கலா பொல 2020: இலங்கை கலை மற்றும் கலைஞர்களுக்கான கொண்டாட்டம்

கலா பொல 2020,  இலங்கையின் வருடாந்த திறந்தவெளி ஓவியக் கண்காட்சியின் 27 ஆவது தொகுப்பு, கொழும்பின் கிறீன் பாத் பகுதியை வண்ணமயமாக்கியதுடன்,  கண்ணைக் கவரும் ஓவியங்கள், உயிரோட்டமுள்ள உருவப்படங்கள், பண்பியல் ஓவியங்கள் மற்றும்  நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்ட சிற்பங்களுடன் பல கலைஞர்களை வெளிக்கொண்டு வந்தது. ஜோன் கீல்ஸ் குழுமத்துடன் ஒன்றிணைந்து ஜோர்ஜ் கீற் மன்றம் முன்னெடுத்த கலா பொல 2020, கொழும்பு 7, ஆனந்தகுமாரசுவாமி மாவத்தையில் பெப்ரவரி 23 ஆம் திகதி இடம்பெற்றது. 

இந்த திறந்தவெளி ஓவியக் கண்காட்சியானது நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து பதிவுசெய்யப்பட்ட 361 கலைஞர்கள், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு விருந்தினர்கள், பாடசாலை சிறுவர்கள் மற்றும் வளர்ந்தோர் உள்ளடங்கலாக 30,312 பலதரப்பட்ட பார்வையாளர்களையும் ஈர்த்திருந்ததுடன், ஒரே நாள் நிகழ்வில் சுமார் 18.7 மில்லியன் விற்பனையை ஈட்டியிருந்தது.

இந் நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கைக்கான இத்தாலி குடியரசின் தூதுவரான அதிமேதகு (திருமதி) ரீட்டா கியுலியானா மன்னெல்லா கலந்துகொண்டிருந்தார். மேலும் ஜோர்ஜ் கீற் மன்றத்தின் தலைவர், திரு.மைக் அந்தோனிஸ் அவர்களோடு பொருளாளர், திரு.அருண் டயஸ் பண்டாரநாயக்க, ஜோன் கீல்ஸ் குழுமத்தின் தலைவர், திரு.கிரிஷான் பாலேந்திரா, பதில் தலைவர், திரு.கிஹான் குரே மற்றும் ஜோன் கீல்ஸ் குழுமத்தின் முகாமைத்துவத்தினர் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.

உத்தியோகபூர்வ விழாவில் தனது வரவேற்பு உரையில், ஜோர்ஜ் கீற் மன்றத்தின் தலைவர் திரு. அந்தோனிஸ் கருத்து தெரிவிக்கையில், “27 வது ஆண்டாக, முன்பை விட அதிகமான கலைஞர்கள் பங்கேற்கும் பல்வேறு வகையான கலைகளின் அற்புதமான காட்சியை நாங்கள் காண்கிறோம். எங்கள் கலைஞர்களை ஆதரிப்பதற்கும்,  அவர்களின் கலையை வெளிப்படுத்த ஒரு பரந்த தளத்தை வழங்குவதற்கும், 26 வது ஆண்டாக எங்களுடன் கூட்டு சேர்ந்துள்ள ஜோன் கீல்ஸ் குழுமத்திற்கு ஜார்ஜ் கீட் அறக்கட்டளை நன்றியை தெரிவிக்கிறது,” என்றார்.

இத்தாலி குடியரசின் தூதுவரான அதிமேதகு (திருமதி) ரீட்டா கியுலியானா மன்னெல்லா , இந்தக் கூட்டத்தில் உரையாற்றுகையில், “கலா பொல நாடு முழுவதிலுமுள்ள கலைஞர்களை ஒன்றிணைக்கும் ஒரு அற்புதமான வருடாந்த நிகழ்வாகும். இது கலைகளின் கொண்டாட்டமென்பதுடன்,  அவை மீதான  காதலாகும். “உலகின் மென்மையான வல்லரசு” என்ற இத்தாலியின் நிலையை குறிப்பிட்டதோடு, “அதன் கலாச்சார மேலாதிக்கத்தின் நிலையானது இத்தாலிய கலை, இசை, உணவு வகைகள், வரலாறு ஆகியவற்றின் உலகளாவிய சர்வவல்லமையின் பிரதிபலிப்பாகும்,” என்றார். அந்த காரணத்திற்காக இத்தாலி பல பகுதிகளிலிருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது…… மேலும் ஓவியங்களுக்கு இதில் ஒரு முக்கிய பங்கு உண்டு: இது பொருளாதாரத்திற்கான ஒரு ஊக்கியாக இருக்கலாம். ஓவியமானது ஒரு குறிப்பீடு புள்ளியாக, ஒரு ஈர்ப்பாக, ஒரு காந்தமாக மாறுகிறது.  எனவே எனது பாராட்டு கலைஞர்களுக்கு மட்டுமன்றி, கலைஞர்கள் மற்றும் கலை விரும்பிகளின் முக்கியமான சந்திப்பைக் குறிக்கும் இந்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்களுக்கும் உரித்தாகின்றது,” என விபரித்தார்.

கலா பொலவில் 10 ஆவது முறையாகவும் பங்குபற்றும் ஓவியரான மஹேஷ் இந்திக்க கருத்து தெரிவிக்கையில், “கலா பொல உண்மையில் பல ஆண்டுகளாக வளர்ச்சியடைந்து,  பெரிய அளவிலான கலை கண்காட்சியாக மாறியுள்ளதுடன், வாடிக்கையாளர்களுடன் தொடர்புகொள்ள இது போன்ற மேலும் தளங்கள் தேவைப்படும், என்னைப் போன்ற கலைஞர்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். இவ்வளவு பரந்தளவிலான பார்வையாளர்களுக்கு எனது படைப்புகளை காட்சிப்படுத்தவும், விற்பனை செய்யவும் எனக்கு பொதுவாக வாய்ப்புகள் இல்லை, எனவே இந்த திருவிழா மிகவும் உதவியாக உள்ளது.” என்றார்.

இந்த உத்தியோகபூர்வ நிகழ்வு உயிரோட்டமான, வண்ணமயமான நிகழ்ச்சிகளுடன் மாலை வேளை புத்துயிர் பெற்றதுடன்,  அதன் பிறகு நமஸ்காரா, ரவிபந்து வித்யாபதி டிரம் குழு, ரிவேகா டான்ஸ் ஸ்டுடியோவின் நடனக் கலைஞர்கள், கொழும்பில் உள்ள இசைப் பள்ளியான மியூசிக் மேட்டர்ஸின் இளம் இசைக்கலைஞர்கள் ஆகியோரின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. இந்த உத்தியோகபூர்வ நிகழ்வின் பின்னர்,  தூதுவரான  மன்னெல்லாவை ஏற்பாளர்கள் ஓவிய விற்பனை நிலையங்களுக்கு அழைத்துச் சென்றிருந்ததுடன், அவர் அங்கு கலைஞர்களுடன் உரையாடி மகிழ்ந்தார்.

கடந்த வருடங்களைப் போல இம் முறையும் கலா பொல 2020, சிறுவர்களுக்கான கலைக்கூடத்தை கோரா ஆபிரகாம் கலை ஆசிரியர்களின் வழிகாட்டலின் கீழ் கொண்டிருந்ததுடன், 237 குழந்தை கலைஞர்களையும் கவர்ந்திருந்தது. இந் நிகழ்வுக்கு, ஜோன் கீல்ஸ் குழுமத்தின் பல பிரிவுகளைச் சேர்ந்த 153  தன்னார்வ ஊழியர்கள் பங்களிப்பு செய்திருந்தனர். கலா ​​பொல ஒரு வருடாந்த நிகழ்வாக இருக்கின்ற நிலையில், ஜோன் கீல்ஸ் அறக்கட்டளையானது கலைஞர்களுக்கான விளம்பரம் மற்றும் எதிர்கால தரகு ஆகியனவற்றை கலா பொலவில் கிடைக்கும் கலைஞர் விபரத்திரட்டு மூலமாகவும், இலங்கையைச் சேர்ந்த கலைஞர்கள் மற்றும் கொள்வனவாளர்களை வருடம் முழுவதும் இணைக்கும் www.kalapola.lk மற்றும் www.srilankanartgallery.com போன்ற இணையத்தளங்கள்

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *