Hayleys Agriculture Holdings Limited, BMICH இல் கடந்த ஓகஸ்ட் 21 முதல் 23 வரை நடைபெற்ற ‘ProFood, ProPack & AgBiz 2026’ கண்காட்சியில் தனது புதிய ‘Hayleys Grain & Food Processing Machinery’ (ஹேலீஸ் தானிய மற்றும் உணவுப் பதப்படுத்தல் இயந்திர) தொகுதியை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் இலங்கையின் தானிய மற்றும் உணவுப் பதப்படுத்தல் தொழில்துறைகளுக்கான பிரத்தியேக இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்பத் தீர்வுகளை வழங்கும் வகையில் தனது தயாரிப்புகளை பரந்த அளவில் விரிவுபடுத்தியுள்ளது.
இது தொடர்பான வணிகத்தை தொழில்துறை சார்ந்த முக்கிய தரப்பினருக்கு அறிமுகப்படுத்துவதற்கும், உணவுப் பதப்படுத்தல் நடவடிக்கைகளில் அதிக திறன், தரம், சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த வடிவமைக்கப்பட்ட, மேம்பட்ட தீர்வுகளைக் காட்சிப்படுத்துவதற்கும் ‘ProFood, ProPack & AgBiz 2026’ தளத்தை Hayleys Agriculture பயன்படுத்திக் கொண்டது.

Hayleys தானிய மற்றும் உணவு பதப்படுத்தும் இயந்திரத் தொகுதியானது, தானியங்களை உலர்த்தும் மற்றும் சேமிக்கும் தொகுதிகள், உயர்தர அரிசி ஆலை இயந்திரங்கள், பிரத்தியேக உணவுப் பதப்படுத்தும் உபகரணங்கள், உணவு உலோகத்தைக் கண்டறியும் தொகுதிகள், சுகாதாரத் தீர்வுகள், ஒன்லைன் செயன்முறை கட்டுப்பாட்டு தொகுதிகள் மற்றும் உணவு மற்றும் பானங்கள் தொழில்துறையின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய வடிவமைக்கப்பட்ட ஏனைய பதப்படுத்தும் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.
இந்த அறிமுகமானது, விவசாயம் மற்றும் உணவு மதிப்புச் சங்கிலிகளில் இயந்திரமயமாக்கல், தொழில்நுட்பம் மற்றும் மதிப்புக்கூட்டல் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துகின்ற பரந்த, தீர்வுகள் சார்ந்த அமைப்பாக, விவசாய உள்ளீடுகளில் வலுவான அடித்தளத்தைக் கொண்டுள்ள Hayleys Agriculture பரிணாமம் அடைவதைக் காண்பிக்கிறது.

இக்கண்காட்சியின் மற்றுமொரு முக்கிய அம்சமாக Sunfrost (Pvt) Ltd நிறுவனத்தின் ‘கொவி அருண’ தயாரிப்புகள் மற்றும் ‘Island Magic Peanut Spread’ ஆகியன புதுப் பொலிவுடன் மீள அறிமுகப்படுத்தப்பட்டமையை குறிப்பிடலாம். புதிய தோற்றம் மற்றும் வர்த்தகநாம பெறுமதியைக் கொண்டுள்ள ‘கொவி அருண’ தயாரிப்புகள், அன்றாட இலங்கைச் சமையலுக்குப் பொருத்தமான, வசதியான, தரமான தயாரிப்புகளை தொடர்ச்சியாக வழங்கி வருகிறது.
நேரடியாக சுவைத்தல் மற்றும் நேரடிச் சமையல் செயன்முறை விளக்கங்கள் மூலம் பார்வையாளர்கள் இந்தத் தயாரிப்புகளின் பல்வேறுபட்ட பயன்பாடு தொடர்பான அறிவைப் பெற்றுக் கொண்டனர். இந்தச் செயற்பாடானது தயாரிப்புகள், பொருட்கள் மற்றும் அவற்றின் பல்வேறு பயன்பாடுகள் பற்றிய நேரடியான புரிதலை நுகர்வோருக்கு வழங்கியது.
விவசாய இயந்திரமயமாக்கல் மற்றும் துல்லியமான தொழில்நுட்பத்தில் தனது கவனம் அதிகரித்து வருவதை, அதிவேக விவசாய ட்ரோன் அனுபவத்தின் மூலம் Hayleys Agriculture வெளிப்படுத்தியது. பங்கேற்புடனான ‘AR’ சார்ந்த விளையாட்டு அனுபவத்தின் மூலம் நவீன விவசாயத்தில் ட்ரோன் தொழில்நுட்பத்தின் பங்கு குறித்து இதன்போது பார்வையாளர்களுக்கு காண்பிக்கப்பட்டது. அதே வேளையில், விவசாய நடவடிக்கைகளில் திறன், உற்பத்தித்திறன் மற்றும் துல்லியத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட விவசாய ட்ரோன்கள் மற்றும் ஏனைய இயந்திரமயமாக்கல் தீர்வுகளை விவசாய உபகரணப் பிரிவானது, காட்சிப்படுத்தியது.


அத்துடன், விவசாய உபகரணங்கள், தானிய மற்றும் உணவுப் பதப்படுத்தும் இயந்திரங்கள், விலங்கு ஆரோக்கியம், சூழல் முகாமைத்துவ சேவைகள், பயிர் பாதுகாப்பு மற்றும் நடுகைப் பொருட்கள், உரங்கள், மதிப்பு கூட்டப்பட்ட விவசாய உற்பத்திகள் முழுவதிலும் Hayleys Agriculture நிறுவனத்தின் பரந்துபட்ட இருப்பை இக்கண்காட்சி நிரூபித்தது.
தமது நிறுவனத்தின் பங்கேற்பு குறித்து Hayleys Agriculture Holdings Limited நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ஜயந்தி தர்மசேன கருத்துத் தெரிவிக்கையில், “Hayleys Agriculture, தரமான உள்ளீடுகள், நிபுணத்துவம் மற்றும் தீர்வுகள் மூலம் விவசாயிகள் மற்றும் பரந்துபட்ட விவசாயத் துறைக்கு ஆதரவளிப்பதன் மூலம் தனது அடித்தளத்தைக் கட்டியெழுப்பியுள்ளது. இன்று, தொழில்துறையின் வளர்ந்து வரும் தேவைகளுக்குப் பதிலளிக்கும் வகையில் இயந்திரமயமாக்கல், தொழில்நுட்பம் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட தீர்வுகளில் அதிக முதலீடு செய்வதன் மூலம் நாம் அதனை விரிவுபடுத்துகிறோம்.”
“ஹேலீஸ் தானிய மற்றும் உணவுப் பதப்படுத்தும் இயந்திர தொகுதியின் அறிமுகமானது இந்தப் பயணத்தில் ஒரு முக்கிய படியாகும். இது இலங்கையின் தானிய மற்றும் உணவுப் பதப்படுத்தும் தொழில்துறைக்கு உயர்தர இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்பத் தீர்வுகளைக் கொண்டுவர எமக்கு உதவுகிறது. அதே நேரத்தில், மீள் புதுப்பிக்கப்பட்ட கொவி அருண தயாரிப்புகளானவை இன்றைய நுகர்வோருக்கு பொருத்தமான, மதிப்புக் கூட்டப்பட்ட உணவுத் தெரிவுகளை உருவாக்குவதிலான எமது தொடர்ச்சியான கவனத்தைப் பிரதிபலிக்கிறது.”
“ProFood, ProPack & AgBiz 2026 கண்காட்சியில் எமது பங்கேற்பானது, புத்தாக்கங்களை நடைமுறைத் தேவைகளுடன் இணைப்பதற்கும், விவசாய மற்றும் உணவு மதிப்புச் சங்கிலிகளில் அதிக மதிப்பை உருவாக்குவதற்குமான எமது அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது” என்றார்.
Hayleys Grain & Food Processing Machinery அறிமுகம் மூலம், விவசாய இயந்திரமயமாக்கல், தொழில்நுட்பம் மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட உணவுத் தீர்வுகளில் தொடர்ச்சியான முதலீடுகளுடன், இலங்கையின் விவசாய மற்றும் உணவு மதிப்புச் சங்கிலிகளில் ஒரு ஒருங்கிணைந்த தீர்வு வழங்குநராக தனது நிலையை மேலும் வலுப்படுத்தி, அதிக உற்பத்தித்திறன், திறன் மற்றும் நீண்டகால தொழில்துறை வளர்ச்சிக்கு Hayleys Agriculture ஆதரவளிக்கிறது.