ஸ்மார்ட் கடிகாரங்கள் மற்றும் வயர்லெஸ் இயர்பட்ஸ் போன்ற அணியும் தொழில்நுட்பங்களின் பாவனை புதிய உயரத்தை எட்டியுள்ள நிலையில், உலகளாவிய ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான Huawei, இலங்கையில் உள்ள அணியும் தொழில்நுட்ப தயாரிப்புகளுக்கான ஆர்வலர்களுக்காக உயர் தரமான தயாரிப்பு வரிசையை சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
தற்போது உலகளாவிய ரீதியில் அணியும் தொழில்நுட்பங்களுக்கான சந்தையில் முன்னணியில் திகழும் நிறுவனமான Huawei, முதற்தரம், மத்திய தரம் மற்றும் ஆரம்ப நிலை என அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களுக்காகவும் பல்வேறு தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி வருகின்றது. Huawei Watch GT2 Pro, Huawei FreeLace Pro, Huawei FreeBuds Pro மற்றும் Huawei Sound X ஆகியன Huawei’ இன் அணியும் தொழில்நுட்ப தயாரிப்பு வரிசையில் புதிதாக இணைந்து கொண்ட தயாரிப்புகளாகும்.
புதிய Huawei Watch GT2 Pro, நேர்த்தியான, இலகு நிறையில், சப்பயரினால் உருவாக்கப்பட்ட முகப்பையும், டைட்டானியத்தால் வடிவமைக்கப்பட்ட கட்டமைப்புச் சட்டத்துடனும் வருகின்றது. நாளுக்கான ஸ்டைலுடன் பொருந்திப் போகும் வகையில் 200 கடிகார முகப்புகளுடன் Watch GT2 Pro கிடைக்கின்றமையானது இதன் விசேடமாகும். ஆரோக்கியம், விளையாட்டு, வானிலை, வழிச்செலுத்தல் மற்றும் வெளிப்புற திட்டமிடல் ஆகிய பல்வேறு அளவீடுகளை இதனால் அளவிட முடியும். ஆரோக்கியத்தில் இதன் அளவீடுகளாவன; தூக்கம் கண்காணிப்பு ( புதுமையான Huawei TruSleep தொழில்நுட்பம்), இதயத்துடிப்பு, மன அழுத்தத்தை கண்காணிக்க Huawei TruRelax மற்றும் ஒட்சிசன் செறிவைக் கண்டறிதல் (மேலும் பல), விளையாட்டுகளில் பனிச்சறுக்கு, கோல்ப் (அதன் புதிய golf driving range பயன்முறையானது பாவனையாளர்களுக்கு ஆட்ட முறையை ஆராய்ந்து மேம்படுத்துவதற்கான தரவு குறிப்புகளையும் வழங்குகிறது) என 100இற்கும் மேம்பட்ட விளையாட்டு பயன்முறைகளை வழங்குகின்றது. Watch GT2 Pro மூலம் வரும் அழைப்புகளை ஏற்கவும், ஸ்மார்ட்போனை தொலைவில் இருந்து இயக்கி படமெடுக்கவும் முடியும். வயர்லெஸ் சார்ஜிங் வசதியைக் கொண்டிருப்பதுடன், முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால் சாதாரணமாக இச் சாதனம் 14 நாட்கள் வரை இயங்கக்கூடியதென்பதுடன், தீவிரமாக பாவிக்கும் போது 8 நாட்கள் வரை நீடிக்கக் கூடியதென்பது குறிப்பிடத்தக்கது.
Active Noise Cancellation என்றழைக்கப்படும் சக்தி வாய்ந்த இரைச்சலை நீக்கும் அமைப்புடன் கூடிய ஹெட்போனே Huawei FreeBuds Studio ஆகும். எட்டுத் திசையும் நோக்கி அமைந்த 8 மைக்ரோபோன் அமைப்பு, இருபுறமும் இயங்கும் 4 உயர் உணர்திறன் ஒலிவாங்கிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த எட்போன்கள் மேம்பட்ட ஒலி நீக்கத்துக்காக சூழல் ஒலியை மிகவும் துல்லியமாக கண்டறிகின்றது.
இதன் Tee Audio Tube (TAT) அமைப்பானது அணிவதற்கு மிகவும் சௌகரியத்தை வழங்குவதுடன், காதுகளுக்கான காற்றழுத்தத்தை சமநிலைப்படுத்துகின்றது. Huawei FreeBuds Studio, அதன் 6 mic அழைப்பு இரைச்சல் நீக்கும் அமைப்புடன் சத்தமான சூழலில் கூட அழைப்பு மேற்கொள்வதை இலகுவாக்குகின்றது. உயர் தெளிவுத்திறன் கொண்ட ஓடியோ அனுபவத்தில் பாவனையாளர்களை மூழ்கடிக்கும் அதி-பரந்த அதிர்வெண் வரம்பிற்கான ஹை-ஃபை நிலை ஓடியோ சிப் மற்றும் தொழில்முறை ஒலி கூறுகள் ஆகியவற்றை இது கொண்டுள்ளது. Huawei FreeBuds Studioவினை ஒரே கிளிக்கில் இணைத்து, இசையை ரசிக்க முடியும். மேலும், இப்போது பாவனையாளர்கள் Huawei Free Buds Studioவை ஒரே நேரத்தில் இரண்டு சாதனங்களுடன் இணைக்க முடியும். இது பல பணிகளுக்கு அதிக வினைத்திறனானதாகும். மியூசிக் பிளேபேக்கிற்கு செல்லவும், அழைப்புகளுக்கு பதிலளிக்கவும், முடிக்கவும் தொடுகை கட்டுப்பாட்டு அமைப்புடன் இது வருகிறது. இதனை முழுமையாக சார்ஜ் செய்ய 60 நிமிடங்கள் மட்டுமே ஆகும். இந்த ஒரு சார்ஜ் சுழற்சியானது 24 மணிநேரம் வரை செவிமடுப்பதற்கான வாய்ப்பை வழங்கும்.
Huawei FreeLace Pro, வயர்லெஸ் இயர்போன் என்பதுடன் மிகவும் மேம்பட்ட active noise cancellation அமைப்புடன் வருகின்றது. இது விழிப்புணர்வு பயன்முறையையும் கொண்டுள்ளது, பாவனையாளர்கள் இரைச்சலை நீக்கும் பயன்முறையிலிருந்து வெளி உலகத்தைப் பற்றி விழிப்புடன் இருக்க முடியும். இதன் 14mm dynamic driver, ஓடியோ தரத்தை மேம்படுத்தி ஆழமான bass இனை வழங்குகிறது. Huawei FreeLace Pro, HiPair தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளமையானது, இதனை ஒரே படிமுறையில் போன் அல்லது டெப்லட்டுடன் இணைக்கும் வசதியை பாவனையாளர்களுக்கு வழங்குகின்றது. இது மியூசிக் பிளேபேக், அழைப்புகளுக்கு பதிலளிக்கவும், நிறைவு செய்யவும் power பட்டன் மற்றும் function பட்டனைக் கொண்டுள்ளது. Huawei FreeLace Pro, ஒற்றை சார்ஜ் சுழற்சியில் 24 மணிநேரம் இசையை இரசிக்கும் வாய்ப்பை வழங்குகின்றது. ஐந்து நிமிட சார்ஜ் மட்டுமே ஐந்து மணிநேர இசைக்கான மின்கல ஆயுளைத் தருகிறது. FreeLace Proவின் காந்த வடிவமைப்பு, பாவனையாளர்கள் நீண்ட மின்கல ஆயுளைப் பெறுவதற்கு earbudsகளை இணைக்க உதவுகிறது. Huawei FreeLace Pro, Graphite Black, Spruce Green மற்றும் Dawn White ஆகிய நிறங்களில் வருவதுடன் நீர் சிதறல்கள், நீர் மற்றும் தூசி ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பளிக்கின்றது.
Huawei FreeBuds Pro ஒரு hybrid active noise cancellation அமைப்புடன் வருகிறது, இது 40dB வரை இரைச்சலை இரத்துசெய்யும் விளைவை அடைகிறது. அதன் விழிப்புணர்வு பயன்முறையானது, பாவனையாளர்கள் அதை அணியும்போது இரைச்சலை இரத்துச் செய்யும் பயன்முறையிலிருந்து வெளி உலகத்தைப் பற்றி அறிந்துகொள்ள உதவுகிறது. இதன் 11mm உயர்தர driver அசத்தலான ஒலி தரத்தை வழங்குகிறது. மேலும் அதன் 3mic அமைப்பு மிகத் தெளிவான அழைப்புகளுக்கு உதவுகிறது. Huawei FreeBuds Pro ஸ்மார்ட் தொடுகை கட்டுப்பாட்டு அமைப்புடன் வருவதுடன், இது இசை, அழைப்புகளை இலகுவாக மேற்கொள்ள உதவுகின்றது. Ceramic White, Silver Frost மற்றும் Carbon Black ஆகிய நிறங்களில் இது கிடைப்பதுடன், நீண்ட நேர இசை மற்றும் அழைப்பு நேரத்தையும் வழங்குகின்றது.
இரட்டை dual sub woofers உடன் கூடிய Huawei Sound X கொண்டு செல்வதற்கு இலகுவான ஸ்பீக்கர் ஆகும். இது Devialetஇன் Active Matching (SAM) தொழில்நுட்பத்துடன் கூடியதென்பதால் உயர் தரமான ஓடியோவை உருவாக்க நிகழ்நேர ஒலி சமிக்ஞைகளை கொண்டு வருகின்றது. இதன் HD ஒலியானது சான்றளிக்கப்பட்டதுடன் இதனுடைய dual sub woofers காந்த அரிய பூகோள கூறுகளிலிருந்து வடிவமைக்கப்பட்டுள்ளன, அவை பாரிய அதிர்வுகளை உருவாக்க உதவுகின்றன. இது அளவில் சிறியதென்ற போதிலும், இதனுடைய ஸ்பீக்கர்கள் ஆறு சக்திவாய்ந்த tweetersகளைக் கொண்டுள்ளது, இது Huawei ஒலி வழிமுறையைப் பயன்படுத்தி அதிரவைக்கும் surround ஒலியை உருவாக்குவதுடன், Sound X bass 40hz வரையான மட்டத்தை அடையக் கூடியது. Huawei Share அம்சத்தை Sound X கொண்டிருக்கின்றமையானது பாவனையாளர்கள் இதனை உடனடியாக போன் அல்லது டெப்லட்டுடன் இணைக்க முடியும். இது தொடு உணர்திறன் கொண்ட வண்ணமயமான விளக்குகளைக் கொண்டுள்ளமையானது உள்ளுணர்வு கட்டுப்பாட்டு அமைப்பினை வழங்குவது மட்டுமன்றி, ஆசையைத் தூண்டும் காட்சி விளைவுகளையும் உருவாக்குகின்றது.
Huawei Watch GT2 Pro ரூபா 54,999.00, Huawei FreeBuds Studio ரூபா 59,999.00, Huawei FreeLace Pro ரூபா 19,999.00 , Huawei FreeBuds Pro ரூபா 34,999.00 மற்றும் Huawei Sound X ரூபா 57,999.00 எனவும் விலையிடப்பட்டுள்ளன. இந்த நான்கு சாதனங்களும் நாடுபூராகவும் உள்ள அதிகாரம் பெற்ற மீள் விற்பனையாளர்களிடம் கிடைப்பதுடன், Daraz.lk மற்றும் Wow.lk ஆகிய இணையத்தளங்கள் மூலமாகவும் ஓர்டர் செய்து பெற்றுக்கொள்ள முடியும்