Counterpoint Research இன் மாதாந்த சந்தை விபர சேவையின் பிரகாரம், சீனாவில் ஸ்மார்ட்போன் சந்தையின் 2022 ஆம் ஆண்டின் Q1 இன் கீழ் நோக்கிய போக்கை கருத்தில் கொள்ளும் போது vivo 20 வீத சந்தைப் பங்குடன் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. V மற்றும் Y தொடர்கள் உட்பட அதன் தயாரிப்புகள் வரிசைக்கு கிடைத்த நேர்மறையான சந்தை வரவேற்பே இந்த நிலைக்கு வித்திட்டுள்ளது.
ஸ்மார்ட் சாதனங்கள் மற்றும் அறிவார்ந்த சேவைகளை அதன் மையமாக கொண்டு, vivo வலுவான வளர்ச்சி வேகத்தைக் தக்கவைத்தது. Counterpoint Research இன் பிரகாரம் 2021 ஆம் ஆண்டில் 22 வீத சந்தைப் பங்குடன், vivo சீன ஸ்மார்ட்போன் சந்தையில் முதலிடத்தைப் பிடித்தது.
உலகளாவிய விரிவாக்கத்துடன், தற்போது வரை, vivo அதன் விற்பனை வலையமைப்பை 60 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் வியாபித்துள்ளதுடன், உலகளவில் 400 மில்லியனுக்கும் அதிகமான பாவனையாளர்களால் விரும்பப்படுகிறது.