On-Premise Huawei Cloud Solutions Stack யினை அறிமுகப்படுத்தும் Dialog Enterprise

Dialog Axiata PLC இன் பெருநிறுவன தீர்வுப் பிரிவான Dialog Enterprise ஆனது, On-Premise Huawei Cloud (Hybrid Cloud) தீர்வுகளை உருவாக்குவதற்கான தனது விருப்பத்தை அறிவித்துள்ளது. அதற்கமைய இது தொடர்பாக Dialog Hybrid Cloud இல் சேவை வழங்குவதற்கான ஒப்பந்தங்களில் ThinkCube System (Pvt) Limited உடன் கையெழுத்திட்டுள்ளதுடன், இலங்கையில் Hybrid Cloud வணிக மேம்பாட்டுக்காக  MillenniumIT ESP உடனும் அது கைச்சாத்திட்டுள்ளது.

மே 2022 முதல் கிடைக்கும் Dialog Hybrid Cloud சேவையானது, இலங்கையிலிருந்து தேவையற்ற வகையில் தரவுகள் வெளியேறுவதை தடுத்து, உள்ளூர் நிறுவனங்கள் பொது கிளவுட் சேவைகளைப் பயன்படுத்த வழி வகுக்கும்.

Dialog Enterprise, Dialog Axiata PLC குழுமத்தின் Chief Enterprise Officer நவீன் பீரிஸ் இது தொடர்பில் தெரிவிக்கையில், “டிஜிட்டல் கிளவுட் அடிப்படையிலான தீர்வுகளை சிறந்த முறையில் வழங்குதல் மற்றும் எமது வாடிக்கையாளர்களின் புவியியல் ரீதியான தடுப்புச் சுவருக்கான தேவைகளை நிர்வகித்தல் போன்ற எமது தூரநோக்கிற்கு ஏற்ப, இந்த Hybrid Cloud Solution ஆனது, தரவுப் பாதுகாப்பு தொடர்பில் எமது கிளவுட் மூலோபாயத்திற்கு புதிய போட்டித்தன்மையை வழங்கும். இது குறிப்பாக எமது சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு (SMBs) பொருத்தமானதாக இருக்கும். கடல் கடந்து செல்லும் தரவுகள் குறைவு என்பதாலும், கிளவுட் பயணத்தை அதிகரிப்பதற்காக Dialog Enterprise இன் தற்போதைய சேவை வழங்கல்களுடன் சிறந்த உற்பத்தி, விரிவான டிஜிட்டல் கிளவுட் அடிப்படையிலான கருவிகளை வழங்குவதால், இது சிறிய மற்றும் நடுத்தர வணிகங்களுடன் தொடர்புடைய தரவுப் பாதுகாப்பை மேம்படுத்துகிறது.” என்றார்.

வன்பொருள், சேமிப்பகம், சேர்வர்களில் மூலதன முதலீடுகளைச் செய்வதற்குப் பதிலாக, நிறுவனங்கள் தங்களுக்கு தேவைப்படும்போது கிளவுட் வளங்களைப் பயன்படுத்தவும், தேவையான சேவைகளுக்காகவும் வளங்களுக்காகவும் மாத்திரம் அவற்றுக்கான கட்டணத்தை செலுத்தவும் முடியும். பொது கிளவுட்டில் இருக்கும் அதே தரநிலைப்படுத்தல், சுய-சேவை, ஆட்டோமேஷன் மற்றும் பகுப்பாய்வு திறன்களை உறுதிசெய்து, இரு தரப்பு கூட்டாண்மையின் மூலம் நிறுவனங்களால் கோரப்படும் வாடிக்கையாளர்களுக்கான பாதுகாப்பான தனியார் க்ளவுட் சேர்வர்கள், சேமிப்பகம் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட நிறுவன, தனியார் மற்றும் அல்லது பொது க்ளவுட் தீர்வுகளை வழங்குகிறது.

ThinkCube System (Pvt) Ltd பணிப்பாளர் தமித காரியவசம் இது தொடர்பில் தெரிவிக்கையில், “உள்ளூரில் தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பைப் பராமரித்தல், அதிக CAPEX/OPEX செலவுகள் மற்றும் உலகளவில் கிடைக்கும் வளர்ந்து வரும் டிஜிட்டல் சேவைகளின் வகைகள் ஆகியன Dialog on-premise பொது க்ளவுட் தேவையில் வந்து நிற்கிறது. எமது சேவைகளை Dialog Hybrid Cloud இற்கு மாற்றுவதில் நாம் மகிழ்ச்சியடைவதோடு, எமது மூலதனத்தை சேமிக்கும் அதே வேளையில் எமது முக்கிய வணிகத்தில் கவனம் செலுத்துவதன் மூலம் எமது சேவைத் தரத்தை மேம்படுத்த முடியும் என்பது தொடர்பில் நாம் மகிழ்ச்சியடைகிறோம்” என்றார்.

ThinkCube ஆனது, பழைய தேடல் முறைகளைச் செம்மைப்படுத்தி, சிறந்த வாழ்க்கைக்கான சிறந்த கருவிகளை வழங்குவதால், தடைகளை கடக்க அவசியமான தொழில்நுட்பம் மற்றும் கருவிகளை வழங்குவதற்காக செயற்படுகிறது. எளிமையான வார்த்தைகளில் சொல்வதானால், ThinkCube ஆனது, உலகத்தைத் தாண்டிச் செல்ல உதவும் க்ளவுட் டிஜிட்டல் சேவைகளை உருவாக்குவதில் நம்பிக்கை கொண்டுள்ளது.

Caption –

Dialog Axiata PLC பணிப்பாளர்/ குழுவின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்க (இடது), Huawei Sri Lanka CEO லியாங் யீ உடன் Huawei Cloud Partnership ஒப்பந்தத்தை பரிமாறிக்கொள்கிறார்.
Dialog Axiata PLC பணிப்பாளர்/ குழுவின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்க (இடது), MillenniumIT ESP பணிப்பாளர்/ CEO ஷெவான் குணதிலகவுடன் Huawei Cloud கூட்டு ஒப்பந்தத்தை பரிமாறிக் கொள்கிறார்.
Dialog Axiata PLC பணிப்பாளர்/ குழுவின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்க (இடது), ThinkCube System (Pvt) Ltd பணிப்பாளர், தமித காரியவசம் உடன் Huawei Cloud Partnership ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்றார்.
Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *