புதிய Huawei MatePad T10s: பரந்த பொழுதுபோக்கு அம்சங்களுடன் திரையரங்கே உங்களுக்கு அருகில்

ஸ்மார்ட் தொழில்நுட்ப தீர்வுகளின் முன்னோடியான Huawei, தொழில்நுட்ப ஆர்வலர்களுக்கு அடுத்த நிலை பொழுதுபோக்கு அனுபவத்தை அடையும் வகையில், புதிய டெப்லெட்டை (tablet) அண்மையில் அறிமுகப்படுத்தியது. கண்களுக்கான பாதுகாப்பு உள்ளிட்ட பயனர்களுக்கான அனைத்து பாதுகாப்பு அம்சங்களுடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், ஹர்மன் கார்டன் (Harman Kardon) இசைக்கருவி நிறுவனத்தினால் டியூன் செய்யப்பட்ட இரட்டை ஸ்பீக்கர் சிஸ்டத்தைக் கொண்டு, உச்ச பொழுதுபோக்கு அம்சங்களை வழங்குவதில் கவனம் செலுத்தும் வகையிலான MatePad T10s ஆனது, உலகளாவிய டெப்லெட் ஏற்றுமதியில் தொடர்ந்தும் உச்சத்தில் பயணித்துக் கொண்டிருக்கும், உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனமான Huawei நிறுவனத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ள பல்வேறு அம்சங்கள் நிரம்பிய மற்றுமொரு டெப்லெட் ஆகும்.

MatePad T10s இனது, முக்கியமான ஈர்க்கும் அம்சம், அதன் 10.1 அங்குல Full HD திரையாகும். இது சிறந்த காட்சிகளை வழங்கும் வகையிலான, 1920 x1200 எனும் உச்சசச தெளிவுத்திறனைக் கொண்டுள்ளது. MatePad T10s ஆனது, Huawei இன் வர்த்தக குறியீட்டு தொழில்நுட்பங்களில் ஒன்றான Huawei ClariVu™ இனை உள்ளடக்கியவாறு, ஒவ்வொரு விபரங்களையும் தெளிவானதாகவும் துல்லியமானதாகவும் வழங்குகின்றது. மெல்லிய ஓரங்களை (bezels) கொண்ட இது, மிகவும் அதிநவீன சாதனமாகவும், நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட சாதனங்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளதோடு, இன்றைய தொழில்நுட்ப நுகர்வோரினால் விரும்ப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

Huawei MatePad T10s ஆனது, பொழுதுபோக்கை நாடுவோருக்கு, உயர் ஒலி விசையுடனான இரட்டை ஸ்பீக்கர் அமைப்புடனான ஒலி அனுபவத்தை வழங்குகின்றது. தனித்துவமான, இசை குறியீடான ஹர்மன் கார்டன் தொழில்நுட்பத்தால் வடிவமைக்கப்பட்ட, இரட்டை ஸ்பீக்கர்கள் நீங்கள் இசையைக் கேட்கும்போதும், உங்களுக்கு பிடித்த திரைப்படங்களைப் பார்க்கும்போதும் அதே இயல்பு மாறாத உண்மையான மற்றும் உயர் ரக விபரங்களுடனான ஒலியை வழங்குகின்றன.

MatePad T10s ஆனது, திரைப்படங்களைப் பார்த்தல், இணையத்தில் உலாவல், இலத்திரனியல் புத்தகங்களைப் (E-books) படிப்பதற்கான உற்ற உதவியாளனுக்குரிய அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது. உச்ச அளவில் சமூக ஊடகங்களை பயன்படுத்தும் பயனர்கள் மற்றும் வாசிப்பதில் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவும் வகையில், TÜV Rheinland சான்றளிக்கப்பட்ட கண்களுக்கு இதமான தொழில்நுட்பத்தை இது கொண்டுள்ளது. இதன் மூலம் ஒரு பணியில் தொடர்ந்து ஈடுபடும் போது கண்களுக்கு ஏற்படும் சிரமம் குறைக்கப்பட்டு மிகுந்த சுகம் வழங்கப்படுகிறது. வாசிப்பதில் அதிக ஆர்வமுள்ளவர்களுக்கு மேலுமொரு நல்ல செய்தி யாதெனில், MatePad T10s ஆனது, தனித்துவமான E-Book பயன்பாட்டுக்கு அமைவான வசதியுடன் வருவதால் அவர்களின் வாசிப்பு அனுபவத்தை மேலும் சுவாரஸ்யமாக்குகிறது! அதன் இருண்ட பயன்முறை தெரிவானது, மிருதுவான காட்சி விளைவை வழங்குவதனால், இரவில் கண்களுக்கு ஏற்படும் அழுத்தம் குறைக்கப்படுகிறது.

EMUI 10.1 உடன் இணைந்து Huawei Kirin 710A chipset மூலம் இயக்கப்படும் MatePad T10s, மேம்பட்ட கிரபிக்ஸ் உடன், அன்றாட பணிகளை இலகுவாக மேற்கொள்ளும் வகையிலான விரைவான செயல்திறனையும் வழங்குகிறது. 3GB RAM மற்றும் 64GB சேமிப்பகத்துடன் அதன் செயற்றிறனானது மேலும் அதிகரிக்கப்படுவதுடன், இதன் மூலம் அனைத்து அத்தியாவசிய கோப்புகள் மற்றும் தரவுகளை சேமிக்க முடிகிறது. மேலும் அதன் சேமிப்புக்கான இடத்தை மேலும் நீடிக்க, SD card இற்கான இடத்தையும் அது வழங்குகிறது. EMUI 10.1 இயங்குதளமானது, பணிகளை இலகுவாக மேற்கொள்ளும் வகையிலான மிருதுவாக இயங்கும் பயனர் இடைமுகத்தை வழங்குவதோடு, Huawei App Multiplier  இன் மூலம் ஒரே செயலியின் இரண்டு விண்டோக்களை திறக்கும் அம்சத்தையும் வழங்குகிறது. இவ்வசதி, இணையத்தில் வாசிப்பது மற்றும் உலாவுதல் போன்ற பணிகளின் போது மிகவும் திறன்மிக்கதாக அமைகின்றது.

இது தவிர, பயனர்கள் தங்களது அலுவலக வேலைகளை தடையின்றி மேற்கொள்ள முடிகின்ற அதே நேரத்தில், சிறுவர்கள் விளையாடுவதற்கும் கற்றுக்கொள்வதற்குமான ஒரு ஒரு பிரத்தியேகமான இடத்தையும் வழங்குகிறது. குழந்தைகளுக்கான பகுதியானது, உரிய வகையில் தனிப்பயனாக்கக்கூடியதாகவும் அவர்களைக் கண்காணிக்கும் வகையிலும் அமைந்துள்ளதுடன், பயனர்கள் தங்களது குழந்தைகளுக்கு பொருத்தமான உள்ளடக்கத்தை வழங்குவதனை  நிர்வகிக்கவும் முடிகிறது.

வெளி அம்சங்களை நோக்கும்போது, MatePad T10s ஆனது மிகவும் பயனுள்ள பின்புற மற்றும் முன்பக்க கெமராக்களைக் கொண்டுள்ளதுடன், இது உடனடியான புகைப்படங்களைக் கைப்பற்றுவதற்கான அணுகலையும் வழங்குகிறது. f 2.2 குவியத்தக் கொண்ட 5MP பின்புற கெமரா மற்றும் f2.4 குவியத்தைக் கொண்ட 2MP முன்பக்க கெமரா ஆகியன, எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் உங்கள் நோக்கத்தை நிறைவேற்றும் என்பதில் ஐயமில்லை.

ஒரு டெப்லெட் கணனியானது, பொதுவாக ஒரு பெரிய திரையைக் கொண்டுள்ளதாயின், ஒரு பெரிய மின்கலத்தையும் கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. அந்த வகையில் Huawei MatePad T10s ஆனது, 5,100mAh எனும் பெரிய மின் கொள்ளளவைக் கொண்ட மின்கலத்தை தன்னகத்தே கொண்டுள்ளது.

Huawei MatePad T10s ஆனது, அனைத்து Huawei அனுபவ மையங்களிலும், நாடு முழுவதிலுமுள்ள சிங்கர் காட்சியறைகளிலும் கிடைப்பதோடு, ரூ. 46,999 எனும் நம்பமுடியாத அறிமுக விலையில், Daraz.lk ஊடாக ஒன்லைனில் கொள்வனவு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் (ICT) உட்கட்டமைப்பு மற்றும் ஸ்மார்ட் சாதனங்களின் முன்னணி உலகளாவிய வழங்குநரான Huawei நிறுவனம், முழுமையாக இணைக்கப்பட்ட, புத்திசாலித்தனமான உலகிற்காக, ஒவ்வொரு நபருக்கும், வீட்டுக்கும், நிறுவனத்திற்கும் டிஜிற்றல் தொழில்நுட்பங்களை கொண்டு சேர்ப்பதில் உறுதியாக உள்ளது. உலகளாவிய மிகப்பெரும் தொழில்நுட்ப நிறுவனமான Huawei, புகழ்பெற்ற விருது விழாக்களில் முறையாக கௌரவிக்கப்பட்டு, உலகளாவிய தரக்குறியீடுகளின் தரவரிசையில் தொடர்ந்து இடம்பெற்றுள்ளது. மிகவும் மதிப்புமிக்க உலகளாவிய தரக்குறியீடுகள் தொடர்பான, BrandZ Top 100 பட்டியலில் Huawei 45ஆவது இடத்தையும், Forbes உலகின் மிக மதிப்புமிக்க தரக்குறியீடகள் பட்டியலில் 79ஆவது இடத்தையும் பிடித்துள்ளது. அத்துடன் சமீபத்திய Brand Finance Global 500 மிகவும் மதிப்புமிக்க தரக்குறியீடுகள் பட்டியலில் முதல் 10 மதிப்புமிக்க தரக்குறியீடுகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. Interbrand இனது, சிறந்த உலகளாவிய தரக்குறியீடுகள் பட்டியலில் Huawei 68ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. மேலும் Fortune உலகளாவிய 500 பட்டியலிலும் அது இடம்பிடித்துள்ளது.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *