சிறந்த எதிர்காலத்திற்காக உள்ளூர்மய நிலைபேறான அபிவிருத்திக்கான பிரசாரம் #ActionToImpact

தற்போது உலகம் மிகப் பாரிய சுகாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. கொவிட்-19 தொற்றானது, இயற்கை, மனிதர்கள், பொருளாதாரம், நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் (SDG) ஆகியவற்றுக்கிடையிலான தொடர்பை நிரூபித்துள்ளது. 2030 இற்குள் இந்த உலகளாவிய இலக்குகளை அடைவதில் ஏதேனும் தாமதத்தை ஏற்படுத்துமாயின், இத்தொற்றுநோயானது உலகின் முன் ஒரு பெரிய சவாலை முன்வைத்துள்ளதுடன் சுகாதாரப் பாதுகாப்பு போன்ற விடயங்களில் கவனம் செலுத்த வேண்டியதையும் வெளிப்படுத்தியுள்ளது. வறுமையானது நீண்ட காலமாக உலகம் முழுவதும் ஒரு முக்கியமான பிரச்சினையாக காணப்பட்டு வருகின்றது. கொவிட்-19 மற்றும் அதன் பின்விளைவுகளால் சுமார் அரை பில்லியன் மக்கள் வறுமையில் வாடுவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. சுகாதார பராமரிப்பு, வறுமை ஒழிப்பு, ஒழுங்கான வேலை, தரமான கல்வி உள்ளிட்ட பல்வேறு இலக்குகளை சரியான நேரத்தில் அடைவதானது, இவ்வைரஸை வெல்லும் முயற்சிகள் காரணமாக பின்நோக்கித் தள்ளப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், கொவிட்-19 ஆனது, நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளில் (SDG) மீண்டும் கவனம் செலுத்துவதற்கும் எதிர்கால சவால்களுக்கு சிறப்பாக தயாராக இருப்பதற்கும் ஒரு விழிப்புணர்வு அழைப்பாகும்.

இவ்வாறான பின்னணியில், சமூக உதவிகள் தொடர்பான முயற்சிகளில் முன்னணியில் நின்று செயற்படும் Road to Rights International இளைஞர் அமைப்பானது, இலங்கையில் உள்ளூர்மய நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைதல் மற்றும் நாட்டை நிலைபேறான தன்மையை நோக்கி கொண்டு செல்ல உதவுதல் ஆகியவற்றின் அடிப்படையில், இந்த ஓகஸ்ட் மாதத்தில் #ActionToImpact எனும் தேசிய பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது. இப்பிரசாரமானது, இலங்கையில் மட்டுமல்லாது, மனிதகுலத்தின் மிகப்பெரிய சவால்களை எதிர்கொண்டுள்ள முழு உலகுக்குமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொவிட்-19 பரவல் உலகெங்கிலும் பேரழிவை ஏற்படுத்தியிருந்தாலும், காலநிலை மாற்றத்தின் விளைவுகள் மற்றொரு புறம் தாக்கத்தை செலுத்தி வருகின்றது. ஆகையால், SDG களைச் செயல்படுத்துவதற்கான தேவை முன்னெப்போதையும் விட அதிகமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளதுடன், இதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு இது போன்ற பொருத்தமான தருணம் இல்லை என்பதே யதார்த்தம்.

நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை உள்ளூர்மயமாக்கும் செயல்பாட்டில் உதவுவதற்காக முன்னெடுக்கப்படவுள்ள இந்த 9 ஆண்டு கால பிரசாரமானது அரசாங்கம், பங்குதாரர்கள், வணிக நிறுவனங்கள், சிவில் சமூகம், இளைஞர்கள் உட்பட அனைத்துத் பிரிவினரையும் அணிதிரட்டும். இந்த அனைத்து துறைகளும் www.srilanka2030.lk எனும் இணையத் தளத்தின் அங்குரார்ப்பணத்துடன் ஒருங்கிணைக்கப்படும். இது, நிலைபேறான வளர்ச்சி தொடர்பில் கவனம் செலுத்தும் இலங்கையின் முதலாவது, பல பங்குதாரர்களைக் கொண்ட தளமாகும். இந்த ஒன்லைன் தளமானது அறிவு மற்றும் வளங்கள், நிலைபேறான நடைமுறைகள், ஆராய்ச்சித் தரவுகள் போன்றவற்றை பகிர்ந்து கொள்ளவும், நீண்டகால பிரசாரத்தின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கவுமான ஒரு தளமாக இருக்கும். இப்பிரசார ஆரம்பத்தைத் தொடர்ந்து, இந்நீண்ட கால பிரச்சாரத்தின் பங்கு மற்றும் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளில் கவனம் செலுத்துவதன் முக்கியத்துவத்தை விளக்குவதற்காக, பிரபல பேச்சாளர்களை உள்ளடக்கிய பல்வேறு கலந்துரையாடல்களும் இடம்பெறவுள்ளன.

#ActionToImpact பிரச்சாரத்தின் முக்கிய நோக்கம், பங்குதாரர்கள், வணிக நிறுவனங்கள், சிவில் சமூகம், இளைஞர்கள் மற்றும் அரசாங்கம் ஆகியன இணைந்து நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு ஒத்துழைக்கக்கூடிய ஒரு தளத்தை உருவாக்குவதாகும். நிலைபேறான அபிவிருத்தி இலக்கு என்பது என்ன, இந்த இலக்குகள் எதைக் குறிக்கின்றன என்பது தொடர்பில் பெரும்பாலான மக்கள் அறியாதுள்ளனர் என்பது பரவலாக அவதானிக்கப்பட்டுள்ளது. ActionToImpact பிரசாரமானது, மன்றங்கள், விவாதங்கள், சமூக ஊடகங்கள் போன்ற பல்வேறு செயல்பாடுகளின் மூலம் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும். தற்போது, ​​நிலைபேறான அபிவிருத்தி குறித்த ஆராய்ச்சி பற்றி உலகம் முழுவதும் அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. ஆயினும் இதற்கான உள்ளூர் வளங்கள் அரிதாகவே கிடைக்கின்றன. நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் தொடர்பில் ஆராய்ச்சியை ஆரம்பிப்பதற்கான அடித்தளத்தை ActionToImpact பிரச்சாரம் அமைக்கும். இந்த ஆராய்ச்சிகள் நீண்ட காலத்திற்கான வளர்ச்சி நடவடிக்கை திட்டங்களை செயல்படுத்தும்போது பிரயோகிக்கப்படும். நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைய இளைஞர்களுக்கு அதிகாரம் வழங்குவதும் இந்த முயற்சியின் மற்றொரு முக்கிய நோக்கமாகும்.

ActionToImpact இன் நீண்டகால திட்டங்கள் தொடர்பில் குறிப்பிடும்போது, இப்​​பிரச்சாரம் மாகாண மற்றும் மாவட்ட அளவிலான நிறுவனங்களின் ஒத்துழைப்பின் மூலம், உள்ளூர் பிரச்சினைகளை அடிமட்டத்திலிருந்து அடையாளம் கண்டு, அவற்றை பங்குதாரர்கள் மற்றும் தன்னார்வலர்களின் உதவியுடன் தீர்க்கும். நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைவதில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தெளிவூட்டவும், அவற்றை மேற்கொள்வதை ஊக்குவிப்பதற்காகவும் ஒவ்வொரு நிலைபேறான அபிவிருத்தி இலக்கிற்காகவும் பிரபலம் வாய்ந்த 17 தூதுவர்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளனர். இத்தூதுவர்கள் அர்த்தமுள்ள பிரச்சாரங்கள் மூலம் சமூகங்களுடன் தொடர்புற்று, அவர்களுக்கு வழங்கப்பட்ட நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் தொடர்பான ஊக்குவிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள். நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளில் போதுமான ஆராய்ச்சி விடயங்கள் இல்லாததை நிவர்த்தி செய்து, அமைப்பாளர்கள் 2022 இல் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளின் ஆராய்ச்சித் திறனை துரிதப்படுத்தும் நோக்கில் நிலைபேறான தன்மை மேம்பாடு குறித்த தேசிய ஆராய்ச்சி கருத்தரங்கை நடாத்த எதிர்பார்க்கின்றனர்.

ActionToImpact பிரசாரமானது, நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளில் கவனம் செலுத்தும் மிகப்பெரிய இளங்கலை பட்டம் பெற்ற வலையமைப்பொன்றின் ஆரம்பத்தையும் உருவாக்குகிறது. G17 பல்கலைக்கழகத் தூதுவர்கள் கூட்டமைப்பானது (G17 University Ambassadors Consortium), அடுத்த தலைமுறை இளம் தொழில் வல்லுநர்களை நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைய ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கிறது. இப்பிரசாரம் #KIDS4SDGs எனும் தேசிய தளம் வழியாக சிறுவர்கள் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் தொடர்பில் அறிவதற்காகவும், எதிர்காலத்தில் நிலைபேறான நடைமுறைகள் தொடர்பில் அவர்கள் பங்களிப்பதை உறுதி செய்வதற்காகவும் அவர்களை அணிதிரட்டும். மேலும், வணிக நிறுவனங்கள், இளைஞர் அமைப்புகள், அரச நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ActionToImpact பிரச்சாரத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கான உறுதிமொழி அளிப்பதற்கும் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளுக்கான அவர்களின் உறுதிப்பாட்டை உறுதிப்படுத்துவதற்கும் ஒரு வாய்ப்பை அடைந்து கொள்ளும்.

நிலையான வளர்ச்சியை முன்னோக்கி கொண்டு செல்வதில் முன்னோடியாக திகழும் நாட்டின் மிகப் பாரிய பல பங்குதாரர்களின் பிரச்சாரத்திற்காக காத்திருங்கள்.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *