Bybit இன் ‘AI Trading Skill’ அறிமுகம்: 253 API Endpoints உடன்கிரிப்டோவர்த்தகத்திற்கான AI முகவர்களுக்குவலு

வணிக பரிமாற்ற அளவின் அடிப்படையில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய கிரிப்டோகரன்சி பரிமாற்றத் தளமான Bybit, தற்போது ‘AI Trading Skill’ எனும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதியின் மூலம் பயனர்கள் சாதாரண உரையாடல் மொழி (Natural Language) வழியாகவே கிரிப்டோ வர்த்தகங்களை மேற்கொள்ளவும், சந்தைத் தரவுகளைப் பெறவும், இணைய சொத்துகளை நிர்வகிக்கவும் முடியும். ChatGPT, Gemini, Claude, Cursor, Windsurf உள்ளிட்ட அனைத்து முன்னணி AI assistant ஊடாகவும் இதனைப் பயன்படுத்தலாம்.

எந்தவொரு மென்பொருள் நிறுவல்களோ அல்லது சிக்கலான கட்டமைப்புகளும் இன்றி, 253 API Endpoints உடன் அறிமுகமாகியுள்ள இந்த அம்சம், AI மூலம் பயனரின் விருப்பத்தை புரிந்து, தானாகவே வர்த்தக பரிமாற்றத்தைச் (Agentic Trading) செயற்படுத்துகின்ற திசையை நோக்கிய ஒரு முக்கிய மைல்கல்லாகும்.

முக்கிய நன்மைகள்

  • பூச்சிய நிறுவல் (Zero Installation): Node Package Manager (NPM), Command Line Interface (CLI) மற்றும் மென்பொருள் மேம்பாட்டு கருவிகள் (SDK) உள்ளிட்ட எவையும் தேவையில்லை; உடனடியாகப் பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.
  • அனைத்து AI தளங்களுடனும் இணக்கம்: உலகின் அனைத்து முக்கிய AI தளங்கள் மற்றும் AI Assistants உட்ன தங்குதடையின்றி இயங்கும்.
  • தன்னியக்க மேம்படுத்தல்கள்: Bybit தளத்தில் புதிய அம்சங்கள் வரும்போது, இந்த AI Skill தானாகவே தன்னை மேம்படுத்திக் கொள்ளும்.

AI மூலம் முழுமையான சந்தை அணுகல்

Bybit இன் முழுமையான வர்த்தகக் கட்டமைப்பையும் இயற்கையாக பயன்படுத்தும் மொழி மூலம் அணுக இது வழிவகுக்கிறது. ஆறு தொகுதிகளைக் கொண்ட Bybit AI Skills, நேரடி விலைகளைக் கேட்பது முதல் சிக்கலான கோரிக்களைச் செயல்படுத்துவது வரை அனைத்தையும் சாத்தியமாக்குகிறது. 253 API endpoints மூலம் பயனர்கள் தொடர்ச்சியான வினவல்களை மேற்கொள்ளவும், தமது தயாரிப்புகளை (Portfolio) நிர்வகிக்கவும் முடியும். இவை அனைத்தையும் வழக்கமான வர்த்தக இடைமுகம் இன்றியே மேற்கொள்ள முடியும். இதன் முக்கிய அம்சங்கள்:

  1. சந்தை நுண்ணறிவு (Market Intelligence): நேரடி விலை நிலவரங்கள், candle lines, order book depth, funding rates  உள்ளிட்ட நிதி விடயங்களை அறிய முடியும்
  2. ஸ்பொட் வணிகம் (Spot Trading): சந்தை கொள்வனவு/விற்பனை செய்தல் மற்றும் ஓர்டர்களை கட்டுப்படுத்தல், தொகுதி சார்ந்த செயற்பாடுகள்.
  3. Derivatives Trading: Leverage trading, இலாபத்தைப் பதிவு செய்தல் (Take-profit) மற்றும் நட்டத்தைத் தடுத்தல் (Stop-loss) உள்ளிட்ட காரண காரிய கட்டளைகள்.
  4. வருமானம் ஈட்டல் (Earn): நெகிழ்வுத் தன்மையான சேமிப்புகள் மற்றும் சங்கிலித் தொடர் வருவாய் (On-Chain Earn).
  5. கணக்கு மற்றும் சொத்துக்கள்: கணக்கு விபரங்கள், வைப்புகள் (Deposit), மீளப்பெறல்கள் (Withdrawal) மற்றும் நாணய மாற்றங்களை அணுகுதல்.
  6. மேம்பட்ட அம்சங்கள்: ‘WebSocket’ ஊடாக நிகழ்நேர எல்லை கடன் பெறுதல் (உதாரணமாக: “Borrow 10,000 USDT”) மற்றும் விலை வேறுபாட்டு வணிகக் கருவிகள் (உதாரணமாக: “Place a price difference order”), RFQ நிர்ணயம் (உதாரணமாக, “Get BTC options bulk pricing”) உள்ளிட்ட நேரடி சந்தை நுண்ணறிவுகள் மற்றும் செயற்படுத்தல் கருவிகள்.

AI தொழில்நுட்பம் மூலம் வர்த்தகத் திறனை மேம்படுத்துவதில் Bybit நீண்ட காலமாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது. ஏற்கனவே வெளியிடப்பட்ட ‘TradeGPT’ மற்றும் ஏனைய AI கருவிகள் சந்தை ஆய்வு மற்றும் உத்திகள் மூலம் முதலீட்டு முடிவுகளை எடுக்க பயனர்களுக்கு உதவியுள்ளன. தற்போது அறிமுகமாகியுள்ள AI Trading Skill மூலம், வர்த்தகம் மற்றும் டிஜிட்டல் சொத்து முகாமைத்துவ பயணம் முழுவதையும் உள்ளடக்கிய ஒரு விரிவான AI ஒருங்கிணைப்பை Bybit வழங்குகிறது. அந்த வகையில், சிக்கலான சந்தை செயற்பாடுகளை எளிய உரையாடல்களாக மாற்றுவதன் மூலம், அறிவார்ந்த வர்த்தக அனுபவத்திற்கான புதிய தரநிலையை Bybit உருவாக்கியுள்ளது.

பாதுகாப்பான AI வர்த்தக வடிவமைப்பு
இந்த அனுபவம் ஒரு AI உதவியாளருடன் உரையாடுவது போன்ற எளிமையாகத் தோன்றினாலும், ஒவ்வொரு கட்டத்திலும் பயனர் சொத்துகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய Bybit தனது AI Trading Skills கட்டமைப்பில் பல பாதுகாப்பு கவசங்களை (safeguards) உட்பொதித்துள்ளது.

புதிய பயனர்கள் முதலில் ஒரு மாதிரிச் சூழலில் (testnet trading) வழிகாட்டப்படுவார்கள். இது உண்மையான பணத்தைப் பயன்படுத்துவதற்கு முன்னதாக AI கட்டளைகளை பரிசோதிக்க அவர்களுக்கு உதவுகிறது. நேரடி வணிகத்திற்கு (live trading) மாறும்போது, அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் பயனரின் தெளிவான உறுதிப்படுத்தல் தேவைப்படும். இதன் மூலம் ஒவ்வொரு கட்டளையிலும் வர்த்தகர்கள் முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பது உறுதி செய்யப்படுகிறது.

AI உதவியாளருக்கும் Bybit இன் உட்கட்டமைப்பிற்கும் இடையிலான தொடர்பை இந்த ‘Skill’ பாதுகாப்பான API அங்கீகாரம் (secure API authentication) மூலம் நிர்வகிக்கிறது. இதனால் பயனர்கள் சிக்கலான விபரங்களை கையால் உள்ளீடு செய்யவோ அல்லது முக்கியமான விபரங்களை வெளிப்படுத்தவோ தேவையில்லை. AI இனால் வழங்கப்படும் ஒவ்வொரு அறிவுறுத்தலும் துல்லியமான API அழைப்புகளாக மாற்றப்பட்டு, தளத்தின் பாதுகாப்பு சோதனைகளைத் கடந்த பின்னரே செயல்படுத்தப்படுகின்றன.

உரையாடல் எளிமையையும், பல அடுக்கு பாதுகாப்பு கட்டுப்பாடுகளையும் இணைப்பதன் மூலம், AI மூலம் இயங்கும் வர்த்தகத்தின் உள்ளுணர்வு பாதுகாப்பானது என்பதை Bybit உறுதி செய்கிறது. இது கிரிப்டோ சந்தைகளுடன் தொடர்பு கொள்ளும் புதிய முறையை வாடிக்கையாளர்கள் நம்பிக்கையுடன் பயன்படுத்த வழிவகுக்கிறது.

Bybit AI Skills பற்றிய மேலதிக விபரங்களுக்கு: https://www.bybit.com/ai  மேலதிக தொழில்நுட்ப விபரங்களுக்கு: GitHub – Bybit AI Skills

#Bybit / #CryptoArk 

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *