அடிப்படைகளுக்கு அப்பால் செல்லுதல்! AI இனால் இயக்கப்படும் துணைக்கருவிகளாக மாறியுள்ள ஸ்மார்ட்போன்கள்

ஸ்மார்ட்போன்கள் மாறிவரும் நுகர்வோர் கண்ணோட்டத்துக்கு ஏற்ற விதமாக காலவோட்டத்தில் வேகமாக முன்னேறி, இன்று நம் கைகளில் எடுத்துச் செல்லும் பல்பயன்பாட்டு சாதனங்களாக பரிணமித்துள்ளன. போன்கள் பொக்கெட்டில் அல்லது பணப்பையில் எடுத்துச் செல்ல முடியாத அளவுக்குப் பெரியதாக உருவாக்கப்பட்ட காலங்கள் அல்லது இந்த பெரிய சாதனத்தால் குறைந்த தரமான படங்களை மட்டுமே எடுக்க முடிந்தமை நினைவிருக்கிறதா? . முற்காலத்தில் மொபைல் போன்களின் ஒரே நோக்கம், பயணத்தின் போது மற்றவர்களுடன் பேசுவதாகும். மேலும், நாள் முழுவதும் பாவனையாளர்களுக்கு அவர்களின் பெரும்பாலான பணிகளுக்கு உதவுவதற்கும் பெரிய பற்றரிகளை கொண்டிருந்தன. விரைவில், படங்களைக் கிளிக் செய்யும் திறன் மற்றும் பிற வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அப்போதிருந்து, ஸ்மார்ட்போன் பாவனையாளர்கள் ஒருபோதும் ஒரு ஸ்மார்ட்போன் வாங்கும் போது அவர்கள் விரும்பும் மற்றும் தேவைப்படுவதில் சமரசம் செய்து கொள்ளவில்லை.

ஸ்மார்ட் கெமராக்களின் அறிமுகத்திற்கு பின்னர் தொழில்சார்-தரமான படங்களை இப்போது பொக்கெட் அளவிலான சாதனங்களில் பிடிக்க முடிகின்றது. AI மூலம்  இயங்கும் ஸ்மார்ட் அம்சங்கள் ஸ்மார்ட் போன்கள் சுற்றுச்சூழலை துல்லியமாக அடையாளம் காணவும், இரைச்சலை நீக்குதல், ஒளியை சரிசெய்தல், பொருளைக் கூர்மைப்படுத்துதல் மற்றும் பிரேமில் உள்ள தேவையற்ற அல்லது மங்கலான கூறுகளை அகற்றுவதன் மூலம் தானாகவே புகைப்படங்களை மேம்படுத்தவும் உதவுகிறது. ஸ்மார்ட்போன் பின்னணியை பகுப்பாய்வு செய்து அடையாளம் காணவும், நபர்களையும் பொருட்களையும் அடையாளம் காண செயற்கை நுண்ணறிவு வழிமுறையைப் பயன்படுத்துகிறது.

உலகளாவிய தொழில்நுட்ப வர்த்தகநாமமான vivo, “வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட புத்தாக்கம்” இனை நோக்கிய அதன் அர்ப்பணிப்புடன், AI கெமரா தொழில்நுட்பத்தை அவர்களின் கட்டுப்படியாகும் மற்றும் உயர் தர ஸமார்ட்போன் தொடர்களில் வழங்குவதன் மூலம் முன்னணியில் உள்ளது. AI கெமரா படிமுறையானது பொருளினை பின்னணியில் இருந்து வேறுபடுத்தி Sunset, Macro, Landscape, Portrait மற்றும் பல உள்ளமைக்கப்பட்ட முன்னமைக்கப்பட்ட காட்சிகளை வழங்குகிறது. அவை ஒளி மற்றும் பிற காரணிகளின் அடிப்படையில் புத்திசாலித்தனமாக சுற்றுச்சூழலைக் கணித்து, அதற்கேற்ப அமைப்புகளைச் செயல்படுத்தி, பாவனையாளர்களை சரியான தருணத்தை ஒரே முறையில் படம் பிடிக்க உதவுகின்றன.

ஸ்மார்ட்போன் பிரியர்களின் இதயங்களைக் கவர்ந்த உந்த சாதனத்தின் அற்புதமான கெமரா மற்றும் வடிவமைப்பு அம்சங்களுக்காக இந்த உலகளாவிய ஸ்மார்ட்போன் வர்த்தகநாமம் அடிக்கடி செய்திகளில் இடம்பெறுகின்றது. அனைத்து vivo ஸ்மார்ட்போன்களும் அதன் அழகிய வடிவமைப்பு மற்றும் நேர்த்தியான அம்சங்களின் அடிப்படையில் நிலைத்து நிற்கின்றன.

vivo இந்த நேர்த்தியான வடிவமைப்பிற்கு முன்னோடியாக உள்ளதுடன், சிறந்த தொழில்நுட்பங்கள் மெல்லிய மற்றும் ஸ்டைலான வடிவமைப்பினுள் பொருத்தப்பட்டிருப்பதை உறுதி செய்கிறது. 2012 ஆம் ஆண்டில் vivo,  X1 இனை வெளியிட்ட போது உலகின் மெல்லிய ஸ்மார்ட்போன் அதுவே. அதன் தடிமன் 6.55mmமட்டுமே. மேலும், Hi-Fi quality audio chip இனைக் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போனும் அதுவே. மேலும் வெறும் 4.75mm தடிமனான X5Max  இனை 2014 இல் வெளியிட்டதுடன், இன்று வரை உலகின் மிக மெல்லிய ஸ்மார்ட்போன் அதுவே.

இத்தகைய சுவாரஸ்யமான கண்ணோட்டங்கள், நம்பமுடியாத அம்சங்கள் மற்றும் வியக்க வைக்கும் வடிவமைப்புகளுடன், vivo நிச்சயமாக அவர்களின் சாதனங்கள் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்த வர்த்தகநாமம் இனிமேல் மேல் நோக்கியே பயணிக்கும்!

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *