இலங்கையில் பால் உற்பத்தியை மேலும் மேம்படுத்த DIMO Plantseeds அறிமுகப்படுத்தும் ‘Veera’

இலங்கையின் முன்னணி பல்வகை கூட்டு நிறுவனமான DIMO, விவசாயிகளின் அன்றாட வருமானத்தை அதிகரிக்கும் பொருட்டு, உள்ளூர் விவசாயத் துறையில் உற்பத்திகளை அதிகரிப்பதில் பங்களிப்புச் செய்யும் ஒரு பங்காளியாக, தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கிறது. அதன் துணை நிறுவனமான Plantseeds (தாவர விதைகள்), உள்ளூர் பால் தொழிற்துறையை மேம்படுத்தும் நோக்கத்துடன், இலங்கை சந்தைக்கு கலப்பின (hybrid) வகை தீவன சோளம் விதையான ‘Veera’ (வீரா) விதையை அறிமுகப்படுத்தியுள்ளது.

கறவை மாடுகளின் பால் உற்பத்தியை மேம்படுத்தும் வகையிலான, ஆரோக்கியமான உணவை Veera வழங்குவதுடன், கால்நடை தீவன பற்றாக்குறைக்கு இது ஒரு சிறந்த தீர்வாகவும் அமைகின்றது. Plantseeds ஆனது, உள்ளூர் சந்தையில் கலப்பின விதைகளை வழங்கும் நிறுவனமாகும். கலப்பின தர்ப்பூசணி விதைகள் பிரிவில் சந்தையில் முன்னோடியாகவும், நாட்டின் இரண்டாவது பெரிய விதை நெல் விநியோகஸ்தராகவும் Plantseeds திகழ்கின்றது.

தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சோள வகையானது, பால் பண்ணையாளர்கள் விலங்குகளுக்கு ஆரோக்கியமான உணவை வழங்குவதற்கும், பால் உற்பத்தியின் தரத்தை மேம்படுத்துவதற்கும் உதவும். காரணம், கறவை மாடுகள் அதிக பாலை வழங்குவதற்கு, அவற்றிற்கு போதுமான போசாக்கினை வழங்கும் உணவுகள் அவசியமாகின்றது. பெரிய அளவிலான பால் பண்ணையாளர்கள் தங்கள் பசுக்களுக்கு பல்வேறு வகையான தாவர கலப்பு தீவனங்களை உணவாக வழங்க முடியும். இது கணிசமான உற்பத்தித்திறனுக்கு வழிவகுக்கிறது. தற்போது பெரும்பாலான விவசாயிகள் இலவச மேய்ச்சல் முறையை மட்டுமே பின்பற்றுகின்றனர். ஒரு பொருளாதார தீர்வை வழங்கும் வகையில், விலங்குகளின் உச்ச பால் உற்பத்தி திறனை அடைய Veera விவசாயிகளுக்கு உதவும்.

இலங்கையின் பால் தொழில்துறையானது, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பை அளிக்கிறது. தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தகவலுக்கமைய, 2015 முதல் நாட்டின் தற்போதைய வருடாந்த பசுப் பால் உற்பத்தி 400 மில்லியன் லீற்றரை எட்டியுள்ளது. DIMO Agribusinesses, பிரதான செயற்பாட்டு அதிகாரி பிரியங்க தெமட்டவெவ இது தொடர்பில் தெரிவிக்கையில், “பால் தொழில்துறையானது, போசாக்குள்ள கால்நடை தீவனம் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதுடன், இலங்கையில் பால் உற்பத்தித் துறையின் உற்பத்தித்திறனை மேலும் அதிகரிக்க, போசாக்கான விலங்கு உணவுகள் மற்றும் அதற்கான விநியோக தளத்தை அதிகரிப்பது தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென நாம் நம்புகிறோம். இந்த அத்தியாவசியமான தேவையை அடையாளம் கண்டுள்ள DIMO Plantseeds, உள்ளூர் சந்தைக்கு Veera விதையை அறிமுகப்படுத்துவது தொடர்பான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.” என்றார்.

தாவர தீவன உற்பத்தியில் கவனம் செலுத்தும் நிறுவனங்கள், குறிப்பாக இலங்கையின் பாரிய மட்ட பால் விவசாயிகளை முக்கிய இலக்காகக் கொண்ட நிறுவனங்கள், Veera வகை விதைகளை எளிதில் பயிரிட முடியும். சிறிய மட்டத்திலான பால் விவசாயிகளும் தங்கள் கால்நடைகளுக்கு அவசியமான பொருளாதார தீர்வாக இதனை தங்கள் சொந்த நிலங்களில் வளர்க்கலாம்.

DIMO Plantseeds பிரதிப் பொது முகாமையாளர் ஹேமால் அத்தபத்து கருத்து வெளியிடுகையில், “அதிகளவான தொழில் முனைவோர் பால் வியாபாரத்தில் ஈடுபட ஆரம்பித்துள்ளதை நாம் காண்கிறோம். நாம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த விதையின் மூலமான விளைச்சல், கால்நடை தீவனமாக பயன்படுத்தப்படுவதுடன், எந்தவொரு வானிலைக்கும் தாக்குப் பிடிக்கக் கூடியதாகவும் காணப்படுகின்றது. புதிய வருமான வழிகளைத் தேடும் தொழில்முனைவோர், இதனை வரட்சியான பிரதேசங்களில் கூட வளர்க்கலாம். இது அந்நிலங்களை செழுமையான நிலங்களாக வெற்றிகரமாக மாற்றியமைத்து, பால் உற்பத்திக்கு அவசியமான கால்நடை தீவனத் தேவையை பூர்த்தி செய்யும். வணிக ரீதியான தாவர தீவன உற்பத்திக்காக Veera வினை வளர்ப்பதற்கான தொழில்நுட்ப அறிவை வழங்கும் பொருட்டு, தொழில்முனைவோருக்கு உரிய ஒத்துழைப்புகளை வழங்கவும் Plantseeds எதிர்பார்க்கின்றது.” என்றார்.

Veera அதிக விளைச்சலைத் தரும் சோள வகையாகும் என்பதுடன், இது ஹெக்டயருக்கு 80 தொன் வரையான விளைச்சலை வழங்குகிறது. இது விதைத்து 75-80 நாட்களுக்குள் பால் கொள்ளும் நிலையில், அதனை அறுவடை செய்யலாம். இலங்கையில் கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே சோள விதை வகையாக Veera உள்ளது. பூச்சிகள் மற்றும் கடுமையான வானிலை நிலைமைகளுக்கு ஈடுகொடுத்து வளரும் Veera, எந்தவொரு புவியியல் பிரதேசத்திலும் பயிரிடக் கூடியது. இந்த வகை சோளமானது, 9.02 கச்சா புரதம் (CP) (%) (DM), 67.92 Fiber-NDF (%) (DM), மொத்த கலோரி 4332.79 cal/gm (DM), 28.00 Fiber-ADF (%) (DM) போன்ற உயர் போசாக்கு அம்சங்கைளக் கொண்டுள்ளது. அத்துடன், வயல் சோளம் (Field Corn), இனிப்புச் சோளம் (Sweet Corn), உள்ளூர் கலப்பின விதைச் சோளம் (Local Hybrid Seed Maize) போன்ற அனைத்து வகை சோளன் விதைகள் தொடர்பிலும், உள்ளூர் விவசாயிகளின் வலுவான சோள விதை பங்குதாரராகவும் DIMO Plantseeds விளங்குகின்றது.

DIMO, அதன் பல்வகை வணிகத் துறைகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில், கடந்த சில வருடங்களுக்கு முன்னர் விவசாயத் துறையில் நுழைந்தது. அதன் விவசாயப் பிரிவான DIMO Agribusbusiness மூலம், உள்நாட்டு விவசாயத் துறைக்கான எதிர்கால தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளை அறிமுகப்படுத்தும் நோக்குடன் அது இப்பயணத்தில் இணைந்துள்ளது. சமூகங்களின் வாழ்வாதாரங்களில் பலன் தரக் கூடிய மாற்றத்தை ஏற்படுத்தி, இலங்கையின் வழக்கமான விவசாயத்தை, நவீன உயர் தொழில்நுட்பத் தொழிற்துறையாக மாற்றும் பொருட்டு, ‘அடுத்த தலைமுறை விவசாயம்’ எனும் அதன் தாரக மந்திரத்தின் மூலம் DIMO Agribusinesses முன்னோக்கிச் செல்ல முயற்சிக்கிறது.

  • முற்றும்

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *