நேர்த்தியான வடிவமைப்புடன் சக்திவாய்ந்த செயல்திறனும் ஒன்றிணையும் Huawei Nova 7i

Huawei நிறுவனம் கட்டுப்படியாகும் விலைகளில், ஆற்றல்மிக்கதாக வடிவமைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்துவதில் பிரசித்தி பெற்றதாகும். அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட இதன் Nova 7i, வடிவமைப்பு மற்றும் செயல்திறன் அடிப்படையில் ஒரு படி மேலே சென்றுள்ளதுடன், முதன்மையான அம்சங்களுடன் கூடிய நவீன மத்தியதர புத்தாக்க சாதனம் என்பதை நிரூபிக்கிறது. இது நேர்த்தியான வடிவமைப்பு, Quad AI கமெரா அமைப்பு, பக்கவாட்டில் பொருத்தப்பட்டுள்ள கைரேகை ஸ்கேனர், நீடிக்கும் பற்றரி, வேகமான சார்ஜிங் உட்பட மேலும் பல பாராட்டப்பட வேண்டிய அம்சங்களைக் கொண்டுள்ளது. Sakura Pink, Crush Green மற்றும் Midnight Black ஆகிய மூன்று நிறங்களிலும், முன் பக்கத்தில் எவ்வித பகுதியும் வீணாகாமல் அமைக்கப்பட்டுள்ள அழகான முழுமையான திரையுடனும் Nova 7i கிடைக்கின்றது.

நான்கு ஓரத்திலும் அமைந்துள்ள குறுகலான சட்டகத்துடனான Nova 7i, பார்த்தவுடன் கவர்வதாக உள்ளது. இதன் வளைந்த விளிம்புகளானது சீரான மற்றும் ஆடம்பரமான வெளித்தோற்றத்தைக் கொண்டுள்ளது. இதனுடைய புதுமையான வடிவமைப்பானது, 6.4 அங்குல Huawei Punch Full View திரையின் மேல் பொருத்தப்பட்டுள்ள துளை வடிவிலான (Punch hole) முன்பக்க கமெராவினால் மேலும் மெருகேற்றப்பட்டுள்ளது. முன்பக்க கமெரா கருந்துளை போன்று காணப்படுவதுடன்,  இது இடது பக்க மேல் மூலையில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதன் வடிவமைப்பாளர்கள் சாதனம் பயன்பாட்டில் இருக்கும் போது மிக அரிதாகவே தெரியும் வகையில் அத் துளையை உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் இடைஞ்சல் இல்லாத வகையில் திரைப்படத்தைப் பார்ப்பதற்கும், விளையாடுவதற்கும் வசதியாக அமைந்துள்ளது.

” Nova 7i இன் நேர்த்தியான வடிவமைப்பின் காரணமாக அதனை கைகளில் பிடிப்பது ஒரு சிறந்த அனுபவத்தைத் தருவதுடன், முதல் பார்வையிலேயே பயனர்களை ஈர்க்கக் கூடிய தோற்றத்தையும் கொண்டது. வடிவமைப்பாளர்கள் இதன் வடிவமைப்பில் அதிக கவனம் செலுத்தியுள்ளதால், ஏனைய மத்திய தர சாதனங்களுடன் ஒப்பிடும்போது, குறிப்பிடத்தக்க வகையில் தனித்துவத்துடன் திகழ்கின்றது. இதன் வலு மற்றும் செயல்திறனும் எவ்விதத்திலும் குறைந்ததல்ல, வடிவத்துக்கு ஏற்ற முக்கியத்துவம் இவற்றுக்கும் வழங்கப்பட்டுள்ளது. எனவே, எவ்வித சந்தேகமுமின்றி இது Huawei நுகர்வோரிடையே நல்ல வரவேற்பைப் பெறுமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது,” என Huawei Devices Sri Lanka – உள்நாட்டு தலைமை அதிகாரியான பீட்டர் லியு  தெரிவித்தார்.

இதன் நேர்த்தியான, அழகான வடிவமைப்புக்கு அப்பால், கவனிக்கத்தக்க மற்றொரு அம்சம் என்னவெனில் Quad AI கமெரா அமைப்பாகும். இது 48MP பிரதான கெமரா, 8MP ultra-wide கெமரா, 2MP macro மற்றும் 2MP depth camera மற்றும் அதேபோல சக்தி வாய்ந்த 16MP முன் பக்க கமெராவையும் கொண்டுள்ளது. Nova 7i இன் நிறை 183 கிராம்கள் என்பதுடன், இதன் பரிமாணம் 159 x 76.3 x 8.7ஆகும். இதன் IPS LCD  தொடு திரையானது சீரானது மட்டுமன்றி துள்ளியமானதென்பதால், விரல்களுக்கு மிகவும் உகந்த வகையில் உள்ளன. மேலும் வளைந்த கண்ணாடி வடிவமைப்பிலான உருவாக்கமானது கையில் வைத்திருக்க மிக வசதியானதாகும். இது 1080 x 2310 pixels resolution மற்றும் ஆச்சர்யமளிக்கும் 83.5% அதியுயர் முழுத்திரை-மேற்பாகம் இடையிலான விகிதத்துடன் (screen to body ratio) கூடிய திரையுடன் வருகின்றது.

Kirin 810 chipset மற்றும் 8GB RAM உடன் கூடிய Nova 7i, வலு மற்றும் செயல்திறனிலும் சமளவில் சிறந்ததென்பதுடன், கேமிங் அல்லது இணையப் பாவனையையின் போது தடையற்ற அனுபவத்தை வழங்குகிறது. அதன் அடுத்த தலைமுறை Graphics Processing Unit (GPU) அதிக திறன் கொண்ட விளையாட்டுகளை விளையாடும்போது எவ்வித தடையுமின்றி HD கிராபிக்ஸை வழங்குகின்றது. இது Android 10 மற்றும் EMUI 10 உடன் வருவதுடன், பணியாற்றுவதற்கு அழகான பயனர் இடைமுகத்தை உருவாக்குகிறது. 4200 mAh அகற்ற முடியாத பற்றரி நீடித்த செயற்பாட்டை உறுதி செய்வதுடன், 40W Huawei சுப்பர் சார்ஜ் தடையற்ற மொபைல் அனுபவத்தை வழங்க துணை புரிகின்றது.

Nova 7i அனைத்து Huawei அனுபவ வர்த்தக நிலையங்கள், Singer காட்சியறைகள் மற்றும் Daraz.lk இணையத்தளத்தின் ஊடாகவும் கிடைக்கின்றது.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *