Huawei APAC Digital Innovation Congress: டிஜிட்டல் ஆசிய பசிபிக்கிற்கான புத்தாக்கம்

Huawei மற்றும் ASEAN Foundation இணைந்து ஒழுங்கு செய்துள்ள Huawei APAC Digital Innovation Congress (Huawei APAC டிஜிட்டல் புத்தாக்க மாநாடு), டிஜிட்டல் புத்தாக்கங்களின் எதிர்காலம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தை ஆராயும் வகையில், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள 10 இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 1,500 இற்கும் மேற்பட்ட அரசாங்க அதிகாரிகள், நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள், கூட்டாளர்கள், ஆய்வாளர்களின் பங்கேற்புடன் அண்மையில் இடம்பெற்றது. தகவல் தொடர்பாடல் தொழில்நட்பத்தில் (ICT) இடம்பெற்று வரும் முன்னேற்றங்கள், தொழில்துறைகள் முழுவதும் டிஜிட்டல் மாற்றத்தை விரைவுபடுத்துதல் மற்றும் பசுமையானதும் குறைந்த காபன் உருவாக்கமும் உள்ளிட்ட விடயங்கள் இங்கு ஆராயப்பட்டன.

Huawei இன் சுழற்சிமுறை தலைவர் Ken Hu தனது ஆரம்ப உரையின் போது கருத்துத் தெரிவிக்கையில், “ஆசிய பசிபிக் பிராந்தியமானது, உலகின் கலாசார மற்றும் பொருளாதார ரீதியாக உயிர்ப்பான பிராந்தியங்களில் ஒன்றாகும். இது நீண்ட காலமாக உலகப் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்து வருவதோடு, தற்போது டிஜிட்டல் கண்டுபிடிப்பில் அதற்கு ஈடான முக்கிய பங்கை வகிக்கிறது,” என்றார். பல APAC நாடுகள் டிஜிட்டல் மாற்றத்தை ஒரு மூலோபாய கொள்கை நிலைக்கு உயர்த்தியுள்ளதுடன் துடிப்பான வகையில் பசுமையை நோக்கிச் செல்கின்றன.

“APAC இல் Huawei ஆழமாக வேரூன்றியுள்ளது. நாம் 30 வருடங்களுக்கும் மேலாக எமது வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து வருகிறோம். அத்துடன் பிராந்தியத்தில் டிஜிட்டல் மேம்பாட்டை ஆதரிப்பதில் நாம் பெருமிதம் கொள்கிறோம். இவ்வாறு  நாம் முன்னோக்கிச் செல்லும்போது, ​​பிராந்தியத்தில் உள்ள எமது கூட்டாளர்களைச் சந்திக்க உதவுவதற்காக, புத்தாக்கங்களில் அதிக அளவில் முதலீடு செய்வோம். அவர்களின் மூலோபாய வளர்ச்சி இலக்குகள். 2022 இல், டிஜிட்டல் உட்கட்டமைப்பு, குறைந்த கார்பன் மேம்பாடு மற்றும் டிஜிட்டல் உள்ளடக்கத்தை மேம்படுத்துவதன் மூலம் பசுமை மற்றும் டிஜிட்டல் APAC இற்கான எமது ஆதரவை அதிகரிப்போம்.”

ASEAN Foundation யின் நிர்வாகப் பணிப்பாளர் Yang Mee Eng இதன்போது உரையாற்றுகையில், “ஒரு வலுவான டிஜிட்டல் திறமையாளர்களைக் கொண்ட குழுவினால் மாத்திரமே அனைத்தையும் உள்ளடக்கியதும் நெகிழ்வானதுமான டிஜிட்டல் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தை அடைய முடியும். Huawei APAC Digital Innovation Congress 2022 ஆனது, ASEAN Foundation-Huawei கூட்டாண்மையில் அமைந்த மற்றுமொரு முக்கியமான மைல்கல்லைக் குறிக்கிறது. இப்பிராந்தியத்தில் டிஜிட்டல் திறன் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு உதவுகின்ற திறன் மேம்பாட்டை மையமாகக் கொண்ட கற்றல் சூழல் தொகுதியை இது தொடர்ச்சியாக உருவாக்குகிறது.” என்றார்.

இப்பிராந்தியத்தில் டிஜிட்டல் புத்தாக்கம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான யுத்திகள்

ASEAN Digital Masterplan 2025 யினை நோக்கிய முன்னேற்றத்தை கோடிட்டுக் காட்டி பேசிய, ASEAN பொருளாதார சமூகத்திற்கான பிரதிப் பொதுச்செயலாளர் சத்வீந்தர் சிங், தொற்றுநோய் எவ்வாறு டிஜிட்டல் மாற்றத்தின் வேகத்தை துரிதப்படுத்தியது என்பது பற்றிய தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். “ASEAN யில், கொவிட்-19 தொற்றுநோய் ஆரம்பித்ததில் இருந்து, 60 மில்லியன் புதிய டிஜிட்டல் நுகர்வோர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். அதன் மூலம் சுமார் 400 மில்லியன் இணையப் பயனர்களுடன் ஆசியான் மூன்றாவது பெரிய இணையத் தளமாக மாறியுள்ளது. ASEAN டிஜிட்டல் வருமானமானது 2025 ஆம் ஆண்டுக்குள் 363 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டுமென எதிர்பார்க்கப்படுகிறது. டிஜிட்டல் மாற்றத்திற்கு ASEAN யில் டிஜிட்டல் மாற்றங்களின் முழுத் திறனை உணர்வதற்கு தனியார் துறை உள்ளிட்ட பல பங்குதாரர்களிடமிருந்து வலுவான ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் அவசியமாகும்.” என்றார்.

ஆசிய பசிபிக் டிஜிட்டல் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு Huawei எவ்வாறு துணைபுரிகிறது

APAC யில் காணப்படும் ஏராளமான டிஜிட்டல் வாய்ப்புகள் தொடர்பில் உரையாற்றிய, Huawei யின் ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் தலைவர் Simon Lin, நிறுவனத்தின் நோக்கமான “ஆசிய-பசிபிக்கில், ஆசிய-பசிபிக்கிற்காக” என்பது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், “இதன் கீழ் ஆசிய பசிபிக்கில் டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஒரு முக்கிய பங்களிப்பாளராக இருப்பதை Huawei உறுதிபூண்டுள்ளது. அத்துடன், அதன் வாடிக்கையாளர்கள் மற்றும் கூட்டாளர்களுடன் இணைந்து சிறந்த பசுமையான டிஜிட்டல் வாழ்க்கை முறையை அது உருவாக்குகிறது.” என்றார்.

லின் மேலும் தெரிவிக்கையில், “ஒரு முன்னணி மற்றும் பசுமையான உட்கட்டமைப்பை தன்னகத்தே ஆசிய பசிபிக் கட்டியெழுப்பிக் கொள்ளவும், ஒரு செழிப்பான தொழில்துறை சூழலை உருவாக்கவும், அனைத்தையும் உள்ளடக்கியதும் நிலைபேறானதுமான ஆசிய பசிபிக்கை மேம்படுத்தவும் Huawei எதிர்பார்க்கிறது.” என்றார்.

லின் இனது கருத்துக்கு அமைய, ஆசிய பசிபிக் நாடுகளில் 90 மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்களுக்கும் ஒரு பில்லியன் மொபைல் பயனர்களுக்கும் Huawei உலகத்துடனான இணைப்பை வழங்கியுள்ளது. வளர்ந்து வரும் ஆசிய பசிபிக் சந்தையில் Huawei இன் IaaS சந்தைப் பங்கு 4ஆவது இடத்தைப் பிடித்துள்ளதுடன், பசுமையான எதிர்காலத்திற்கான வலுசக்தி டிஜிட்டல் மயமாக்கலை செயல்படுத்துவதற்காக டிஜிட்டல் மற்றும் சக்தி இலத்திரனியல் தொழில்நுட்பங்களை Huawei ஒருங்கிணைத்து வருகிறது.

ஆசிய பசிபிக் பிராந்தியத்தில், சுமார் 10,000 நிறுவனங்கள் மற்றும் கிளவுட் கூட்டாளர்களுடன் Huawei கூட்டாண்மைகளை நிறுவியுள்ளது. Spark தொடக்கத் தொகுதியில் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்ய அது திட்டமிட்டுள்ளது. Huawei அதன் கூட்டாளர்களுடன் இணைந்து, டிஜிட்டல் திறமையாளர்களை மேம்படுத்தும் வகையில் உள்நாட்டிலுள்ள 170,000 பேருக்கு பயிற்சி அளித்துள்ளது. அத்துடன் டிஜிட்டல் பொருளாதாரத்தை முன்னோக்கி செலுத்தக்கூடிய திறமையான சூழல் தொகுதியை உருவாக்குவதற்கான அதன் முயற்சிகளின் ஒரு பகுதியாக, 5 வருடங்களுக்குள் மேலும் 500,000 பேருக்கு டிஜிட்டல் பயிற்சிகளை அளிக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்நிகழ்வானது, டிஜிட்டல் உட்கட்டமைப்பில் புதிய புத்தாக்கங்களை மையமாகக் கொண்ட 4 தொழில்துறை அமர்வுகளை கொண்டிருந்தது. Intelligent Campuses, Full-stack Data Centers, Digital Power, Cloud (அறிவார்ந்த பல்கலை வளாகங்கள், முழு-ஸ்டாக் தரவு மையங்கள், டிஜிட்டல் வலு, கிளவுட்) ஆகியனவே அவையாகும். Intelligent Campus அமர்வில், எளிமைப்படுத்தப்பட்ட பல்கலை வளாக வலையமைப்புகள் மற்றும் FTTO/FTTM சூழ்நிலைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பல்கலை வளாக சூழ்நிலைகளுக்கான தீர்வுகளை Huawei வெளியிட்டிருந்தது. அத்துடன் அதன் வாடிக்கையாளர்கள் மற்றும் கூட்டாளர்களின் சமீபத்திய சாதனைகள் மற்றும் சிறந்த நடைமுறைகளையும் அது இதன்போது பகிர்ந்து கொண்டது. Cloud அமர்வில், GaussDB எனும் ஒரு புதிய கிளவுட் சேமிப்பக தரவுக்களஞ்சியம் மற்றும் DevCloud எனும் மிகத் திறனான மென்பொருள் மேம்பாட்டிற்கான, அனைத்து அம்சங்களையும் கொண்ட தனியான அமைப்பாகிய DevOps போன்ற புதிய தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளை Huawei வெளியிட்டிருந்தது.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *