பால் தரத்தில் பேண்தகு முன்னேற்றத்தை மேற்கொள்ள முழு குளிர் விநியோக சங்கிலி பகுப்பாய்வை முன்னெடுக்கும் Pelwatte Dairy

பல வகையான பாலுற்பத்திகளை மேற்கொண்டு, நாட்டிற்கு மதிப்புமிக்க அந்நிய செலாவணியை சேமிக்கும் இலங்கையின் முன்னணி உள்நாட்டு பாலுற்பத்தி வர்த்தகநாமங்களில் ஒன்றான Pelwatte Dairy, அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்வதற்கும் அதன் பால் உயர்ந்த தரத்தில் உள்ளது என்பதனை உறுதி செய்வதற்கும் தனது பால் பாதுகாப்பு தொழில்நுட்பங்களை மேம்படுத்த குறிப்பிடத்தக்க முதலீடுகளை மேற்கொண்டுள்ளது.

குறிப்பிட்டுக் கூறுவதென்றால், Pelwatte யோகர்ட், 2020/’21 நிதியாண்டில் Pelwatte தயாரிப்பு வரிசையில் மூன்றாவது மிக உயர்ந்த விற்பனையைக் கொண்டிருந்ததென்பதுடன், இது முன்னைய ஆண்டை விட 49% வளர்ச்சியைக் கண்டிருந்தது. Pelwatte யோகர்ட் அதன் 80 கிராம் கப் ஒவ்வொன்றிலும் 80 கிலோகலோரி ஆற்றலை வழங்குவது மட்டுமன்றி குறைந்தபட்ச கொழுப்பைக் (3% -2.4g) கொண்டுள்ளது. இரண்டு முதன்மை தயாரிப்புகளான Pelwatte யோகர்ட் மற்றும் Pelwatte முழு ஆடைப் பால் மா (அத்துடன் ஏனைய Pelwatte பால் பொருட்கள்) ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் பாலை கண்காணிக்கக்கூடிய உலகத்தரம் வாய்ந்த மின்னணு பால் கண்டறியும் முறையை அறிமுகப்படுத்துவதற்கான பயணத்தை Pelwatte dairy நிறுவனம் தொடங்கியுள்ளது.

அறிமுக முயற்சியின் ஒரு பகுதியாக Pelwatte Dairy, பால் குளிர் விநியோக-சங்கிலி நடைமுறைகளை வலுவூட்டியுள்ளதுடன்,  அதன் குளிர் விநியோக-சங்கிலி மற்றும் வெப்ப பாதுகாப்பு அமைப்புகளின் முழு ஆய்வு மற்றும் பகுப்பாய்வைத் தொடங்கியுள்ளது. பவுசர் டிரக்கின் வெப்பநிலை பாதுகாப்பு திறன்கள், MCC குளிரூட்டும் வெப்பநிலை பராமரிப்பு மற்றும் சரியான நேரத்தில் வழி திரும்பும் நடைமுறைகள் ஆகியவை தற்போதைய ஆய்வில் ஆராயப்படும் முக்கியமான அம்சங்களாகும். இது, MCC இலிருந்து தொழிற்சாலைக்கு பவுசர் டிரக்களின் போக்குவரத்து மற்றும் பாலுற்பத்தியாளர்களிடமிருந்து பால் 4 பாகை செல்ஸியஸாக குளிர்விக்கப்படும் குளிரூட்டும் மையம் போன்ற பால் போக்குவரத்து மற்றும் களஞ்சியப்படுத்தல் போன்ற  பல புள்ளிகளில் பால் வெப்பநிலை பராமரிப்பு திறனை மேலும் மேம்படுத்தும் என்று Pelwatte எதிர்பார்க்கின்றது. இந்த ஆய்வின் முக்கியமான தரவுகளானது செயலாக்கம் மற்றும் உற்பத்தி அங்கீகாரம் வழங்கப்படுவதற்கு முன், QA ஆய்வகத்தின் மூலம் பரிசோதிக்கப்பட்ட தரத்தை பரிசோதித்தல் மற்றும் பால் பரிசோதனையின் அடிப்படையில் முக்கிய உள்ளீடுகளாக மாறும்.

Pelwatte யோகர்ட் போன்ற தயாரிப்புகளின் தரம் மற்றும் பாதுகாப்பு “முக்கியமானவை” மற்றும் தவிர்க்க முடியாதவை என்று Pelwatte கருதுகிறது.

Pelwatte Dairy இன் முகாமைத்துவ பணிப்பாளர் அக்மால் விக்ரமநாயக்க இது தொடர்பில் விபரிக்கையில்:  “பால் விரைவில் கெட்டுப்போகும் தன்மை கொண்டது, இது கறந்தெடுக்கப்பட்ட பின் மிகக் குறுகிய காலத்தில் உட்கொள்ளப்பட வேண்டும் அல்லது பதப்படுத்தப்பட வேண்டும். யோகர்ட் உற்பத்திக்குத் தேவையான புதிய பாலைச் சேகரித்தல், போக்குவரத்து மற்றும் பதப்படுத்துதல் உற்பத்தி சுழற்சியின் அனைத்து நிலைகளிலும் அறிவியல் பூர்வமாகவும் முறையாகவும் செய்யப்படுவதை Pelwatte உறுதி செய்கிறது. பாற்பண்ணையாளர்களிடமிருந்து தொழிற்சாலைக்கு பாலின் குளிர் சங்கிலியை பராமரிக்க விநியோகச் சங்கிலி தொழில்நுட்பங்களின் ஒருங்கிணைப்பானது ஒரு பால் சேகரிப்பாளர் நாளாந்தம் எதிர்கொள்ளும் பல சவால்களில் ஒன்றாகும். இதையும் மீறி, பேண்தகு பாலுற்பத்தியாளர்கள், சேகரிப்பாளர்களின் தளத்தை நிர்வகிப்பதில் பிரதான பங்கு வகிப்பதன் மூலமும், இறுதி தயாரிப்பின் உயர் தரத்தினைப் பேணும் பொருட்டு பெரும்பாலும், சில நிமிடங்களிலேயே விரைவான வேகத்தில் 4 பாகை செல்சியஸிற்கு குளிரூட்டி பால் விநியோகத்தை பேணுவதன் மூலமும் Pelwatte Dairy உள்நாட்டு பாலுற்பத்தித் துறையில் வெற்றிகரமாக உள்ளது.

“பாலின் தரம், போக்குவரத்து அல்லது களஞ்சியப்படுத்தல் முடிவில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், முழு பால் தொகுதியுமே  Pelwatte பதப்படுத்தும் தொழிற்சாலையில் உடனடியாக நிராகரிக்கப்படும்” என்று முகாமைத்துவ பணிப்பாளர் விக்ரமநாயக்க மேலும் தெரிவித்தார்.

டேங்கர் சாரதிகளுக்கு குளிர் சங்கிலி பராமரிப்பு தொடர்பான பயிற்சி, வெப்ப முகாமைத்துவ செயன்முறைகள், வழக்கமான MCC குளிர்விப்பான் பராமரிப்பு மற்றும் தொடர் நடவடிக்கைகள், தொழிற்சாலையில் உள்வரும் பாலின் கடுமையான ஆய்வக பரிசோதனை ஆகியவை வழக்கமாக மேற்கொள்ளப்படுவதுடன், இவை  Pelwatte தயாரிப்புகளின் தரத்திற்கு பிரதானவையாக அமைகின்றன.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *