Sri Lanka Unites வழங்கும் ஷார்க் டேங்க்: இலங்கையின் இளம் தொழில் முனைவோர் உணர்வை தட்டியெழுப்பும் ஓர் செயற்திட்டம்

Sri Lanka Unites அமைப்பு தனது பேஸ்புக் பக்கம் மற்றும் யூடியூப் சேனல் வழியாக ஷார்க் டேங்க் நிகழ்வை கடந்த ஏப்ரல் 24, 2021 அன்று  நேரடியாக வழங்கியது. Sri Lanka Unites  நல்லிணக்கம் மற்றும் தலைமைத்துவ மேம்பாட்டுக்கான இலங்கையின் மிகப்பெரிய இளைஞர் இயக்கமாக காணப்படுகின்றது.

Sri Lanka Unites அமைப்பானது நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் சேவையாற்றுவது மட்டுமல்லாமல், 9 நல்லிணக்க நிலையங்களை நிறுவியுள்ளது. இந்த நல்லிணக்க நிலையங்களில் வணிக முயற்சியாண்மை ஒரு பாடமாக கற்பிக்கப்பட்டு வருகின்றது.

இந்த பாடநெறி வணிக தொழில்முனைவோர், ஒரு தயாரிப்பு அல்லது சேவை, சந்தை ஆராய்ச்சி, வர்த்தகம், வர்த்தக, விற்பனை, நிதி மேலாண்மை மற்றும் விரிவாக்கம் போன்றவற்றின் மூலம் பொதுவான சிக்கல்களை எவ்வாறு தீர்ப்பது என்பதற்கான அறிமுகத்தை வழங்குகிறது.

இதன்மூலம் மாணவர்கள் தங்கள் வணிகத் திட்டத்தை உருவாக்க வழிகாட்டப்படுகிறார்கள். புதிய மற்றும் முதலீடு செய்யக்கூடிய வணிக திட்டங்கள் தெரிவு செய்யப்பட்டு, பின்னர் இலங்கையின் முதற்தர முதலீட்டாளர்களுக்கும், தொழில் அதிபர்களுக்கும் தங்களது வணிக திட்டத்தை அறிமுகம் செய்ய கொழும்புக்கு அழைக்கப்படுகின்றார்கள்.

ஷார்க் டேங்க் செயற்திட்டத்தின் இரண்டாவது சீசன் கனேடிய உயர் ஸ்தானிகராலயத்தால் நிதியளிக்கப்பட்டது. இதன்போது  நாட்டின் ஏழ்மையான 4 மாவட்டங்களாக அடையாளங்காணப்பட்ட முல்லைத்தீவு,மொனராகலை, மட்டக்களப்பு மற்றும் நுவரெலியா போன்ற மாவட்டங்களில்  கவனம் செலுத்தப்பட்டது.  இந்த மாவட்டங்களில்  இளைஞர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட வாய்ப்புகள் காணப்படுகின்றமை, அதிக வேலையின்மை மற்றும் வறுமை விகிதங்களை போன்றவை அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

Sri Lanka Unites குறித்த இம்மாவட்டங்களில் தங்களது  நல்லிணக்க நிலையங்களை நிறுவி,சமூகத்துடன் பல ஆண்டுகளாக செயற்பட்டு வருகின்றது.

இந்த 4 மாவட்டங்களிலும் 200 க்கும் மேற்பட்ட இளைஞர்கள்  Sri Lanka Unites நடாத்திய  பயிற்சிகளில் பங்கேற்றினார்கள், அவர்களுள்  20 இளைஞர்கள் மற்றும் பெண்கள் தேர்வு செய்யப்பட்டு கொழும்புக்கு அழைத்து வரப்பட்டனர்.

இம்முறை இந்த முயற்சிகளில் முதலீடு செய்வதற்கு விருப்பம் தெரிவித்த எங்கள் மதிப்புமிக்க ஜீவன் ஞானம்  (தொழில்முனைவோர்), ஷாலின் பாலசூரியா (ஸ்பா சிலோன்   இணை நிறுவனர் மற்றும் பணிப்பாளர்) , நயனா கருணாரத்ன – (சலோன் நயனாவின் நிறுவனர்), துலித ஹேரத் (கப்ருகா நிறுவனர் மற்றும் தலைவர்), ஹமீடியா குழுமத்தின் நிர்வாக இயக்குநர் பவுசுல் ஹமீத் மற்றும் ஒலிவ் கோச்சர் நிறுவனர் மற்றும் தலைமை வடிவமைப்பாளர் சம்மானி பதிரனகம போன்றவர்களை உள்ளடக்கிய குழுவிடம் தங்களது வணிக திட்டங்களை இந்த இளைஞர்கள் மற்றும் பெண்கள் முன்வைத்தனர்.

இந்த இளம் தொழில்முனைவோருக்கு வழிகாட்ட செலவிடும் தங்களது பெறுமதிமிக்க நேரத்திற்கு மேலதிகமாக ஒரு மில்லியனுக்கும் அதிகமான பணத்தை முதலீடு செய்ய உறுதியளித்து இலங்கையில் இளம் தொழில்முனைவோருக்கு ஆதரவளிப்பதில் தொடர்ந்து பணியாற்றும் குழு உறுப்பினர்களுக்கு Sri Lanka Unites அமைப்பு நன்றி தெரிவிக்கின்றது.

இந்த நிகழ்வின் நேரலை Sri Lanka Unites அமைப்பின்  பேஸ்புக் பக்கத்தில் பொதுமக்கள் பார்வையிட முடியும்.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *