AI அடிப்படையிலான உற்பத்திப் புத்தாக்கத்திற்காக ‘National AI Awards 2026’ இல் வெண்கல விருதை வென்ற அலுமெக்ஸ்

Hayleys குழுமத்தின் அங்கத்துவ நிறுவனமும் இலங்கையில் அலுமினிய உற்பத்திகளை மேற்கொள்ளும் முன்னணி நிறுவனமுமான Alumex PLC நிறுவனம், கடந்த செப்டெம்பர் 30 இடம்பெற்ற ‘National AI Awards 2026’ (தேசிய செயற்கை நுண்ணறிவு விருதுகள் 2026) நிகழ்வில் ‘Best AI Solution in Manufacturing & Industry 5.0’ (உற்பத்தி மற்றும் தொழிற்துறை 5.0 இல் சிறந்த AI தீர்வு) பிரிவின் கீழ் வெண்கல விருதை வென்றுள்ளது. இந்த விருதானது டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் ஆதரவின் கீழ் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அலுமினிய உற்பத்திகளின் வடிவமைப்பு கண்காணிப்பு தொகுதி (Extruder Production Monitoring System) மற்றும் ஸ்மார்ட் நிகழ்நேர வலுசக்தி கண்காணிப்பு மற்றும் பகுப்பாய்வு அமைப்பு (Smart Real-Time Energy Monitoring & Analytics System) எனும் புத்தாக்க கண்டுபிடிப்பிற்கே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இது வடிவமைப்பு கட்டமைப்பின் டிஜிட்டல் மயமாக்கலுக்கான AI இனால் செயற்படுத்தப்படும் ‘Golden Batch’ அம்சத்தைக் கொண்டுள்ளது. நிறுவனத்தின் உற்பத்தி நடவடிக்கைகளில் உள்ள செயன்முறையின் சீரான தன்மை மற்றும் வலுசக்தி முகாமைத்துவத்துடன் உற்பத்திக் கண்காணிப்பை முன்னெடுப்பதற்காக AI மற்றும் தரவு பகுப்பாய்வுகளை நிறுவனம் பயன்படுத்தியதை இந்த விருது அங்கீகரித்து கௌரவித்துள்ளது. அது மாத்திரமன்றி, இந்தத் தீர்வானது வடிவமைப்பு செயற்பாடுகள் மற்றும் உற்பத்திச் செயற்பாடுகள் குறித்த நிகழ்நேரப் பார்வையை வழங்குவதுடன், அதன் AI மூலம் இயக்கப்படும் ‘கோல்டன் பேட்ச்’ மூலம் செயன்முறை மாற்றங்களை அடையாளம் காணவும், பேட்ச் சீரான தன்மையை மேம்படுத்தவும், வேகமான மற்றும் தரவு சார்ந்த முடிவுகளுக்கு ஆதரவளிக்கவும் உற்பத்தித் தரவுகள் பகுப்பாய்வு செய்யப்படுகின்றன. ஸ்மார்ட் நிகழ்நேர வலுசக்தி கண்காணிப்பு மற்றும் பகுப்பாய்வு அமைப்பானது உற்பத்திச் செயன்முறை முழுவதும் வலுசக்தி நுகர்வைக் கண்காணிக்கிறது. இது வலுசக்தி பயன்பாட்டை மேம்படுத்துவதற்கும் செயற்பாட்டுத் திறனை அதிகரிப்பதற்குமான வாய்ப்புகளை அடையாளம் காண உதவுகிறது.

இந்த வெண்கல விருதானது நிறுவனத்தின் ஸ்மார்ட் உற்பத்தித் துறையிலான தொடர்ச்சியான முன்னேற்றத்தில் ஒரு முக்கிய அடியெடுத்து வைப்பை குறிப்பதுடன், டிஜிட்டல் திறன்களைத் தனது செயற்பாடுகளில் ஒருங்கிணைத்தல் மற்றும் தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்ட, அதன் மூலம் பதிலளிக்கக்கூடிய மற்றும் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் உற்பத்திச் செயன்முறைகளைக் கட்டியெழுப்புதல் ஆகியவற்றில் நிறுவனம் கொண்டுள்ள கவனத்தைப் இது பிரதிபலிக்கிறது. Alumex PLC தனது செயற்பாடுகள் முழுவதும் தொழில்நுட்பத்தின் புத்தாக்கமான பயன்பாடுகளை ஆராய்வதில் தொடர்ச்சியாக அர்ப்பணிப்புடன் உள்ளது.

Alumex PLC பற்றி

Hayleys PLC நிறுவனத்தின் துணை நிறுவனமான Alumex PLC, உயர்தர அலுமினியத் தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் இலங்கையின் முன்னணி நிறுவனமாகும். கட்டுமானம், கட்டடக்கலை மற்றும் தொழில்துறை ரீதியான துறைகளுக்கான புத்தாக்கமான தீர்வுகளில் நிபுணத்துவம் பெற்ற Alumex நிறுவனம், ஜன்னல்கள், கதவுகள், திரைச்சீலை சுவர்கள் உள்ளிட்ட பல்வேறு பரந்த அளவிலான அலுமினிய கட்டமைப்புகளை வழங்குகிறது. நிறுவனம் மூன்று எக்ஸ்ட்ரூஷன் லைன்கள், ஒரு அனோட்டாக்க லைன், மூன்று பவுடர் கோட்டிங் லைன்கள் (தெற்காசியாவின் முதலாவது செங்குத்து வரிசை உள்ளிட்ட) மற்றும் “Ozon” வர்த்தகநாமத்தின் கீழ் வெவ்வேறு உலோகக் கலவைகளில் குறைந்த காபன் அலுமினிய உருளைகளை உற்பத்தி செய்வதற்கான மேம்பட்ட அலுமினிய மீள்சுழற்சி தொழிற்சாலை ஆகியவற்றை உள்ளடக்கிய மூன்று உற்பத்தி மையங்களை இயக்குகிறது. Alumex நிறுவனம் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, இத்தாலி, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளுக்கு தமது உற்பத்திகளை ஏற்றுமதி செய்கிறது. அத்துடன் அலுமினியத்தின் பொறுப்பான உற்பத்தி, மூலாதாரத்தை பொறுப்புடன் பயன்படுத்தல் மற்றும் பணிப்பொறுப்புக்கான Aluminium Stewardship Initiative (ASI) செயல்திறன் தரச் சான்றிதழைப் பெற்ற முதலாவது இலங்கை நிறுவனமும் இதுவாகும்.

Hayleys PLC பற்றி

இலங்கை பொருளாதாரத்தின் ஒரு முக்கிய அங்கமான Hayleys PLC, கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் பன்முகம் கொண்ட குழுமம் ஆகும். இது 17 தொழில்துறைப் பிரிவுகளில் வணிகங்களையும் 20 இற்கும் மேற்பட்ட நாடுகளில் செயற்பாடுகளையும் கொண்டுள்ளது. இக்குழுமம் இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானத்தில் சுமார் 5% ஐக் கொண்டுள்ளதுடன், வீடுகள் மற்றும் தொழில்துறை சார்ந்த இறப்பர் கையுறைகளுக்கான உலகளாவிய தேவையில் சுமார் 5% மற்றும் தேங்காய் சிரட்டை அடிப்படையில் செயற்படும் காபனை 16% உலகளாவிய சந்தைப் பங்கைப் பிடித்துள்ள முன்னணி உலகளாவிய விநியோகஸ்தராக விளங்கும் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முன்னணியில் உள்ளது. துணி, அலுமினிய உற்பத்திகள், பதப்படுத்தப்பட்ட பழங்கள் மற்றும் மரக்கறிகள், கலப்பின மலர் விதைகள் மற்றும் இழைய வளர்ப்பு தாவரங்கள் ஆகியவற்றின் இலங்கையின் மிகப்பாரிய உற்பத்தியாளராகவும் ஏற்றுமதியாளராகவும் Hayleys திகழ்கிறது. 38,000 இற்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்டும், தனது மதிப்புச் சங்கிலிகள் மூலமும் 27,000 இற்கும் மேற்பட்டோருக்கு மறைமுக வாழ்வாதாரங்களுக்கான ஆதரவை வழங்குவதன் மூலமும், இலங்கையின் மிகப்பெரிய தனியார் துறை வேலை வழங்குநர்களில் ஒன்றாக Hayleys தொடர்ச்சியாக திகழ்ந்து வருகிறது.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *