ஜினசேன (பிரைவட்) லிமிடெட் தனது பொறியியல் ஆற்றல்களை தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவுக்கு விரிவாக்கம் செய்துள்ளது

1905 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட பொறியியல் நிறுவனத்தின் புதிய பிரிவானது, மக்கள், சொத்து மற்றும் வியாபார செயற்பாடுகளின் பாதுகாப்புக்கு முக்கியமான ஒரு துறையில் நிறுவனத்தின் ஆற்றல்களை வியாபித்துள்ளது

ஜினசேன (பிரைவட்) லிமிடெட், தனது தீ மற்றும் பாதுகாப்பு செயற்திட்டப் பிரிவை ஆரம்பித்துள்ளது. அதனூடாக, தீ அனர்த்தப் பாதுகாப்பு துறையில் உபாய ரீதியான விரிவாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் வணிக, தொழிற்துறை மற்றும் நிறுவனசார் உட்கட்டமைப்பு ஆகியவற்றில் பரந்தளவு தீ இனங்காணல், தீ பாதுகாப்பு மற்றும் தீ தடுப்பு தீர்வுகள் போன்ற பொறியியல் நிபுணத்துவத்தை இந்த விரிவாக்கல் ஏற்படுத்தியுள்ளது.

இந்த அறிமுகம் தொடர்பில் ஜினசேன (பிரைவட்) லிமிடெட் முகாமைத்துவ பணிப்பாளர் ஷானி ஜினசேன கருத்துத் தெரிவிக்கையில், “பொறுப்பு வாய்ந்த கட்டட மற்றும் உட்கட்டமைப்பு விருத்தி என்பதில், தீப் பாதுகாப்பு என்பது எப்போதும் முக்கிய அங்கமாக உள்ளடக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு தீப் பாதுகாப்பு தொடர்பில் பரந்த வழிமுறையைப் பெற்றுக் கொடுப்பதற்காக, இந்தப் புதிய பிரிவினூடாக, எமது பொறியியல் நிபுணத்துவத்தை ஒன்றிணைத்து தீயணைப்பு பம்பி தீர்வுகளுடன் ஒன்றிணைந்து, நம்பகமான சேவை ஆற்றல்களை வழங்க முன்வந்துள்ளோம். கட்டமைப்பு வடிவமைப்பு மற்றும் பொருத்துகை முதல் பரிசோதிப்பு மற்றும் பராமரிப்பு வரை நம்பகமான, முடிவு அடிப்படையிலான தீர்வுகளை நிறுவனத்தின் தீப் பாதுகாப்பு தேவைகளுக்காகப் பெற்றுக் கொடுப்பது எமது இலக்காக அமைந்துள்ளது.” என்றார்.

தீ மற்றும் பாதுகாப்பு செயற்திட்டப் பிரிவினால், தீர்க்கப்படக்கூடிய, பாரம்பரிய மற்றும் வயர்லெஸ் தீ சமிக்ஞைக் கட்டமைப்புகள், புகை கண்டறியும் கருவிகள், சிறிய தீயணைப்பு கருவிகள், உலர்த்திகள் மற்றும் ஹோஸ் ரீல்கள், பட்டியலிடப்பட்ட மற்றும் பட்டியலிடப்படாத தீப் பம்பிகள், தீ-தடுப்பு கதவுகள் மற்றும் ஸ்பிரிங்கர்கள் மற்றும் வால்வு கட்டமைப்புகள் போன்றன வழங்கப்படுகின்றன. சிறப்பு வாய்ந்த தீயணைப்புத் தீர்வுகளில் நீராவி, சுத்திகரிப்பான், காபனீரொட்சைட் (CO₂), நுரை மற்றும் சமையலறை சார்ந்த ஈரலிப்பு-இரசாயனங்கள் ஆகியவை அடங்கும். 

ஒவ்வொரு திட்டமும் மூன்று படிகளைக் கொண்ட அணுகுமுறையைப் பின்பற்றுகின்றது: இடர் மதிப்பீடு, தீர்வு வடிவமைப்பு, மற்றும் ஒப்படைப்பிற்கு முன்னரான நிறுவல், ஆய்வு மற்றும் பரிசோதனை மூலமான சரிபார்த்தல். UL மற்றும் LPCB அங்கீகாரங்களைக் கொண்ட அமைப்புகள் NFPA, BS EN, மற்றும் SLS/ISO போன்ற அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச தரநிலைகளுக்கு அமைவாக வடிவமைக்கப்பட்டு நிறுவப்படுகின்றன. ஆரம்பக் கணக்கெடுப்பு மற்றும் வடிவமைப்பிலிருந்து ஸ்தாபிப்பு, ஆய்வு மற்றும் பராமரிப்பு வரை முழுமையான ஆயுட்கால ஆதரவு வழங்கப்படுகின்றது.

1905 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஜினசேன (பிரைவட்) லிமிடெட், இலங்கையின் பழமையான மற்றும் நன்மதிப்பைப் பெற்ற உள்நாட்டு மற்றும் தொழிற்துறை நீர்ப்பம்பி உற்பத்தியாளர்களில் ஒன்றாக அமைந்துள்ளது. மாற்றியமைத்துக் கொள்ளத்தக்க பம்பிகள், நீர் தூய்மையாக்கல், நீர்ப்பாசனம், சோலர் மற்றும் தகவல் தொழில்னுட்ப தீர்வுகள் போன்றன இதன் தீர்வுத் துறைகளில் அடங்கியுள்ளன. நிறுவனத்தின் பொறியியல் திறன்கள், அதன் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவின் மூலம் உட்கட்டமைப்பு மற்றும் கட்டடத் தீ பாதுகாப்புத் தேவைகளுக்காக மேலும் விரிவாக்கப்பட்டுள்ளன.

கட்டடத்தைப் பயன்படுத்துபவர்களின் பாதுகாப்பு, சொத்துகளைப் பாதுகாத்தல் மற்றும் செயல்பாட்டுத் தடங்கல்களுக்கான சாத்தியக்கூறுகளைக் குறைத்தல் ஆகிய அனைத்தும் பயனுள்ள தீ பாதுகாப்பின் மூலம் சாத்தியமாகின்றன. வர்த்தக மற்றும் அலுவலகக் கட்டடங்கள், உற்பத்தி மற்றும் தொழிற்துறை சார்ந்த கட்டிடங்கள், சில்லறை விற்பனை மற்றும் விருந்தோம்பல் நிறுவனங்கள், சுகாதார மற்றும் கல்வி நிறுவனங்கள், உட்கட்டமைப்பு மற்றும் பயன்பாட்டுச் சேவைகள், மற்றும் குடியிருப்புகள் ஆகியவற்றின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட தீர்வுகளின் மூலம் இப்பிரிவு முன்னுரிமைகளுக்கு ஆதரவளிக்க முனைகின்றது.

உட்கட்டமைப்பு மற்றும் கட்டடத் திட்டங்களில் ஈடுபட்டுள்ள அபிவிருத்தியாளர்கள், கட்டட உரிமையாளர்கள், கட்டுமான நிறுவனங்கள், முதன்மை ஒப்பந்தக்காரர்கள், இயந்திர, மின்சார மற்றும் குழாய்ப் பொருத்துகை (MEP) ஒப்பந்தக்காரர்கள், கட்டிடக் கலைஞர்கள், பொறியாளர்கள், ஆலோசகர்கள் மற்றும் கொள்வனவு செய்யும் குழுக்கள் ஆகிய நபர்கள் இந்தத் திட்டத்தின் வாடிக்கையாளர் பிரிவில் அடங்குபவர்களாவர்.

பிரதம செயற்பாட்டு அதிகாரி கயங்க வீரசேகர, பிரதம விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் அதிகாரி சிந்தக விக்ரமசிங்க மற்றும் தீ மற்றும் பாதுகாப்பு பிரிவின் தலைமை அதிகாரி அனோஜ் களுஆரச்சி ஆகியோரின் தலைமைத்துவத்தில், ஜினசேன (பிரைவட்) லிமிடெட், தீ பாதுகாப்புப் பிரிவில் தனது நிலையை வலுப்படுத்தவும், நிறுவனங்கள், கம்பனிகள் மற்றும் உட்கட்டமைப்புப் பங்குதாரர்களுடன் நீடித்த உறவுகளை ஏற்படுத்தவும் முனைகின்றது.

தீ மற்றும் பாதுகாப்பு பிரிவு மற்றும் அதன் தீர்வுகள் பற்றிய மேலதிக தகவல்களுக்கு, பிரிவின் ஹொட்லைன் இலக்கமான +94 74 060 0389 உடன் தொடர்புகொள்ளவும் அல்லது [email protected]என்ற மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தவும். 

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *