புதிய வாயுச்சீராக்கி, சுவிட்ச், சொக்கெட் வகைகள் மூலம் தனது தயாரிப்பு எல்லையை விரிவுபடுத்தும் Delmege Building Products

இலங்கை, கொழும்பு – ஒக்டோபர் 08, 2026

கடந்த ஒக்டோபர் 08ஆம் திகதி கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்வில், ‘Delmege Building Products’ (Delmege & Forsyth Co. Ltd. இன் ஒரு முக்கிய பிரிவு), தனது புதிய தயாரிப்பான ‘Delmege வாயுச்சீராக்கிகள்’ (AC) மற்றும் புதிய வடிவிலான சுவிட்ச்கள், சொக்கெட்டுகளை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியதன் மூலம் தனது பயணத்தில் மற்றுமொரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.

இந்த அறிமுகமானது, Delmege Building Products நிறுவனத்தின் விரிவாக்கத்தில் மற்றுமொரு மைல் கல்லை எட்டியுள்ளதைக் குறிப்பதுடன், தரமான தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளின் விரிவான தயாரிப்புகளைக் கட்டியெழுப்பும் அதன் ஆர்வத்தை மீள உறுதிப்படுத்துகிறது. அத்துடன் நுகர்வோரின் அதிகரித்து வரும் தேவைகளுக்கான நம்பிக்கையான, ‘ஒரே கூரையின் கீழ் அனைத்து தீர்வுகளையும் வழங்கும்’ இடமாக அதன் நிலையை மேலும் வலுப்படுத்துகிறது.

இதன் அறிமுகம் குறித்து Vallibel One நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திருமதி தினுஷா பாஸ்கரன் கருத்து வெளியிடுகையில், “Delmege Building Products நிறுவனத்தின் விரிவாக்கமானது, பரந்த மற்றும் ஒருங்கிணைந்த சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கான எமது பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லை பிரதிபலிக்கிறது. நுகர்வோரின் மாறுபட்டு வரும் தேவைகள் மற்றும் சந்தை வாய்ப்புகளுக்கு ஏற்ப தொடர்ச்சியாக கிடைக்கும் தயாரிப்புகளுடன், கட்டடங்கள் மற்றும் வாழ்வியல் தீர்வுகளுக்கான நம்பிக்கையான ஒரே இடமாக Delmege இனை நிறுவுவதே எமது தொலைநோக்குப் பார்வையாகும்.” என்றார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “வாயுச்சீராக்கிகள், சுவிட்ச்கள், சொக்கெட்டுகளின் அறிமுகம் இந்தப் பயணத்தின் ஒரு முக்கிய அங்கமாகும். எமது தயாரிப்புகளின் விரிவுபடுத்தலின் போது, அவற்றை மிகவும் இலகுவாக அணுகக்கூடியதாக மாற்றுவதிலும், பல்வேறு பிரிவுகள் மற்றும் வழிகள் மூலம் வாடிக்கையாளர்களை சென்றடைந்து சேவை செய்யும் முறைகளை வலுப்படுத்துவதிலும் நாம் கவனம் செலுத்துகிறோம். இந்த பரந்த அணுகுமுறையானது, எமது வாடிக்கையாளர்களுடன் வலுவான மற்றும் அர்த்தமுள்ள உறவை உருவாக்கும் அதே வேளையில், சிறந்த வசதியையும் மதிப்பையும் வழங்க எம்மை அனுமதிக்கும் என நாம் நம்புகிறோம்.” என்றார்.

சமீபத்திய தயாரிப்பு விரிவாக்கத்தில் Delmege வாயுச்சீராக்கிகள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. இவை குடியிருப்புகள் மற்றும் வணிக பயன்பாடுகளுக்கான சக்தி வாய்ந்த, திறனான, நீடித்த மற்றும் நம்பகமான குளிர்ச்சியை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. 12,000, 18,000, 24,000 BTU கொள்ளளவுகளில் கிடைக்கும் இந்த தயாரிப்புகள், திறனான மின்சக்தி நுகர்வுக்கு ஆதரவளிக்கும் அதேவேளையில், நிலையான சௌகரியத்தை வழங்க, மேம்பட்ட தொழில்நுட்பத்தை இன்வேர்ட்டர் (Inverter) செயற்பாட்டுடன் இணைக்கிறது.

உஷ்ணமான காலநிலை நிலைமைகளுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த வாயுச்சீராக்கிகள், 55°C வரையிலான வெப்பநிலையிலும் செயற்படுகின்ற ‘Extreme Climate Cooling’ (உஷ்ண காலநிலைக்கு எதிரான குளிராக்கல்) திறன் மற்றும் 30 செக்கனில் விரைவான குளிர்ச்சி செயற்பாட்டைக் கொண்டுள்ளன. ‘I FEEL’ நுண்ணறிவு வெப்பநிலை உணரி தொழில்நுட்பமானது, ரிமோட் கண்ட்ரோலைச் சுற்றியுள்ள வெப்பநிலையைக் கண்டறிந்து அதிக சௌகரியத்தை வழங்குகிறது, அதே நேரத்தில் ‘Vector Precision Air Supply’ அம்சமானது, மிகவும் பயனுள்ள குளிர்ச்சிக்கான காற்றின் போக்கை மேம்படுத்துகிறது.

இந்த வாயு சீராக்கிகள் துருப்பிடிப்பதில் இருந்து பாதுகாக்கவும், நீண்ட காலம் உழைக்கவும் ‘Gold Fin’ தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளன. மேலும், இதிலுள்ள இன்வேர்ட்டர் தொழில்நுட்பம் மற்றும் ஸ்மார்ட் Fuzzy Logic முறை ஆகியன, அறையின் குளிரூட்டல் தேவைக்கேற்பச் செயல்பட்டு மின்சாரச் செலவை பெருமளவில் குறைக்க உதவுகின்றன. மேலதிக அம்சங்களாக ECO Mode, குழந்தைகளிடமிருந்தான பாதுகாப்புக்கான Child Safety Lock, தன்னியக்க செயற்பாடு (Auto Restart), குறைந்த நேரத்திற்கு மின்சாரம் இருக்கும் காலங்களில் நிலையான செயற்பாட்டிற்கான ‘GEN Mode’ ஆகியனவும் இதில் உள்ளடங்கும்.

வாடிக்கையாளர்களுக்கு முழுமையான நம்பிக்கையையும் நிம்மதியையும் வழங்கும் நோக்கில், டெல்மேஜ் வாயு சீராக்கிகளுக்குச் சிறந்த சேவைகள் வழங்கப்படுகின்றன. வாயு சீராக்கியை நிறுவுவதற்கு 3 மீற்றர் வரையிலான குழாயமைப்பு முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். முதல் வருடத்தில் மூன்று முறை இலவசப் பராமரிப்புச் சேவைகள் வழங்கப்படும். இதன் பிரதான பாகமான இன்வெர்ட்டர் கம்ப்ரஸருக்கு 5 ஆண்டுகள் உத்தரவாதம் வழங்கப்படுகிறது.

வாயு சீராக்கிகளுடன் சேர்த்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய டெல்மேஜ் சுவிட்சுகள் மற்றும் சாக்கெட்டுகள், பாதுகாப்பு, நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் நவீன வடிவமைப்பைக் கொண்டுள்ளன. வெள்ளை, தங்கம் மற்றும் கருப்பு ஆகிய நிறங்களில் கிடைக்கும் இவை, பிரீமியம் தர “Baby Skin” தொடு உணர்வையும், கண்ணாடி மேற்பகுதியையும் (Glass-top), நவீன வீடுகளுக்கு ஏற்ற சட்டகம் இல்லாத (Frameless) வடிவத்தையும் கொண்டுள்ளன. இவை இரண்டுமே இலங்கையின் தர நிர்ணய நிறுவனத்தின் (SLSI) அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன. இதிலுள்ள மேம்பட்ட பாதுகாப்பு வசதி கொண்ட 13A இரட்டை-முனை சாக்கெட்டுகள் (Double-Pole Sockets), வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்குக் கூடுதல் பாதுகாப்பை உறுதி செய்கின்றன.

இந்த அறிமுகம் குறித்து Delmege Building Products நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி பிரசன்ன சேனாரத்ன தெரிவிக்கையில், “Delmege வாயுச்சீராக்கிகள் மற்றும் எமது புதிய சுவிட்ச்கள், சொக்கெட்டுகளின் அறிமுகமானது, இலங்கை நுகர்வோரின் அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்யும் நடைமுறை மற்றும் தரமான தீர்வுகளை வழங்குவதற்கான எமது திறனை மேலும் வலுப்படுத்துகிறது. இன்றைய வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை எமது தயாரிப்புகள் பூர்த்தி செய்வதை உறுதி செய்யும் அதே வேளையில், செயல்திறன், நீண்ட ஆயுள், பாதுகாப்பு மற்றும் மதிப்பை வழங்கும் அம்சங்களை ஒன்றிணைப்பதில் நாம் கவனம் செலுத்தியுள்ளோம்.” என்றார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “எமது தயாரிப்புகளுடன் இணைந்துள்ள எமது ஆதரவும் இங்கு மிக முக்கிய இடத்தை வகிக்கிறது. நிறுவுதல் மற்றும் பராமரிப்பு சேவை முதல் எமது நாடளாவிய விற்பனைக்குப் பிந்தைய ஆதரவு வரை, வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் கொள்வனவு செய்யும் தயாரிப்பு குறித்த நம்பிக்கையையும் தொடர்ச்சியான மன அமைதியையும் வழங்க நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறோம். எனவே, இந்த புதிய தயாரிப்புகளின் அறிமுகங்கள் வெறுமனே எமது தயாரிப்பு எல்லையின் விரிவாக்கம் மட்டுமல்லாது, நம்பிக்கையான Delmege வர்த்தகநாமத்தின் கீழ் மிகவும் முழுமையான வாடிக்கையாளர் வாக்குறுதியை வழங்குவதற்கான எமது அர்ப்பணிப்பின் பிரதிபலிப்பாகும்.” என்றார்.

இந்த சமீபத்திய அறிமுகங்கள் Delmege Building Products நிறுவனத்தின் தயாரிப்புகளை மேலும் வலுப்படுத்துவதோடு, நீர் சூடாக்கிகள், சுடுநீர் குளியலறை தொகுதிகள், சுடுநீருக்கான குழாய்கள், மின்விசிறிகள், LED மின்விளக்குகள், நீர்ப்பம்பிகள், மின்சார உபகரணங்கள் மற்றும் இணைப்பாகங்கள் ஆகியனவும் இதில் உள்ளடங்குகின்றன. நாடளாவிய விற்பனைக்குப் பிந்தைய சேவையால் ஆதரிக்கப்படும் இந்த பரந்த தயாரிப்புகள் ஆகியன, தரமான கட்டடம் மற்றும் வாழ்க்கை முறைத் தீர்வுகளுக்கான நம்பிக்கையான ஒரே இடமாக மாறுவதற்கான Delmege Building Products நிறுவனத்தின் தொலைநோக்குப் பார்வையை பிரதிபலிக்கின்றன.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *