தொடர் வரவேற்பைப் பெற்று வரும். Huawei இன் நோவா தொடர்

உலகளாவிய ஸ்மார்ட்போன் வர்த்தநாமமான Huawei இன் நோவா தொடர் உலகளாவிய ரீதியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. நோவா தொடரில் உள்ள ஒவ்வொரு ஸ்மார்ட்போனும் பணத்துக்கான சிறந்த பெறுமதியை வழங்கும் சிறப்பம்சங்களுடன் புதிய பாவனையாளர் அனுபவத்தை வழங்குவதுடன், நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.  Huawei Nova 7i, Huawei Nova 7 SE ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களும் நோவா குடும்பத்தில் புதிதாக நுழைந்துள்ளதுடன், உண்மையில் அவை நோவா தொடரைச் சேர்ந்த உறுதியான ஸ்மார்ட்போன்களாகும்.

Huawei Nova 7i கவர்ச்சியான நான்கு பக்க வளைந்த வடிவமைப்போடு வருகிறது, இது உள்ளங்கையில் பிடித்து வைத்திருக்கவும் மிகவும் சௌகரியமானதாகும். Nova 7i இன் முக்கிய ஈர்ப்புகளில் ஒன்று AI Quad camera அமைப்பாகும், இது பாவனையாளர்களுக்கு பகலோ அல்லது இரவோ எதுவாக இருந்தாலும் பிரம்மிக்க வைக்கும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் எடுக்க உதவுகிறது. இதன் 48MP பிரதான கெமரா, 8MP Ultra-wide கமெரா, 2MP Macro மற்றும் 2MP Depth கெமராக்கள் தொழில் தரமான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க உதவுகின்றன. புகைப்படம், வீடியோ, Pro, Night, Portrait, Panaroma, HDR, slow motion, Super Macro மற்றும் Time Lapse போன்ற பல அம்சங்கள் மூலம் உங்கள் புகைப்படத் திறனை வெளிக்காட்ட உதவுகின்றது. இதற்கு மேலதிகமாக bokeh effect மற்றும் AI portrait color ஆகிய அம்சங்கள் Nova 7i மூலம் பிடிக்கப்படும் படங்களின் சினிமா விளைவுகளை மேம்படுத்துகின்றது.

இதன் திரையின் இடது பக்க மூலையில் ஒரு சிறிய துளையாக (Punch hole) உள்ளடக்கப்பட்டுள்ள முன்பக்க கமெராவானது 16MP என்பதுடன் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில்,  இயற்கையான வண்ணங்களுடன் செல்பிக்களை எடுக்கக்கூடியது. Kirin 710 chipset இனால் வலுவூட்டப்படுவதுடன், 8GB RAM மற்றும் 256GB வரை அதிகரிக்கக்கூடிய 128 உள்ளக நினைவகத்தையும் கொண்டுள்ளது. இது தடையற்ற multi-tasking திறன்களைக் கொண்ட, ஒரு சிறந்த பாவனையாளர் அனுபவத்தைத் தரும் வலுவான ஸ்மார்ட்போன் Nova 7i .

இது பக்கவாட்டில் அமைந்த fingerprint reader இனைக் கொண்டுள்ளதுடன், நொடிகளில் உங்கள் சாதனத்தை unlock செய்யும் வாய்ப்பையும் வழங்குகின்றது. Nova 7i இன் 4200mAh மின்கலமானது நீடித்த நேர பாவனையையும், 40W Huawei Super Chargeதொழில்நுட்பம் 70% வீதத்தை வெறும் 30 நிமிடங்களில் மின்னேற்றம் செய்துகொள்ளவும் உதவுகின்றமையானது, இன்றைய வேகமான வாழ்வுக்கு இவை மிகுந்த உதவியாகவுள்ளன.

இதன் quad கெமராவானது  Autofocus  மற்றும்  image stabilization  மற்றும் 960fps வரை slow motion 4K video recording இனை ஆதரிக்கிறது. இதன் 16MP செல்ஃபி கெமராவும் இணையாக சக்தி வாய்ந்தது மற்றும் நிஜ வாழ்க்கை படங்களை எடுக்க உங்களுக்கு வாய்ப்பு வழங்குகின்றது. இதன்BM3D denoising வழிமுறை  இரவு நேரங்களிலும் இரைச்சல் அற்ற படங்களை எடுக்க உதவுகின்றது. இந்த அம்சங்கள் அனைத்துடனும் Nova 7 SE மொபைல் புகைப்படக் கலைஞர்களிடையே மிகவும் விரும்பப்படும் சாதனங்களில் ஒன்றாக இருக்க வழி செய்துள்ளன.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *