ஒழுங்குமுறைமீள்வடிவமைப்பிற்குஐரோப்பியகிரிப்டோசந்தைஉட்பட்டுள்ளநிலையில்,தனதுஐரோப்பியஒன்றியஅர்ப்பணிப்பை MiCAR இன்கீழ்வலுப்படுத்தும் Bybit EU

அங்கீகரிக்கப்படாத பரிமாற்ற நிறுவனங்கள் தமது ஐரோப்பிய ஒன்றிய செயற்பாடுகளை இடைநிறுத்தி வரும் வேளையில், ஒரு சுமார் 10 மில்லியன் பயனர்கள் நிச்சயமற்ற நிலைமாற்றத்தை எதிர்கொண்டுள்ளனர்

ஐரோப்பாவின் கிரிப்டோ சொத்துகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின் (Markets in Crypto-Assets Regulation – MiCAR) இறுதி நிலைமாற்றக் காலக்கெடு 2026 ஜூலை 01 ஆம் திகதி நிறைவடைந்துள்ள நிலையில், இந்த அமுலாக்க திகதிக்கு முன்னதாகவே முழுமையான ஒழுங்குமுறை அங்கீகாரத்தை பெற்ற பரிமாற்ற நிறுவனங்களின் (exchanges) குழுவில் பைபிட் ஐரோப்பா (Bybit EU GmbH) நிறுவனமும் இணைந்துள்ளது. இந்நிறுவனம் இந்த நிலைமாற்றம் நிறைவடைவதற்கு சுமார் ஒரு வருடத்திற்கு முன்னரே ஒஸ்ட்ரியாவின் நிதிச் சந்தை ஆணைக்குழுவிடமிருந்து (FMA) தனது அனுமதிப்பத்திரத்தைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜூலை 01 காலக்கெடுவானது ஐரோப்பிய பொருளாதாரப் பகுதிகள் (EEA) முழுவதிலுமான நிலைமாற்றக் காலத்தின் நிறைவைக் குறிக்கிறது. இதன் பின்னர் அங்கீகரிக்கப்படாத கிரிப்டோ சொத்து சேவை வழங்குநர்கள் (Crypto-Asset Service Providers) ஐரோப்பிய பிணையங்கள் மற்றும் சந்தைகள் ஆணைக்குழுவின் (ESMA) வழிகாட்டலின் கீழ் தங்களது செயற்பாடுகளை நிறைவு செய்யும் செயன்முறைகளை முன்னெடுக்க வேண்டும். பல முக்கிய கிரிப்டோ பரிமாற்ற நிறுவனங்களால் சரியான நேரத்தில் MiCAR அங்கீகாரத்தைப் பெற முடியாமல் போனதால், அவை ஐரோப்பிய ஒன்றிய சந்தைகளில் தங்களது சேவைகளை வழங்குவதிலிருந்து கட்டுப்படுத்தப்பட்டுள்ளன அல்லது வெளியேறியுள்ளன. இது சுமார் 10 மில்லியன் பயனர்களை ஒரு நிச்சயமற்ற சூழ்நிலைக்கு தள்ளியுள்ளது.

MiCAR இற்கான தகுதிகள் எவை?

ஐரோப்பிய பொருளாதாரப் பகுதியில் இயங்கும் கிரிப்டோ சொத்து சேவை வழங்குநர்களுக்கு ஒரு ஒருங்கிணைந்த கட்டமைப்பை MiCAR நிறுவுகிறது. இந்த அங்கீகாரத்தைப் பெறுவதற்கு, பரிமாற்ற நிறுவனங்கள் போதிய மூலதனத் தேவைகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும். சுயாதீனமான பாதுகாப்புத் தரநிலைகளை (independent custody standards) நிரூபிக்க வேண்டும் என்பதுடன், அங்கீகரிக்கப்பட்ட தேசிய ஒழுங்குபடுத்தல் அமைப்பால் சரிபார்க்கப்பட்ட நுகர்வோர் பாதுகாப்பு கடமைகளுக்கு இணங்க வேண்டும். Bybit EU இற்கான இந்த அங்கீகாரமானது, வாடிக்கையாளர்களின் சார்பாக கிரிப்டோ சொத்துக்களைப் பாதுகாத்தல், பரிமாற்றம் செய்தல், மாற்றுதல், முதலீடு செய்தல் ஆகிய செயற்பாடுகளை உள்ளடக்கியுள்ளது.

பதில் நடவடிக்கை எடுக்காமையினாலான ஆபத்து

தளத்திலிருந்து மாறும் சந்தர்ப்பங்களின் போது பயனர் மந்தநிலை (user inertia) என்பது மிகவும் பொதுவான ஆபத்துமிக்க காரணிகளில் ஒன்றாகும் என, நுகர்வோர் தொடர்பான பாதுகாப்புக் குழுக்கள் சுட்டிக்காட்டியுள்ளன. அங்கீகரிக்கப்படாத தளங்கள் தங்களது செயற்பாடுகளை நிறுத்தும்போது, சரியான முறையில் நிதியை மீளப் பெறுவதற்கான கால அவகாசம் பெரும்பாலும் மிகக் குறுகியதாகவே காணப்படும். அனுமதிப்பத்திரம் பெறாத தளங்களைப் பயன்படுத்தும் பயனர்களின் செயற்பாடுகள் முடக்கப்பட்டால், சட்டரீதியான தீர்வுகள் கிடைப்பது மிகவும் கடினமாகும்.

Bybit இன் நிலைப்பாடு

Bybit EU ஆனது, இந்த நிலைமாற்றக் காலம் முழுவதும் எவ்வித இடையூறுமின்றி தனது செயற்பாடுகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து வந்துள்ளது.

இது குறித்து, Bybit EU நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மசூர்கா ஷெங் (Mazurka Zeng) கருத்துத் தெரிவிக்கையில், “தெளிவு, தொடர்ச்சியான தன்மை, நீண்டகால ஒழுங்குமுறைக்கான தயார்நிலையை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்ட தளங்களையே பயனர்கள் தற்போது அதிகளவில் மதிக்கிறார்கள். அத்தகையதொரு எதிர்காலத்திற்கு ஆதரவளிப்பதற்காகவே Bybit EU நிறுவனம் நிறுவப்பட்டுள்ளது.” என்றார்.

ஜூலை 01 நிலைமாற்றக் காலக்கெடுவானது உலகளாவிய கிரிப்டோ சந்தையில் ஒரு அர்த்தமுள்ள திருப்புமுனையை ஏற்படுத்துவதை குறிக்கிறது என்றும், தளங்களை பயனர்கள் மதிப்பீடு செய்யும்போது ஒழுங்குமுறை வெளிப்படைத்தன்மைக்கு அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை இது எடுத்துக் காட்டுகிறது என்றும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்த கட்டுரையில் உள்ள விடயங்கள் தகவல்களை வழங்கும் நோக்கங்களுக்காக மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது. கிரிப்டோ சொத்து தளங்கள் அல்லது முதலீடுகள் குறித்து ஏதேனும் முடிவுகளை எடுப்பதற்கு முன்னர், சொந்தமாக ஆராய்ச்சி செய்யுமாறு வாசகர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். கிரிப்டோ சொத்துகளில் முதலீடு செய்வது அபாயங்களுக்கு உட்பட்டதாகும்.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *