சவால்களுக்கு மத்தியில் மீளெழுச்சி மிக்க வளர்ச்சியையும் உற்பத்தியையும் உறுதி செய்யும் Pelwatte Dairy

இலங்கையின் முன்னணி உள்நாட்டு பாலுற்பத்தி நிறுவனமான Pelwatte Dairy Industries, தொற்றுநோய், அதன் தாக்கம் உட்பட சுற்றுச்சூழல் மற்றும் பொதுக் கொள்கைகள் போன்ற சவால்களுக்கு மத்தியிலும் தனது மீளெழுச்சியை வெளிப்படுத்தியுள்ளது. பால் உற்பத்தியில் தளம்பல் நிலை, போக்குவரத்து மற்றும் லொஜிஸ்டிக் நடவடிக்கைகளில் சிரமம், விநியோகச் சங்கிலிகளில் இடையூறு, தொழிற்சாலைகளில் தொழிலாளர் பற்றாக்குறை மற்றும் உற்பத்தி செலவு அதிகரிப்பு போன்றன நிறுவனம் எதிர்கொண்ட சிக்கல்களில் அடங்குகின்றன.

பாலுற்பத்தித் துறையானது, ஏனைய பல தொழிற்துறைகளைப் போலவே தொற்றுநோயையும் அதன் தாக்கங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. முடக்கல் நிலையும்,  பயணக் கட்டுப்பாடுகளும் பெருமளவிலான தொழில்துறைகளை பாதித்துள்ளன. எனினும், தொற்றுநோய் மற்றும் பிற சந்தை அதிர்ச்சிகளுக்கு மத்தியில் பெறுமதிச் சங்கிலியில் உறுதியாக நீடிக்க முடிந்தமையானது Pelwatte நிறுவனத்தை உள்நாட்டு பாலுற்பத்தித் துறையில் ஒரு முன்னணி நிறுவனமாக திகழ வைத்துள்ளது. இந் நிறுவனம் தொழில்துறையில் இதுவரை பின்பற்றப்படாத பல அம்ச அணுகுமுறைகளை அறிமுகப்படுத்தியது.

மகத்தான சமூக மற்றும் பொருளாதார பெறுமதி கொண்ட ஒரு நிறுவனமாக Pelwatte Dairy Industries, பாற்பண்ணையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள், இலங்கை பொருளாதாரம் மற்றும் ஒட்டுமொத்த நாட்டிற்கும் அதன் உறுதியான ஆதரவை அளித்து வருகிறது.

இது தொடர்பில் பாலுற்பத்தி அபிவிருத்திக்கான நிறைவேற்று உத்தியோகத்தரான, எரந்த கருத்து தெரிவிக்கையில், “3 வது அலைக்காக அமுல்படுத்தப்பட்ட முடக்கல் நிலையானது, முன்பு இருந்ததைப் போல சவாலாக இல்லை. எங்கள் முகாமைத்துவமும் உயரதிகாரிகளும் எதிர்பாராத  மற்றும் நெருக்கடியான சூழ்நிலைகளிலும் செயல்பட அனைத்து செயன்முறைகள் மற்றும் செயல்பாடுகளிலும் வினைத்திறனான நடவடிக்கைகளயும் மேற்கொண்டனர். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வணிக நடவடிக்கைகளை சீராக தொடர்வதை உறுதி செய்வதற்கு நடுத்தர மற்றும் கீழ்மட்ட முகாமைத்துவத்திற்கு தேவையான பயிற்சி மற்றும் கருவிகள் வழங்கி அதிகாரம் பரவலாக்கப்பட்டுள்ளது. முதல் முடக்கலின் போது எங்கள் அனுபவங்கள் ஒரு கற்றல் வளைவு வழியாக எங்களை அழைத்துச் சென்றது,”என்றார்.

பாற்பண்ணையாளர்களிடமிருந்து பாலை சேகரிக்கும் ஆரம்ப கட்ட உற்பத்திச் செயன்முறையிலுருந்து, புதிதாக நிறுவப்பட்ட எங்கள் குளிரூட்டும் மையங்களுக்கு கொண்டு சென்று பின்னர் அதை எங்கள் தொழிற்சாலைகளில் பதப்படுத்தி, அவற்றை 72 மணித்தியாலங்களுக்குள் விவசாயிகளிடமிருந்து விற்பனையகங்களுக்கு என்ற எமது சான்றளிக்கப்பட்ட நடைமுறையின் கீழ் விற்பனைக்கு எடுத்துச் செல்வது வரை முன்வைக்கப்பட்டுள்ள அனைத்து சுகாதார வழிகாட்டுதல்களையும் Pelwatte கடைப்பிடித்துள்ளது.  மேலும், Pelwatte தேவையான சுகாதார தயாரிப்புகள் மற்றும் அகற்றக்கூடிய சுய பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்து நேரங்களிலும் அதன் ஊழியர்களுக்கு உடனடியாக கிடைக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

நிறுவனம் மற்றும் அதன் அனைத்து செயன்முறைகளையும் கண்காணிக்க தொழிற்சாலைகள் மற்றும் பண்ணைகளுக்கு பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதார மருத்துவ அதிகாரிகளின் வழக்கமான வருகையை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதுடன் வழக்கமான உள்ளக சுகாதார ஆய்வுகளை உறுதி செய்துள்ளது. இதன் முடிவுகள் சிறப்பானதாகவும், பாராட்டத்தக்கதாகவும் இருப்பது தொடர்பில் அறிவிப்பதில் நிறுவனம் பெருமிதம் கொள்கிறது. இது போன்று, 2020 மார்ச்சில் இலங்கையில் தொற்றுநோயின் முதல் அலையின் ஆரம்பித்ததிலிருந்து பல நடவடிக்கைகள் நிறுவப்பட்டுள்ளன. இது நிறுவனம் அரசாங்கத்தின் சுகாதார வழிகாட்டுதல்களுடன் இணங்கிச் செல்வதுடன், நுகர்வோர், ஊழியர்கள் மற்றும் அனைத்து பங்குதாரர்களின் பாதுகாப்பையும் உறுதிசெய்கின்றது.

தொற்றுநோய் நெருக்கடி காலப்பகுதியில், ஊழியர்களின் தொழில் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டியதை Pelwatte புரிந்துகொண்டுள்ளது. மிகவும் நெருக்கடியான காலப்பகுதியில் கூட ஊழியர்களின் ஊதியம் மற்றும் வேலையை பணயம் வைக்கவில்லை என்பது இதன் மூலம் தெளிவாகத் தெரிகின்றது. அரசாங்கத்தின் புதிய ஒழுங்குபடுத்தல் நடவடிக்கைகள் மற்றும் சுகாதாரத்துறையில் முன்நிலையில் உள்ளோரின் முன்வரையறுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் அறிவினைப் பெற்றுக் கொடுக்கும் பொருட்டு, Pelwatte ஊழியர்களுக்கு வழக்கமான விழிப்புணர்வு மற்றும் பயிற்சி அமர்வுகள் நடாத்தப்படுகின்றன.

பாலுற்பத்திகள் என்பது உள்நாட்டு உணவின் எங்கும் நிறைந்த பகுதியாகும். இவை தாமாகவே நுகர்வுக்கான ஒரு முக்கிய வடிவமாகும் என்பதுடன் இறுதி தயாரிப்பாகவோ அல்லது முக்கியமான உள்ளீடாகவோ பலவகையான உணவுகளிலும் உபயோகப்படுத்தப்படுகின்றன.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *