2026 கொழும்பு வாகன கண்காட்சியில் ரூ. 799,900 எனும் விசேட அறிமுக விலையில் ‘Rizta Z’ ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தும் Ather

– அன்றாட வசதிக்காக மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள், வசதியான ஆசனம், 56 லீற்றர் கொள்ளவு சேமிப்பகத்தை கொண்ட ஸ்மார்ட் உயர் ரக ஸ்கூட்டர்

– இலங்கை முழுவதும் உள்ள 25 அதிவேக சார்ஜிங் நிலையங்களைக் கொண்ட Ather Grid வலையமைப்பின் ஆதரவுடன், 8 வருட உத்தரவாத மின்கலம்.

இலங்கையில் Ather Energy நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான Evolution Auto (Pvt) Ltd நிறுவனம், 2026 கொழும்பு வாகன கண்காட்சி (Colombo Motor Show 2026) நிகழ்வில் ‘Ather Rizta Z’ ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட் எக்சிக்யூட்டிவ் ஸ்கூட்டரானது தொழில்நுட்பம், பாதுகாப்பு, சௌகரியம் மற்றும் அன்றாட தேவைகளுக்கான வசதி ஆகியவற்றை கொண்டுள்ளது. இந்த அறிமுகத்தைக் குறிக்கும் வகையில், வாடிக்கையாளர்கள் இந்த ஸ்கூட்டரை அதன் நிலையான சில்லறை விலையான ரூ. 849,900 இலிருந்து ரூ. 50,000 குறைக்கப்பட்டு, ரூ. 799,900 எனும் விசேட அறிமுக விலையில் கொள்வனவு செய்ய முடியும். இந்தச் சலுகை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கவுள்ளது. இதேவேளை, நவம்பர் 20 முதல் 23 வரை இடம்பெற்றம் கொழும்பு மோட்டார் ஷோவிற்கு வருகை தந்தவர்கள், Ather கூடத்தில் உள்ள Rizta Z ஸ்கூட்டரைப் பார்வையிட்டதோடு, பிரத்தியேக பாதையிலான சோதனை ஓட்டங்கள் மூலம் அதனை செலுத்தும் அனுபவத்தையும் பெற்றனர்.

வெவ்வேறு வீதிகள் மற்றும் போக்குவரத்துச் சூழ்நிலைகளில் அன்றாட பயணத்தை மேலும் வசதியாகவும் கட்டுப்பாட்டுடனும் மாற்றுவதற்காக வடிவமைக்கப்பட்ட அம்சங்களை Rizta Z கொண்டு வருகிறது. இதன் 7 அங்குல TFT தொடுதிரையானது ஒருங்கிணைக்கப்பட்ட Google Maps உடன் வருகிறது. இது சாரதிகள் டேஷ்போர்டில் இருந்தே நேரடியாக பாதை வழிகாட்டலைப் பெற உதவுகிறது. ‘Magic Twist’ வசதியானது ‘Regenerative Braking’ அம்சத்தை பயன்படுத்தி, அழுத்த கட்டுப்பாட்டின் மூலம் சாரதிகளால் ஸ்கூட்டரின் வேகத்தைக் குறைக்க உதவுவதோடு, நின்று நின்று செல்லும் பயணத்தில் அதிக கட்டுப்பாட்டை வழங்குகிறது. சரிவுகளில் ஸ்கூட்டரை நிலையாக வைத்திருக்க ‘AutoHold’ வசதி உதவுவதுடன், மேல் நோக்கி உயரத்திற்கு செல்லும் பயணத்தை ஆரம்பிப்பதையம் எளிதாக்குகிறது. அத்துடன், ‘SkidControl’ அம்சமானது, குறிப்பாக மழைக் காலங்களில் வழுக்கும் பரப்புகளில் இழுவைத் திறனை நிர்வகிக்க உதவுகிறது.

சௌகரியம் மற்றும் நடைமுறைக்கு ஏற்ற தன்மை ஆகியன Rizta Z ஸ்கூட்டரின் வடிவமைப்பின் மையமாக உள்ளன. இது இதே பிரிவில் உள்ள ஸ்கூட்டர்களில் மிகப்பெரிய ஆசனத்தையும், பின்புற இருக்கையுடன் இணைந்த அகலமான முதுகுத் தாங்கியையும் கொண்டுள்ளது. இவ்வசதி, சாரதி மற்றும் பயணி ஆகிய இருவருக்கும் சௌகரியமான பயண அனுபவத்தை வழங்குகிறது. இந்த ஸ்கூட்டர் 34 லீற்றர் கொள்ளவு கொண்ட ஆசனத்திற்கு அடியிலான சேமிப்பு இடத்தையும், மேலும் ஆசனத்திற்கு முன்புறமான 22 லீற்றர் சேமிப்புப் பகுதியையும் கொண்டதாக மொத்தம் 56 லீற்றர் சேமிப்புக் கொள்ளளவை வழங்குகிறது. இது வேலைக்கு செல்வதற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள், ஷொப்பிங் மற்றும் ஏனைய அன்றாட பொருட்களை வைப்பதற்காக சாரதிகளுக்கு வசதியான இடத்தை வழங்குகிறது. இந்த அம்சங்கள் அன்றாடப் பயணங்களில் வசதியையும் சௌகரியத்தையும் தேடுகின்ற, பணிபுரியும் நிபுணர்கள் மற்றும் அன்றாட போக்குவரத்தை மேற்கொள்வோருக்கு ஒரு நடைமுறை ரீதியான தெரிவாக Rizta Z ஸ்கூட்டரை அமைக்கிறது.

இந்த ஸ்கூட்டரின் அறிமுகம் குறித்து கருத்துத் தெரிவித்த Ather Sri Lanka மற்றும் Evolution Auto (Pvt) Ltd நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஸஹ்ரான் சியாவுதீன், “Rizta Z ஸ்கூட்டரை இலங்கைக்கு அறிமுகப்படுத்துவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். இன்றைய வாடிக்கையாளர்கள் வெறுமனே ஓரு இடத்திலிருந்து மற்றுமொரு இடத்திற்குச் செல்வதற்கான ஒரு வாகனத்திற்கு அப்பாற்பட்ட ஒன்றை தேடுகிறார்கள். நடைமுறைக்கு ஏற்ற, வசதியான, அன்றாடப் பயணங்களை எளிதாக்கும் அம்சங்களைக் கொண்ட ஒரு ஸ்கூட்டரை அவர்கள் விரும்புகிறார்கள். Rizta Z ஸ்கூட்டர் இவற்றை Ather கொண்டுள்ள தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் ஒன்றிணைக்கிறது. வாகனத்தின் மீதான நம்பிக்கையானது வாகன உரிமை தொடர்பான அனுபவத்தின் மீதான நம்பிக்கையுடன் பொருந்த வேண்டும் என்பதை நாம் அறிவோம். அந்த வகையில், எமது அனுபவ மையங்கள் மற்றும் வாகன சேவை மையங்களின் வலையமைப்பு மூலம், Ather Grid சார்ஜிங் உட்கட்டமைப்பு வசதியுடன் இணைந்த வகையில், வாடிக்கையாளர்கள் மின்சார வாகன போக்குவரத்திற்கு மாறுவதற்குத் தேவையான ஆதரவை வழங்க நாம் பணியாற்றி வருகிறோம். கொழும்பு மோட்டார் ஷோ கண்காட்சியானது வாடிக்கையாளர்கள் Rizta Z ஸ்கூட்டரை நேரடியாக முதன்முறை அனுபவிப்பதற்கான ஒரு வாய்ப்பாக அமைந்தது. அத்துடன், இலங்கை முழுவதும் உள்ள மேலும் பல நகரங்களுக்கு இதனைக் கொண்டு செல்ல நாம் ஆவலுடன் காத்திருக்கிறோம்.” என்றார்.

Rizta Z ஸ்கூட்டரானது 8 வருட மின்கல உத்தரவாதத்துடன் வருகிறது. இது வாடிக்கையாளர்களுக்கு நீண்ட காலத்திற்கு மேலதிக உறுதியை வழங்குகிறது. இது Ather அதிவேக சார்ஜிங் வலையமைப்பான Ather Grid மூலம் ஆதரவளிக்கப்படுகிறது. இவ்வலையமைப்பு, தற்போது நாடு முழுவதும் 25 சார்ஜிங் நிலையங்களைக் கொண்டுள்ளது. வீட்டில் சார்ஜ் செய்யும் வசதியுடன், பணியாற்றும் இடம், ஷொப்பிங் இடம் மற்றும் ஏனைய அன்றாட தேவைகளுக்காக நிறுத்தங்களில் உள்ள சார்ஜிங் நிலையங்கள் மூலம் வீட்டைத் தாண்டியும் சார்ஜ் செய்ய இந்த வலையமைப்பு உதவுகிறது. நகரங்களுக்கு இடையே பயணிப்போருக்கு, இது மேலதிக சார்ஜிங் தெரிவுகளையும் வழங்குவதோடு, நீண்ட பயணங்களை அதிக நம்பிக்கையுடன் திட்டமிட அவர்களுக்கு உதவுகிறது. Evolution Auto நிறுவனத்தின் வளர்ச்சியடைந்து வரும் விற்பனை மற்றும் சேவை வலையமைப்புடன் இணைந்து, இந்த சார்ஜிங் உட்கட்டமைப்பு வசதியானது, Rizta Z ஸ்கூட்டரை வைத்திருப்பதும் செலுத்துவதும் எந்தத் தடங்கலும் இல்லாத அனுபவமாக மாற்றுவதற்கான வசதியை வழங்குகின்றது. நாடு முழுவதும் உள்ள Ather வாடிக்கையாளர்களுக்கு ஆதரவளிக்க இந்த வலையமைப்பை Evolution Auto நிறுவனம் தொடர்ந்தும் விரிவுபடுத்தும்.

மின்சாரக் கட்டணங்கள் மற்றும் பயன்பாட்டு முறைகளைப் பொறுத்து, ஒரு கிலோ மீற்றருக்கு சுமார் ரூ. 1.50 அளவிலான அன்றாட போக்குவரத்துச் செலவு ஏற்படுமென மதிப்பிடப்பட்டுள்ளதன் மூலம், குறைந்த பயணச் செலவுகளுக்கான தெரிவாகவும் Rizta Z அமைகிறது. தயாரிப்பு தொடர்பான உதவி, சேவை மற்றும் விற்பனைக்குப் பிந்தைய ஆதரவுக்காக வாடிக்கையாளர்கள் நாடு முழுவதும் உள்ள Evolution Auto நிறுவனத்தின் 37 அனுபவ மையங்கள் மற்றும் 16 சேவை மையங்களின் வலையமைப்பை அணுகலாம். அந்தந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்ட வகையில், நிதிப் பங்காளர்கள் மூலம் வங்கிக் குத்தகை வசதிகளும் கிடைக்கின்றன. தகுதியான வாடிக்கையாளர்களுக்கு ‘Rizta S’ மூலம் மூலம் மாற்றிக் கொள்வதற்கான ரூ. 50,000 வசதியுடன் கூடிய பரந்த Rizta ஸ்கூட்டர் வகைகளை ரூ. 749,900 எனும் விலையில் பெற்றுக் கொள்ள முடியும்.

கொழும்பு அறிமுகத்தைத் தொடர்ந்து, Evolution Auto தனது ‘Meet Rizta’ பிராந்திய ரீதியிலான வீதியோர காட்சிப்படுத்தல்கள் மூலம் Rizta Z ஸ்கூட்டரை இலங்கை முழுவதும் உள்ள 15 நகரங்களுக்குக் கொண்டு செல்லவுள்ளது. இந்தத் திட்டம் கொழும்பு, கண்டி, காலி, யாழ்ப்பாணம், குருணாகல், கம்பஹா உள்ளிட்ட நகரங்களை உள்ளடக்குகின்றன. இது, நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு இந்த ஸ்கூட்டரை ஆராயவும், அதன் அம்சங்களைப் பற்றி அறியவும், சோதனை செலுத்தல்கள் மூலம் அதை அனுபவிக்கவும் வாய்ப்பளிக்கும்.

வாடிக்கையாளர்கள் நவம்பர் 20 முதல் 23 வரை கொழும்பு மோட்டார் ஷோ கண்காட்யைத் தொடர்ந்து, Evolution Auto நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட முகவர் வலையமைப்பு மூலமாக Rizta Z சோதனை ஓட்டத்தை மேற்கொண்டு, அறிமுக விலை வாய்ப்புடன் மற்றும் முன்பதிவு குறித்த செயன்முறை குறித்தும் விசாரித்து அறியலாம்.

Rizta Z அறிமுகத்துடன், Evolution Auto இலங்கையில் கிடைக்கும் Ather வாகன வகைகளை விரிவுபடுத்துகிறது. Ather கொண்டுள்ள தொழில்நுட்பம் மற்றும் Evolution Auto நிறுவனத்தின் வளர்ச்சியடைந்து வரும் விற்பனை முகவர், வாகன சேவை மற்றும் சார்ஜிங் வலையமைப்பின் ஆதரவுடன் உயர் மட்ட ஸ்கூட்டர் பிரிவிலான தெரிவுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

ஊடக தகவல்களுக்கு

மேலும் விவரங்களுக்கு, 077 886 5665 (அனுஷ்கா) என்ற எண்ணை அழைக்கவும்.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *