இலங்கையின் முன்னணியில் உள்ள பல்வகைப்பட்ட கூட்டு நிறுவனமான DIMO, Tata Motors Limited உடன் இணைந்து, உள்நாட்டில் ஒன்றிணைக்கப்பட்ட (assembled) DIMO Batta HT2 வாகனங்களின் முதல் தொகுதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இலங்கையின் வாகனத் துறையில் ஒரு மைல்கல்லைக் குறிக்கும் வகையில், இலங்கையில் ஒன்றிணைக்கப்பட்ட முதலாவது சிறிய வகை வர்த்தக வாகனத்தை அறிமுகப்படுத்துவதில் DIMO பெருமை கொள்கிறது. நாளாந்தம் 3 முதல் 4 வாகனங்கள் எனும் உற்பத்தித் திறன் கொண்ட வெலிவேரியவிலுள்ள களஞ்சிய மையத்தில் உள்ள DIMO வாகன ஒன்றிணைத்தல் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட, உள்நாட்டில் ஒன்றிணைக்கப்பட்ட DIMO Batta HT2 வாகனங்களின் முதல் தொகுதி, அண்மையில் வாடிக்கையாளர்களிடம் கையளிக்கப்பட்டது.
DIMO நிறுவனத்தின் தலைவரும் அதன் முகாமைத்துவப் பணிப்பாளருமான ரஞ்சித் பண்டிதகே, DIMO Batta HT2 வாகன அறிமுகம் தொடர்பில் கருத்துத் வெளியிடுகையில், “எந்தவொரு வகையான பொருளாதாரத்தின் வளர்ச்சியிலும் வாகனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தாம் சேவை வழங்கும் சமூகங்களின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளை ஊக்குவிப்பதற்கு எப்பொழுதும் முன்னிற்கும் ஒரு நிறுவனம் எனும் வகையில், முதன்முறையாக உள்நாட்டில் ஒன்றிணைக்கப்பட்ட DIMO பட்டா வாகனங்களை அறிமுகப்படுத்தும் இந்த நம்பமுடியாத மைல்கல்லை எட்டுவதில் நாம் பெருமிதம் கொள்கிறோம்.” என்றார்.
நாட்டில் 100,000 இற்கும் மேற்பட்ட வாகனங்கள் ஏற்கனவே பல இலங்கையர்களின் அன்றாட வாழ்க்கையை மேம்படுத்துவதில் பங்களித்து வரும் நிலையில், DIMO Batta HT2 மாத்திரமே அவ்வகையிலுள்ள வாகனங்களில் ஒரு லீற்றருக்கு 18 முதல் 22 கிலோமீற்றர் வரையான எரிபொருள் பாவனைச் சிக்கனத்தைக் கொண்ட ஒரே வணிக வாகனமாக உள்ளது. இது உச்சபட்ச சேமிப்பையும் அதிக இலாபத்தையும் அதன் உரிமையாளர்கள் பெற வழிவகுக்கிறது. இதே வகை வாகனங்களுடன் ஒப்பிடும்போது இது மிகக் குறைந்த பராமரிப்புச் செலவைக் கொண்டுள்ளது என்பதுடன், 10,000 கி.மீ. இற்கு ஒரு தடவை எனும் வழக்கமான சேவை இடைவெளியையும் கொண்டுள்ளதனால், வாடிக்கையாளரின் நேரத்தையும் செலவையும் அது மீதப்படுத்துகிறது. 7.2 அடி நீளம், 5 அடி அகலம், 1 அடி உயரம் கொண்ட பெரிய பொருட்கள் ஏற்றி இறக்கல் வசதி கொண்ட வாகன உடலையும் கொண்டுள்ள இந்த வாகனம், சாரதி உள்ளிட்ட 2 பேர் அமரக்கூடிய ஸ்டைலாக வடிவமைக்கப்பட்ட, வசதியான சாரதி அறையைக் கொண்டுள்ளது. அது தவிர, நேர்த்தியான ஸ்டைலான முன்புற ஒளிவிளக்குகள் (head lamp) மற்றும் மேம்பட்ட துல்லியத்திற்காக டிஜிட்டல் மீற்றரையும் (odometer) கொண்டுள்ளது. மிக முக்கியமாக, இவை 2 வருடங்கள் அல்லது 60,000 கி.மீ. எனும் நம்பகமான உத்தரவாதத்துடன் வருகின்றன.
இலங்கையின் வாகனத் துறையில் முன்னோடி எனும் வகையில், இலங்கையில் Tata வாகனங்களுக்கான ஒரே அங்கீகரிக்கப்பட்ட பொது விநியோகஸ்தரான DIMO நிறுவனம், Tata Motors இன் ஆதரவுடன் தனது வாடிக்கையாளர்களுக்கு உயர்தர தயாரிப்புகளை வழங்குவதற்கான நிபுணத்துவத்துடன் சிறந்த தயார் நிலையில் உள்ளது.
DIMO வின் விற்பனைக்குப் பின்னரான சேவைகள் மற்றும் Retail வணிக பிரிவை மேற்பார்வையிடும், DIMO நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் விஜித பண்டார இது தொடர்பில் தெரிவிக்கையில், “வாகனத் துறையில் எமது நிபுணத்துவம் மற்றும் Tata Motors யிடமிருந்து எமக்குக் கிடைத்த அபரிமிதமான ஆதரவுடன், உள்நாட்டில் ஒன்றிணைக்கப்பட்ட முதலாவது DIMO Batta HT2 வாகனத்தை வெளியிடுவதற்கு எம்மால் முடிந்துள்ளது. எமது மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு அதிநவீன சேவையை வழங்கும் பொருட்டு, எமது விற்பனைக்குப் பிந்தைய செயல்பாடுகளை வலுப்படுத்துவது தொடர்பில் நாம் தொடர்ந்தும் கவனம் செலுத்தி வருகிறோம்.” என்றார்.
DIMO நிறுவனத்தின் பொறியியல் நிபுணத்துவம் மற்றும் 8 தசாப்தங்களுக்கும் மேலான நம்பிக்கையின் ஆதரவுடன், DIMO நிறுவனம் நாடு முழுவதும் உள்ள 16 இடங்களில் அதன் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு ஒப்பிடமுடியாத விற்பனைக்குப் பிந்தைய சேவையையும், 500 இற்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களில் உதிரிப் பாகங்கள் கிடைக்கும் வகையிலும் அதன் சேவைகளை முன்னெடுத்து வருகிறது.
END