5G, Cloud, AI ஒத்துழைப்பு மூலம் எவ்வாறு டிஜிட்டல் மயமாக்கலை விரைவாகக் கண்காணிக்க முடியும் என்பதைப் பற்றி ஆராய ICTA வின் National Digital Consortia வில் இணையும் Huawei

புத்தாக்கமான தொழில்நுட்பங்கள் மற்றும் உலகளாவிய சிறந்த நடைமுறைகள், பொருளாதாரங்களை டிஜிட்டல் மயமாக்குவதற்கான விரைவான வழியை செயல்படுத்துவது தொடர்பான விடயங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக, கடந்த ஜனவரி 11 ஆம் திகதி National Digital Consortia (தேசிய டிஜிட்டல் கூட்டமைப்பில்) Huawei பங்கேற்கிறது. FITIS, SLASSCOM, BCS, CSSL உடன் இணைந்து இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவரான (ICTA) மூலம் National Digital Consortia ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வு பன்னாட்டு நிறுவனங்கள், உள்ளூர் வணிகங்கள், உள்ளூராட்சி அமைப்புகளுக்கு இடையே உறவுகளை கட்டியெழுப்புவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதுடன், முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களை இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்கு அவர்களை ஊக்குவிக்கிறது.

உலகின் முன்னணி ICT தொழில்நுட்ப வழங்குநர்களில் ஒருவரான Huawei, உலகளாவிய தொழில்நுட்பம் மற்றும் ICT தொழில்துறையில் உள்ள போக்குகள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்கள் பற்றிய சமீபத்திய புதுமையான தீர்வுகள், சேவைகள் மற்றும் பகிரப்பட்ட உள்ளார்ந்த விடயங்களை வழங்குவதற்காக, உயர் மதிப்பைக் கொண்ட உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களுடன் கைகோர்த்து ‘National Digital Consortia’வில் இணைகிறது.

இந்த அமர்வின் போது, ICTA உடன் இணைந்து இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தின் போக்கிற்கான அறிவு, நிபுணத்துவம் மற்றும் தொழில்துறை அறிவு ஆகியவற்றை ​Huawei வழங்குகிறது. தொழில்நுட்ப வெளியில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போக்குகளைப் பகிர்ந்துகொள்வதன் மூலம், இலங்கையில் உள்ள பங்காளிகளுடன் உள்ளூர் தொழில்நுட்ப தொகுதியை மேம்படுத்துவதற்கான ஒத்துழைப்பை Huawei எதிர்பார்க்கிறது.

இன்று நாம் வாழும் உலகில், தொழில்நுட்பம் நாம் நினைத்ததை விட வேகமாக வளர்ந்து வருகிறது. 5G, cloud, AI போன்ற டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் தொடர்ந்து அவற்றின் எல்லைகளை நோக்கி தள்ளப்பட்டு, அவற்றின் பாய்ச்சலில் முன்னேறி வருகின்றன. இந்தப் பின்னணியில், ‘National Digital Consortia’ நிகழ்வில் தொழில்நுட்பத் துறையில் உள்ள வணிகங்கள், அரச நிறுவனங்கள், கல்வியாளர்கள், முன்னணி தொழில்நுட்ப ஆர்வலர்கள், ICT சகாப்தத்தில் அதிநவீன கண்டுபிடிப்புகளை ஆராய ஆர்வமுள்ள ICT மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

டிஜிட்டல் மாற்றத்திற்கான ICT திறன் அபிவிருத்தி

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்திற்கு ஆதரவளிக்கும் Huawei இன் சமீபத்திய முயற்சிகள் குறித்து கருத்து வெளியிட்ட, Huawei Sri Lanka நிறுவனத்தின் உப தலைவர் இந்திக டி சொய்சா, கடந்த இரண்டு வருடங்களில் நிறுவனம் Huawei Asia Pacific Academy என பெயரிடப்பட்ட, ICT திறமையாளர்களை வளர்ப்பதற்கான முயற்சியை பாரிய அளவில் விரிவுபடுத்தியுள்ளது. இதன்படி, டிஜிட்டல் சமூகத்தில் அறிவுப் பரிமாற்றத்தை மேம்படுத்துதல், தொலைத்தொடர்பு துறையில் அதிக புரிதலையும், ஆர்வத்தையும் ஊக்குவித்தல், பிராந்திய உறுதிப்பாடு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துதல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் விழிப்புணர்வு, ICT தொழிற்பயிற்சி, இலங்கை பல்கலைக்கழகங்களுடன் இணைந்து கூட்டு புத்தாக்க கண்டுபிடிப்புகள் ஆகிய 3 விடயங்களில் Huawei கவனம் செலுத்துகிறது.

அதனடிப்படையில், “உள்ளடக்கிய டிஜிட்டல் மலர்ச்சிக்கான திறமையாளர்களின் தொகுதியை வளர்த்தல்” எனும் நோக்கத்துடன், டிஜிட்டல் திறமையாளர்களின் இடைவெளிகளை நிரப்புவதற்கும், இலங்கையில் கொவிட் தொற்றுநோய்க்குப் பிந்தைய பொருளாதார மீட்சியில் டிஜிட்டல் மாற்றத்தை எளிதாக்குவது தொடர்பான கூட்டு முயற்சிகளை ஆராய்வதற்காக, இன்றைய உலகில் உள்ள அனைத்து ICT தொழில்நுட்பங்களையும் உள்ளடக்கிய Huawei இன் சான்றளிப்பு திட்டத்தின் கீழான வன்பொருள் நிறுவல் திறன்களுடன் தொலைத்தொடர்பு துறையில் இளைஞர்களுக்கான தொழிற்கல்வி மற்றும் பயிற்சியை மேம்படுத்துகின்ற மிகப்பெரிய Huawei ICT Academy மற்றும் புத்தாக்க ஆய்வகம், மொரட்டுவை பல்கலைக்கழகத்தில், NAITA-Huawei ICT Academy, போன்ற பல்வேறு முன்முயற்சிகளை Huawei அறிமுகம் செய்துள்ளது. மேலும், Huawei இன் முதன்மையான பெருநிறுவன சமூகப் பொறுப்பு (CSR)  நிகழ்ச்சித் திட்டமான Seeds For The Future திட்டமானது, இலங்கையில் உள்ள 74 பல்கலைக்கழக திறமையாளர்களுக்கு பயனளித்துள்ளதுடன், அதனை 7ஆவது ஆண்டாக 2022 இல் முன்னெடுக்கவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இத்திட்டமானது தற்போது இலங்கையின் ICT மற்றும் கல்வித் துறையில் வருடாந்த அடையாளம் மிக்க திட்டமாக மாறியுள்ளதுடன், இது இலங்கையின் கல்வி அமைச்சின் ஒத்துழைப்புடன் Huawei யினால் மேற்கொள்ளப்படுகிறது.

சொய்சா மேலும் தெரிவிக்கையில், “நாட்டில் டிஜிட்டல் மாற்றத்திற்கு தேவையான எதிர்கால திறமையாளர்களை வளர்ப்பதற்காக, Huawei எதிர்வரும் 5 வருடங்களில் இலங்கையில் ரூ. 600 மில்லியனை முதலீடு செய்ய அர்ப்பணித்துள்ளது.” என்றார்.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *