & Exhibition- IC&E) இல், ‘Bridging 5G to 6G’ (5G இலிருந்து 6G இற்கான பாலம்) எனும் தலைப்பில் Huawei நிறுவனத்தைச் சேர்ந்த, Huawei Wireless இன் CTO ஆன Dr. Wen Tong ஒரு முக்கிய உரையை நிகழ்த்தினார். அவர் தனது உரையில், 5G ஆனது 6G ஆக பரிணமிப்பதற்காக உதவக் கூடிய உந்து சக்திகள் மற்றும் திட்டங்கள் தொடர்பில் விளக்கினார். இந்த பரிணாமத்தை ஏற்படுத்த, 5.5G எனும் ஒரு அத்தியாவசியமான படி அவசியாகும் என்று அவர் இதன்போது குறிப்பிட்டார்.

புதிய திறன்களை வழங்க 5G இலிருந்து 5.5G இற்கு புதிய சேவைகள் செயற்படுத்துகின்றன

உலகம் முழுவதும் 5G தற்போது வளர்ச்சியடைந்து வருகிறது. இதில் ஒவ்வொரு 10 ஆயிரம் பயனர்களுக்கும் சராசரியாக 40 அடிப்படை வலையமைப்பு நிலையங்கள் கிடைக்கின்றன. சீனாவில், 5G ஆனது 30 இற்கும் மேற்பட்ட நேரடி தொழில்துறைகளுக்கு சேவை செய்கின்றன. 2021 ஆம் ஆண்டில் 1.3 ட்ரில்லியன் டொலர் பெறுமதியான பொருளாதார உற்பத்தியை அது நேரடியாக உருவாக்கியுள்ளது. வளர்ந்து வரும் 2C மற்றும் 2B மென்பொருள்களுக்கு 5G திறன்களில் மேலும் முன்னேற்றங்கள் அவசியமாகும். இது 5.5G இற்கான பரிணாம தேவையை உருவாக்குகிறது. இது மேம்படுத்தப்பட்ட மொபைல் புரோட்பேண்ட் (eMBB), ultra-reliable low-latency communication (URLLC), Massive Machine-Type Communications (mMTC) ஆகியவற்றின் மேம்பாடுகள் மற்றும் sensing, passive IoT, positioning, intelligence ஆகியவற்றுக்கான புதிய திறன்களால் வரையறுக்கப்படுகிறது. இவற்றின் மூலம், 5.5G ஆனது 10 Gbps தரவிறக்க வேகம், 1 Gbps தரவேற்ற வேகத்தையும், 100 பில்லியன்-மட்ட இணைப்புகள், சார்பு நுண்ணறிவு, 5G யின் புதிய பயணத்தை ஆதரிக்கும்.

10 Gbps தரவிறக்க வேகத்தை பெற Ultra-high Bandwidth அவசியம்

மீயுயர் அலைவரிசை (Ultra-high Bandwidth) ஆனது, போதுமான அலைப்பட்டை மூலம் (spectrum) மாத்திரமே சாத்தியமாகும். மேலும் இது sub-100 GHz மூலாதாரங்களை முழுமையாகப் பயன்படுத்த வேண்டிய அவசரத் தேவையை எடுத்துக்காட்டுகிறது. தற்போதுள்ள 100 MHz FDD மற்றும் 100 MHz TDD spectrum pools உடன் 6 GHz அலைவரிசையின் 200 முதல் 400 MHz அலைவரிசையையும், mmWave இன் 800 MHz அலைவரிசையையும் இணைப்பதன் மூலம், எந்த நேரத்திலும் எல்லாப் பயனர்களுக்கும் 10 Gbps தரவிறக்க வேகத்தை கொண்டு வர முடியும்.

Multi-Band Convergence இற்கான Uplink-Downlink Decoupling ஆனது தரவேற்றத்தின் 1 Gbps இனது அடிப்படையைக் கொண்டது

தொழில்துறை டிஜிட்டல் மயமாக்கலுக்கு, டவுன்லிங்கை விட அப்லிங்க் மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்க வேண்டும். Uplink-Downlink Decoupling (பிரிப்பு) மூலம், வெவ்வேறு பேண்டுகளில் உள்ள Uplink மற்றும் Downlink ஸ்பெக்ட்ரம் 2B ஐ ஆதரிக்கும் வகையில் நெகிழ்வாக இணைக்கப்படலாம். இதில் ஏற்கனவே இருக்கும் FDD ஸ்பெக்ட்ரம் மற்றும் புதிதாக வரையறுக்கப்பட்ட uplink-only ஸ்பெக்ட்ரம் ஆகியவை அடங்குகின்றன. uplink/downlink decoupling மூலம், ஸ்பெக்ட்ரம் ஒருங்கிணைப்பினால், 1 Gbps அப்லிங்கை உறுதி செய்ய முடியும்.

இன்றுவரை, சுரங்கம், உருக்கு உள்ளிட்ட பல்வேறு தொழில்துறைகளில் uplink-downlink decoupling ஆனது, வணிகமயமாக்கப்பட்டு ஒரே நேரத்தில் 100-channel HD வீடியோக்கள், 360° ரிமோட் கண்ட்ரோல் உள்ளிட்ட ஏனைய 2B மென்பொருட்களுக்கு 1 Gbps அப்லிங்கை உறுதி செய்கிறது.

Dr. Wen Tong மேலும் தெரிவிக்கையில், “5.5G ஆனது, 5G இலிருந்து 6G இற்கு இணைப்பை ஏற்படுத்தும். 5.5G மற்றும் 6G ஆகியன பௌதீக உலகத்தை டிஜிட்டல் மற்றும் அறிவார்ந்த உலகங்களுடன் இணைப்பதற்கான அடிப்படையாக இருக்கும்” என்றார். அவர் தனது உரையில் இறுதியாக தெரிவிக்கையில், “கையடக்கத் தொலைபேசி தொழில்துறையின் வெற்றியானது, ஒருங்கிணைக்கப்பட்ட தரப்படுத்தல் மற்றும் தொழில்துறை ஒத்துழைப்பைச் சார்ந்துள்ளது. 5.5G இற்கு கூட்டாக முன்னேறி, நிலைபேறான எதிர்காலத்திற்கான தொழில்நுட்ப முதிர்ச்சியை துரிதப்படுத்துவதற்கான ஒத்துழைப்பை நாம் வலுப்படுத்துவோம்.” என்றார்.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *