‘Unleashed 2026’ நிகழ்வின் உத்தியோகபூர்வ மூலப்பொருள் அனுசரணையாளராக புத்தாக்கத்திற்கு வலுவூட்டும் Alumex PLC

இலங்கையின் முன்னணி அலுமினிய உற்பத்திகள் தொடர்பான நிறுவனமான Alumex PLC, மொரட்டுவை பல்கலைக்கழக மாணவர்களால் முழுமையாக வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட புதிய தலைமுறை மின்சாரப் பந்தய காரான ‘FALCON E1’ இன் அறிமுக நிகழ்வான ‘Unleashed 2026’ இல் உத்தியோகபூர்வ மூலப்பொருள் அனுசரணையாளராக (Official Material Sponsor) பெருமையுடன் இணைந்துள்ளது. 2026 மார்ச் 04 ஆம் திகதி பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வு, இலங்கையின் பொறியியல் புத்தாக்க துறையில் ஒரு மைல்கல்லாகும். பல்கலைக்கழகத்தின் ‘Team Falcon Racing’ குழுவினால் உருவாக்கப்பட்ட FALCON E1 ஆனது, மேம்பட்ட பொறியியல் வடிவமைப்பு, துல்லியமான உற்பத்தி நுட்பங்கள் மற்றும் அதிநவீன மின்சார வாகனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அடிப்படை நிலையிலிருந்து முழுமையாக உருவாக்கப்பட்ட ஒரு புதிய மின்சார பந்தய கார் ஆகும். உத்தியோகபூர்வ மூலப்பொருள் அனுசரணையாளர் எனும் வகையில், இந்த வாகனத்தின் கட்டுமானத்திற்குத் தேவையான சுமார் 650 கிலோகிராம் எடையுள்ள அலுமினிய மூலப்பொருட்களை அலுமெக்ஸ் நிறுவனம் வழங்கியுள்ளது. அத்துடன், பந்தய நிலைகளின் அடிப்படையில் தேவைப்படுகின்ற உரிய கட்டமைப்பின் வலிமையைப் பேணும் அதேவேளையில், வாகனத்தின் சக்தி மற்றும் எடை விகிதத்தை மேம்படுத்துவதற்காக இயந்திர பாகங்களுக்கு விசேட ‘அனோட்டிடல்’ (anodizing) சேவைகளையும் நிறுவனம் வழங்கியது. இலங்கையின் பொறியியல் மாணவர்களின் புத்தாக்கச் சூழலமைப்பிற்கு அலுமெக்ஸ் நிறுவனம் தொடர்ச்சியாக ஆதரவளித்து வருவதுடன், இத்திட்டத்திற்கு பங்களிப்பதில் பெருமிதம் கொள்கிறது. குறிப்பாக, இலங்கையின் மின்சார பந்தய வாகனங்களின் வளர்ச்சிக்கு அலுமெக்ஸ் ஆதரவளிக்கும் மூன்றாவது தொடர்ச்சியான சந்தர்ப்பம் இதுவாகும். இது பொறியியல் விசேடத்துவம் மற்றும் நிலைபேறான போக்குவரத்து தொடர்பான புத்தாக்கங்களை மேம்படுத்துவதற்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்துகிறது.

இது குறித்து, Alumex PLC நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் பிரமுக் டெடிவேலா கருத்துத் தெரிவிக்கையில், “Falcon Racing குழுவிற்கும் FALCON E1 அறிமுகத்திற்கும் ஆதரவளிப்பதானது, இலங்கையின் அடுத்த தலைமுறை பொறியியாலளர்களை வலுப்படுத்துவதற்கான அலுமெக்ஸ் நிறுவனத்தின் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது. ஏனெனில் புத்தாக்கம் என்பது துணிச்சலான யோசனைகள் மற்றும் அவற்றை யதார்த்தமாக மாற்றுவதற்கான தைரியத்தால் இயக்கப்படுகிறது என நாம் நம்புகிறோம். உலகளாவிய பொறியியல் தளங்களில் போட்டியிடும் திறமையும் ஆற்றலும் இலங்கையிடம் இருப்பதை இந்த இளம் கண்டுபிடிப்பாளர்கள் நிரூபித்து வருகின்றனர். நிலைபேறான போக்குவரத்து மற்றும் மேம்பட்ட பொறியியலின் எதிர்காலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு திட்டத்தில், எமது மூலப்பொருட்களும் தொழில்நுட்ப ஆதரவும் பங்களிப்பு வழங்குது தொடர்பில் நாம் பெருமை கொள்கிறோம்.” என்றார்.

உயர்தர அலுமினிய மூலப்பொருட்கள் மற்றும் தொழில்நுட்ப சேவைகளை வழங்கியதன் மூலம், வாகன கட்டமைப்பின் உறுதி மற்றும் செயல்திறனுக்கு அவசியமான துல்லியமான இயந்திரப் பாகங்களை உற்பத்தி செய்வதில் Falcon Racing குழுவிற்கு Alumex முக்கிய பங்கை ஆற்றியுள்ளது. இந்த வாகனமானது, இலங்கையின் வளர்ந்து வரும் இயந்திரப் பொறியியலாளர்களின் புத்திசாலித்தனம் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தைப் பிரதிபலிக்கிறது. இது இந்த வருடத்தின் பிற்பகுதியில் பார்சிலோனா-கத்தலோனியா (Circuit de Barcelona-Catalunya) Formula 1 பந்தய ஓடுதளத்தில் நடைபெறவுள்ள சர்வதேசப் புகழ்பெற்ற ‘Formula Student Spain’ (FSS) போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது போட்டித்தன்மை வாய்ந்த மின்சாரப் பந்தயங்களுக்கு அவசியமான செயல்திறன் மற்றும் இலகுரக பாரமற்ற கட்டமைப்பைக் கொண்டிருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆழ்ந்த வடிவமைப்பு மற்றும் செயற்திறன் கொண்ட FALCON E1 மின்சார பந்தய காரின் தொழில்நுட்ப விபரங்கள்: அவையாவன 

  • நிறை: 245 kg
  • மோட்டார்: செஸியில் பொருத்தப்பட்ட ஒற்றை மோட்டார் (Single chassis-mounted motor)
  • தொகுதியின் உச்சபட்ச மின்னழுத்தம்: 300V DC
  • உச்சபட்ச மின்வலு வெளியீடு: 72 kW
  • மொத்த மின்கல கொள்ளளவு: 7.99 kWh
  • கடத்தல் விகிதம்: 2.8
  • சஸ்பென்சன்: புஷ்-ரோட் (push-rod) அமைப்புடன் கூடிய ‘Double unequal A-arms’

உலகின் சில முன்னணி பல்கலைக்கழக பொறியியல் குழுக்களுக்கு மத்தியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் Falcon Racing குழு, FALCON E1 காரை Formula Student Spain சர்வதேச போட்டிக்குக் கொண்டு செல்லத் தயாராகி வருகிறது. இந்த முயற்சியானது இலங்கையின் பொறியியல் திறன்களை மேம்படுத்துவதிலும், உலகளாவிய தொழில்நுட்பத் தளங்களில் போட்டியிடும் மாணவர்களுக்கு ஆதரவளிப்பதிலும் தொழில்துறை கூட்டாண்மைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. இந்த முயற்சிக்கு ஆதரவளிப்பதன் மூலம், அலுமினிய தயாரிப்புகளின் உற்பத்தியில் ஒரு முன்னணி நிறுவனமாகவும், இலங்கையின் எதிர்கால தொழில்நுட்பத் துறையை வடிவமைப்பதில் ஒரு பங்காளராகவும் தனது நிலையை Alumex மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *