தகவல் தொடர்பு தொழில்நுட்பமானது (ICT) தொழிற்துறையை மாற்றியமைத்து, புதிய சகாப்தத்தின் திறமைகளை தொழில்துறையின் மிக முக்கியமான ஆதாரமாக கருதும் முன்னேற்ற முயற்சியில், Huawei Sri Lanka சமீபத்தில் மொரட்டுவை பல்கலைக்கழகத்துடன் (UoM) இணைந்து Huawei ICT Academy Innovation Lab ஆய்வகத்தை திறந்தது. கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா, மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் என்.டி.குணவர்தன, Huawei Sri Lanka வின் தலைமை நிரைவேற்று அதிகாரி லியோங் ஆகியோரின் பங்கேற்புடன் Huawei ICT Academy Innovation Lab ஆய்வகத்தின் அதிகாரப்பூர்வ தொடக்க விழா மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
இது நாட்டின்
மிகப்பெரிய Huawei ICT Academy மற்றும் கண்டுபிடிப்பு ஆய்வகமாகும்.
இது டிஜிட்டல் உள்ளடக்கிய இலங்கைக்கு ஒரு திறமையான சுற்றுச்சூழல் அமைப்பை
வளர்ப்பது என்ற கருப்பொருளாக விளங்கும் அதேவேளை டிஜிட்டல் சுற்றுச்சூழல் மற்றும்
டிஜிட்டல் மாற்றத்திற்கு பங்களிப்பு செய்கிறது. ஏனெனில் டிஜிட்டல் திறமை
வெளிக்கொணர்வானது சமூக ஆற்றலையும் நம்பிக்கையையும் உருவாக்கியுள்ளது.
Huawei ICT Academy Innovation Lab ஆய்வகத்தின் நோக்கம், உயர் மட்ட Huawei சான்றிதழ்களைப் பெறுவதற்கு Huawei
உபகரணங்களைப்
பயன்படுத்தி தனிநபர்களுக்குப் பயிற்சி அளிப்பது,
தொழில் நுட்பம்
மற்றும் தளங்களை வழங்கும் பல்கலைக்கழக ஆராய்ச்சித் திட்டங்களை ஆதரித்தல் மற்றும்
தொழில் மற்றும் பல்கலைக்கழக ஒத்துழைப்பு திட்டங்கள் ஆராய்ச்சிகளை நடத்துவதன் மூலம்
புதுமைகளை ஊக்குவித்தலுக்குமாகும்.
ஆய்வத்தின்
திறப்பு விழாவின் போது உரையாற்றிய கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில
பெரேரா, “கல்வி மற்றும் திறமை மேம்பாடு என்பது
உலகளாவிய தேவையாகும். எனவே நமது அரசாங்கம் தொழில்நுட்பம் சார்ந்த சமுதாயத்தை
உருவாக்குவதற்கு முன்னுரிமை அளித்து வருகின்றது. அதே போல் ICT மற்றும் டிஜிட்டல் திறமைகளை உலகளாவிய அங்கீகாரம் மற்றும்
சர்வதேச அங்கீகாரம் பெற்ற தகுதிகளுடன் அடைய வேண்டியது அவசியம். எனவே, மொரட்டுவை பல்கலைக்கழகம் மற்றும் Huawei
இன் இந்த
முயற்சியானது, Smart Nation என்ற இலங்கையின் தொலைநோக்குப் பார்வையை
பெரிதும் ஆதரிக்கும் என்று நான் நம்புகிறேன் என அவர் தெரிவித்தார்.
மொரட்டுவை
பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் என்.டி.குணவர்தன கருத்து வெளியிடுகையில், “இலங்கையின் முன்னணி தொழில்நுட்பப் பல்கலைக்கழகமாக நாங்கள்
இருக்கிறோம், மொரட்டுவை பல்கலைக்கழகம் பல்வேறு
பின்னணியிலிருந்து திறமையான இளைஞர்களைப் பயிற்றுவித்து பல ஆண்டுகளாக அவர்களை
உயர்தர வல்லுநர்கள், கல்வியாளர்கள் மற்றும் தலைவர்களாக
மாற்றியுள்ளது. இலங்கையை அறிவு சார்ந்த பொருளாதாரமாக மாற்றுவதற்கு
பதிலளிக்கக்கூடிய மற்றும் தகவமைப்புடன் பல்கலைக்கழகத்தை வழிநடத்துவதே எங்கள்
தொலைநோக்கின் ஒரு பகுதியாகும்.
இந்த Huawei ICT Academy Innovation Lab ஆய்வகமானது அறிவு உருவாக்கத்திற்கு
அப்பாற்பட்டு, ICT திறன்களின் தேவையை பூர்த்தி செய்ய
தேவையான எதிர்கால திறமைகளை உருவாக்குவதற்கு தேவையான அறிவு மற்றும் திறன்களை
பயன்படுத்துகிறது. மேலும் இந்த அகடமியை நிறுவுவதற்கு Huawei பங்களிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என
தெரிவித்துள்ளார்.
“இந்த முயற்சியின்
மூலம் Huawei ICT Academy Innovation Lab ஆய்வகம் என்ற தலைப்பில் எங்கள் ICT திறமைகளை உருவாக்கும் முயற்சியை பெரிய அளவில்
விரிவுபடுத்துகிறோம். நாம் முக்கிய 3 களங்களில் கவனம் செலுத்துகிறோம்: பொது
விழிப்புணர்வு, ICT தொழிற்பயிற்சி மற்றும் இலங்கைப்
பல்கலைக்கழகங்களுடனான கூட்டு கண்டுபிடிப்பு, அறிவு பரிமாற்றத்தை மேம்படுத்துதல், தொலைத்தொடர்பு துறையில் அதிக புரிதல் மற்றும் ஆர்வத்தை மேம்படுத்துதல், பிராந்திய கட்டிடம் மற்றும் டிஜிட்டல் பங்கேற்பை மேம்படுத்துதல் மற்றும்
ஊக்குவித்தல் போன்றவற்றுக்கு முக்கியத்தும் அளிப்பதாக Huawei Sri Lanka வின் தலைமை நிறைவேற்று அதிகாரி லியாங் யி தெரிவித்துள்ளார்.
இந்த முயற்சியானது Huawei இன் தொடர்ச்சியான கணிசமான ICT திறமை வளர்ப்பு முயற்சியின் ஒரு பகுதியாக இருக்கும் என்றும்
அவர் மேலும் கூறினார்.
கடந்த 30 ஆண்டுகளில் Huawei இன் தொழில்நுட்பக் குவிப்பு, திறமை வளர்ப்பு அனுபவம் மற்றும் ICT துறையில் உள்ள தொழில் வளங்கள்
ஆகியவற்றின் அடிப்படையில், Huawei ICT Academy Innovation Lab திட்டமானது மாணவர்களின் ICT அறிவை மேம்படுத்துவதற்காக Huawei
மேற்கொண்ட
முக்கிய முயற்சிகளில் ஒன்றாகும். பாட மேம்பாடு, பயிற்சியாளர் இயக்கம், ஆய்வகச் சூழல் அமைப்பு, மற்றும் திறமைச் சான்றிதழ், போட்டி உட்பட இந்தத் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு வரை முழு திறமை மேம்பாட்டு
செயல்முறையையும் உள்ளடக்கிய ஒரு விரிவான தீர்வை Huawei
வழங்குகிறது.
இது கடந்த ஆண்டு Huawei இன் ஒத்துழைப்பை நிறைவேற்றி,
மொரட்டுவை
பல்கலைக்கழகத்துடன் இணைந்து புதிய கண்டுபிடிப்பு ஆய்வகம் மற்றும் ICT அகாடமியை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்
கையெழுத்திட்டது. தொழில்துறையின் இந்த கூட்டு கண்டுபிடிப்பு ஆய்வகத்தை மேலும்
விரிவுபடுத்தும் முயற்சியில் – Huawei ICT Academy
Innovation Lab ஆண்டுதோறும் ICT தொழில்நுட்பத்தில் 250 மாணவர்களை உருவாக்க திடடமிட்டுள்ளதோடு
பல அடித்தளங்களைப் பயன்படுத்தி தொழில்துறை ஆராய்ச்சி நிகழ்ச்சிகளை நடத்தவும்
முடிவுசெய்துள்ளது.