தங்க நகை உலகின் முடிசூடா மன்னராக திகழும் ராஜா ஜுவலர்ஸ், 2022 பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இலங்கை மல்யுத்த வீராங்கனை நெத்மி அஹின்சாவை அண்மையில் சந்தித்தது. ராஜா ஜுவலர்ஸ் எப்பொழுதும் இலங்கை சமூகத்தோடு இணைந்து பயணிக்கும் ஒரு நிறுவனம் எனும் வகையில், பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளின் மல்யுத்த விளையாட்டில் நாட்டிற்கு முதலாவது பதக்கத்தை ஈட்டிக் கொடுத்த நெத்மியின் பாரிய வெற்றியானது உண்மையில் கொண்டாடப்பட வேண்டிய ஒரு பெருமையான தருணமாகுமென தெரிவித்துள்ளது.
ராஜா ஜுவலர்ஸ் சமீபத்தில் அறிமுகப்படுத்திய பிரசார திட்டமானது ‘You are a Diamond’ (நீ ஒரு வைரம்) எனும் கருப்பொருளைக் கொண்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், நெத்மி அஹின்சாவுக்கு ரூ. 750,000 பெறுமதியான வைர பதக்கமும் காதணியும் பரிசாக வழங்கப்பட்டது. நெத்மியின் வெற்றிக்கு காரணமான அவரது மதிப்புமிக்க பயிற்சியாளரான சுரங்க குமாரவின் அளப்பரிய முயற்சிகளையும் மறக்காது, ராஜா ஜுவலர்ஸ் சுரங்கவுக்கு பணப் பரிசு வழங்கி அவரை பாராட்டியது. “You are a Diamond” பிரசார திட்டமானது இவ்வருடம் (2022) சர்வதேச மகளிர் தினத்தின் போது ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதனுடன் இணைந்தவாறு நேர்த்தியான வைர தயாரிப்பு வெளியீடும் இடம்பெற்றது. நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட இந்நகைகள் வாடிக்கையாளர்களை தங்களை தைரியமாக அழகுபடுத்த அனுமதிக்கிறது. இலங்கையில் உள்ள உண்மையான வைரங்களை கண்டுபிப்பதற்காக, தமது திறமைகளை உயர்த்துவதற்கான ஆதரவு தேவைப்படுவோருக்காக, இந்த பிரசார திட்டத்தை ராஜா ஜுவலர்ஸ் வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தின் போதுதான் இளம் மற்றும் திறமையான நெத்மி எனும் உண்மையான வைரத்தை நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.
இந்த முக்கிய தருணத்தில் கருத்து தெரிவித்த ராஜா ஜுவலர்ஸின் முகாமைத்துவ பணிப்பாளர் அத்துல எலியபுர, “உண்மையான இலங்கை வர்த்தகநாமம் எனும் வகையில், இலங்கை சமூகத்தின் எதிர்காலத்திற்கு ஆதரவாக நாம் எப்போதும் துணையாக இருந்து வருகின்றோம். சமீபத்தில் நிறைவடைந்த பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் நெத்மி மற்றும் சுரங்கவின் வெற்றி உண்மையில் முழு நாட்டிற்கும் ஒரு உத்வேகமாகும். தங்களது சாதனை பயணங்களை மேம்படுத்துவதற்கு அவசியமான வசதிகள் மற்றும் ஆதரவற்ற திறமையான இலங்கையர்கள் ஏராளமாக இருக்கின்றனர் என்பதை நாம் நிச்சயமாக நம்புகிறோம். சக இலங்கையர்கள் தங்களது அபிலாஷைகளை அடைவதற்கும் வைரம் போல் பிரகாசிக்கவும் நாம் அவர்களுக்கு ஆதரவளிக்க எதிர்பார்த்துள்ளோம்” என்றார்.
பல தசாப்தங்களாக இலங்கையின் தங்க நகைத் துறையில் மிகவும் சாதனை படைத்த நிறுவனங்களில் ஒன்றாக ராஜா ஜுவலர்ஸ் மாறியுள்ளது. அதன் தூய கைவினைப்பொருட்கள் உள்நாட்டிலும் உலகெங்கிலும் புகழ் பெற்றவையாக விளங்குவதோடு, அது வெளியிடும் பல வகையான நகைகள் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பொருத்தமானதாக காணப்படுகின்றது. மிகச்சிறந்த இரத்தினக்கற்கள், சிர்கோன்கள் (Zircon), சுத்திகரிக்கப்பட்ட தங்கம் ஆகியவற்றைப் பயன்படுத்தி, தனித்துவமான அலங்காரத்துடனான, காலத்தால் அழியாத படைப்புகளை அவர்கள் உருவாக்குகிறார்கள். ராஜா ஜுவலர்ஸ் நிறுவனம் நிறுவப்பட்டதிலிருந்து நம்பிக்கை, சிறப்பான சேவை, தனித்துவமான கைவினை தாயரிப்பு நகைகளை வழங்குதல் ஆகியவற்றின் மூலம் வாடிக்கையாளர்களுடன் நீடித்த உறவை பேணி வருகின்றது.
ராஜா ஜவலர்ஸின் பரந்துபட்ட தயாரிப்புகளை பார்வையிட: www.rajajewellers.com
END