தடையின்றி வீட்டிலிருந்து வேலையை மேற்கொள்வதற்கு உதவும் சமீபத்திய Huawei சாதனங்கள் தற்போது இலங்கையில்

உலகளாவிய ஸ்மார்ட்போன் வர்த்தக நாமமான Huawei, இலங்கையில் உள்ள அனைத்து அலுவலர்களும் தங்கு தடையின்றி வீட்டிலிருந்து வேலை (WFH) அனுபவத்தை பெறும் வகையிலான பல்வேறு சாதனங்களை அண்மையில் அறிமுகப்படுத்தியது. WFH ஆனது, பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, எதிர்கால நிறுவன நடவடிக்கைகளின் பாதையாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்ப அடிப்படை கண்டுபிடிப்புகளின் பயன்பாடானது, அடுத்த தலைமுறை வணிக வேகத்தை தொடர்ச்சியாக ஊக்குவித்து வருகிறது. அத்துடன் Huawei ஒரு புகழ்பெற்ற நிறுவனம் எனும் வகையில், தடையின்றிய இணைப்பு மற்றும் பயனர் அனுபவத்தின் மூலம் எதிர்காலத்திற்கு எப்போதும் தயார் நிலையிலுள்ள வணிகத்தை செயல்படுத்தும் தொகுதிக்குள் இணைந்து செயற்படுகின்றது.

Huawei Matebook X Pro 2021 உயர்நிலை மடிகணனி, Huawei MateView Monitor, Freebuds 4 மற்றும் Matepad 11 டெப்லட் உள்ளிட்ட வீட்டிலிருந்து பணிக்கான (WFH) தீர்வுகளுக்கு அத்தியாவசியமான குறிப்பிடத்தக்க தேவைகளை நிறைவேற்றும் பல புதிய தயாரிப்புகளை Huawei அறிமுகப்படுத்தியுள்ளது.

Huawei நுகர்வோர் வர்த்தகக் குழுமத்தின் இலங்கைக்கான தலைவர் பீட்டர் லியு தெரிவிக்கையில், “தொடக்க நிறுவனம் அல்லது சிறிய, நடுத்தர, பாரிய நிறுவனமாக இருந்தாலும், அனைத்து அளவிலான வணிக நடவடிக்கைகளிலும் நுகர்வோருக்கு புத்தாக்கங்களைத் Huawei தொடர்ந்து வழங்கி வருகிறது. எமது நுகர்வோர் தயாரிப்புகள் மற்றும் சேவைகள், எந்தவொரு பணித் தர நிலையையும் மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. குறிப்பாக இலங்கையிலுள்ள பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் காலத்தின் போது இது முக்கிய இடத்தை பிடித்துள்ளது. எமது வலுவான சேவை மற்றும் தீர்வு வழங்கல்கள் அனைத்தும் விவேகமான வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்வதற்கும் அவர்களை மேலும் பலப்படுத்தி, உலகத்துடன் இணைக்கப்பட்ட அடுத்த தலைமுறையினராக அதனை அனுபவிக்கவும், Huawei இன் புத்தாக்கமான தீர்வுகளை அவர்களின் பணியிடத் தேவையின் வளர்ச்சிக்காகவும் பயன்படுத்த உதவுகின்றன.

அனைத்து Huawei தயாரிப்புகளையும் போலவே, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட தயாரிப்புகளின் வரிசையும் Huawei பயனர்களின் பல்வேறு தேவைகளுக்கு ஏற்ப பல அம்சங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது. Huawei Matebook X Pro 2021 ஆனது, ஆச்சரியமூட்டும் முழுத் திரையுடனான திரையை (Full View display) கொண்டுள்ளதுடன், பிரமிக்க வைக்கும் தோற்றத்துடன், தூக்கி செல்ல மிக இலகுவான வகையிலும் (ultra-portability) நாள் முழுவதும் மின்கல ஆயுளை தக்கவைக்கும் வகையிலும் தயாரிக்கப்பட்டுள்ளது. மிக ஆவலூட்டும் வகையிலான பார்க்கும் அனுபவத்தை வழங்க 13.9 அங்குல முழுத் திரை மற்றும் 3K high-definition துல்லிய காட்சித் தரத்தையும் அது கொண்டுள்ளது. 1.33 கிலோகிராம் எனும் மிகக் குறைந்த எடையுள்ள இது, 14.6 மி.மீ தடிப்பத்தை கொண்டுள்ளது. Huawei Matebook Pro 2021 ஆனது, தொழில்துறை சார்ந்தவர்கள் தேடும் மிகவும் இலகுவாக எடுத்துச் செல்லக் கூடிய வகையிலான மடிகணனியாகும். செயல்திறனைப் பொறுத்தவரை, அதன் 11th Gen Intel® Core™ processor மற்றும் அதன் 16GB LPDDR4x சேமிப்பகமானது, செயல்திறனை திறன்பட வழங்குகிறது. குறிப்பாக கேமிங், வீடியோ எடிட்டிங் போன்ற தினசரி தொழில்முறை பணிகளுக்கான, நோக்கங்களை நிறைவேற்றும் வகையிலானதாக அது அமைந்துள்ளது.

புதிய Huawei Mate Pad 11 ஆனது, மேம்பட்ட தொடுதிரை வசதி, மேம்படுத்தப்பட்ட Huawei M-Pencil ஆகியவற்றுடன், ஒரு விரிவான டெஸ்க்டாப் அனுபவத்தை வழங்கும் வகையிலான, ஒரு டெப்லெட் PC இன் தடையற்ற செயல்பாடுகளை மீள் வரையறை செய்கிறது. டெப்லெட்டின் பிரமிக்க வைக்கும் தோற்றம், வட்டமான விளிம்புகளுடன் வடிவமைக்கப்பட்டு, பயனர்களின் கைகளில் மிக லாவகமாகவும் மிகவும் வசதியான உணர்வையும் வழங்குகிறது. மிக இலகுவாக எடுத்துச் செல்லக் கூடிய இச்சாதனம் 120Hz  முழுத் திரையுடன் வருகிறது. இணையத்தில் உலாவுதல், ​​விளையாடுதல், வீடியோக்களைப் பார்வையிடல் போன்ற ஒவ்வொரு வேளையிலும், ஒரு புதுமையான பார்வை அனுபவத்தை அது வழங்குகிறது.

Huawei Freebuds 4 ஆனது, இசையுடன் இன்னும் அதிகமாக மூழ்கும் வகையில், இரைச்சலை நீக்குவதில் (active noise cancellation) புதிய உயத்தை அடைந்துள்ளதுடன், காது ஒலியை கேட்க விரும்பும் அளவை தானாக அறியும் தொழில்நுட்பத்தையும் இணைத்து,  சிறந்த ஒலி அனுபவத்தை வழங்குகிறது. காதினுள் திறந்த வகையில் சிறப்பாக பொருந்தும் (open-fit design) வடிவமைப்பானது, காற்று அழுத்தத்தை சமமாக பேணும் அதே நேரத்தில் வெளிச்சூழல் ஒலிகளை அதிகளவில் கேட்க முடிவதை உறுதிசெய்கிறது. நீண்ட நேர பயன்பாட்டிற்குப் பிறகும் பாதுகாப்பான மற்றும் வசதியான அணியும் அனுபவத்தை அது தொடர்ந்தும் வழங்குகிறது.

புதிய Huawei MateView Monitor ஆனது, நிறுவனத்தின் புத்தாக்க உயிர் நாடி உணர்வை  வெளிப்படுத்துவதுடன், தொழில்நுட்பத்தை புதிய உயரத்திற்கு கொண்டு செல்கின்றது. இந்த வயர்லெஸ் கலர் மானிட்டர் ஆனது, அதன் மெல்லிய வடிவமைப்பின் மூலம், முதல் பார்வையில் ஒவ்வொரு பயனரையும் ஈர்க்கிறது. 4K+ Ultra HD திரையானது, சினிமா மட்டத்திலான நிறங்களையும், கம்பியற்ற வெளிப்படுத்துகை, புத்தாக்க வடிவமைப்பு, Smart Bar போன்றன, Huawei MateView இனது குறிப்பிடும்படியான சில அம்சங்களாகும். இது 28.2 அங்குல 3:2 பெனலைக் கொண்டுள்ளது. இதன் 3840 x 2560 திரை அதற்கே உரித்தான துல்லியத் தன்மையை வழங்குவதன் மூலம், மிகச் சிறிய விபரங்களையும் சிறப்பாக விபரிக்கும் வகையிலான உயர் மட்ட பார்வை அனுபவத்தை வழங்குகிறது. சட்டகத்திற்கான குறைந்த பரப்பை ஒதுக்கி மேற்கொள்ளப்பட்டுள்ள வடிவமைப்பு, அதன் நவீன வடிவமைப்புக்கு இணையான அதிகளவான பார்வைப் பரப்பை வழங்குகிறது. இந்த மானிட்டர் ஆனது, VESA DisplayHDR ™ 400 சான்றிதழைக் கொண்டுள்ளதன் மூலம், அதில் தோன்றும் காட்சியில் காணப்படும் இருண்ட பகுதிகளில் மறைந்துள்ள விபரங்களை எளிதாக கண்டறிய உதவுமென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Huawei நிறுவனத்தின் சமீபத்திய தொழில்நுட்ப சாதனங்கள் நாடளாவிய Huawei அனுபவ மையங்கள், சிங்கர் காட்சியறைகள், Daraz.lk மற்றும் Singer.lk ஆகியவற்றில் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளன.

முற்றும்

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *