இலங்கையில் புதிய Mercedes-Benz பஸ்களை அறிமுகப்படுத்திய DIMO

இலங்கையின் பயணிகள் போக்குவரத்து மற்றும் சுற்றுலாத் துறைகளில் புதிய யுகத்தை  ஆரம்பிக்கும் வகையில், புத்தம் புதிய Mercedes-Benz OH1626L பஸ்களை DIMO நிறுவனம் உள்ளூர் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இலங்கையில் Mercedes-Benz வாகனங்களுக்கான ஒரேயொரு விநியோகஸ்தராக விளங்கும் DIMO நிறுவனம் அறிமுகம் செய்த இந்த புதிய OH1626L பஸ், நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், பயணிகளுக்கு அதிக வசதியையும் பாதுகாப்பையும் வழங்கும் நோக்கத்துடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய பஸ், ஜேர்னிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இந்தோனேசியாவின் Cikarang, West Java பகுதியில் உள்ள Daimler Commercial Vehicles Manufacturing தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

260 HP வலுவுடன், Euro 4 சுற்றுச்சூழல் தரநிலைகளுக்கு இணங்க தயாரிக்கப்பட்டுள்ள இந்த பஸ்கள், உயர் எரிபொருள் திறனை வழங்குகிறது. முன்புற மற்றும் பின்புற Axel அச்சுகள் இரண்டும் Mercedes-Benz air suspension கட்டமைப்பைக் கொண்டிருப்பதால், பயணிகளுக்கு மேம்பட்ட வசதியை உறுதி செய்கிறது. இந்த புதிய Mercedes-Benz OH1626L பஸ், நீண்ட தூரப் பயணங்களுக்கும் நகரங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கும் ஏற்ற வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் ‘Laksana’ மூலம் தயாரிக்கப்பட்ட இந்த பஸ்ஸின் உடல் வடிவமைப்பு, Daimler நிறுவனத்தின் சர்வதேச தரநிலைகளுக்கு இணங்குவதோடு. விசாலமான உள்ளக இடவசதி, வசதியான ஆசன அமைப்பு மற்றும் குறைந்த சத்தம் ஆகியன பயணிகளுக்கு சொகுசான அனுபவத்தை வழங்குகின்றன.

இது குறித்து, Daimler Truck South East Asia நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி Harald Schmid தெரிவிக்கையில், “இலங்கைக்கு Mercedes-Benz பஸ்களை அறிமுகப்படுத்துவதன் மூலம், நிலைபேறான மற்றும் இலாபகரமான தீர்வுகளுடன் பயணிகள் போக்குவரத்தை மாற்றியமைப்பதே எமது பிரதான நோக்கமாகும்” என்றார்.

இந்த புதிய பஸ் ஆனது, சுற்றுலா போக்குவரத்து, நகரங்களுக்கிடையிலான போக்குவரத்து மற்றும் அலுவலக போக்குவரத்து சேவைகளை வழங்குவோருக்கு சிறப்பாகப் பொருந்தும். நீண்ட காலத்திற்கு இயங்கக் கூடிய திறன், குறைந்த பராமரிப்புச் செலவு, பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை காரணமாக, இது இலங்கையின் சுற்றுலாத் துறை நிறுவனங்களுக்கு பயனுள்ள முதலீடாகவும்  அமையும்.

Mercedes-Benz இன் சர்வதேச வழிகாட்டல்களுக்கு இணங்க DIMO நிறுவனம் நிர்மாணித்துள்ள விற்பனைக்குப் பிந்தைய சேவைப் பிரிவானது, நாடு முழுவதும் பரந்த விரிவான அசல் உதிரிப்பாக விநியோக வலையமைப்பு, உற்பத்தியாளரால் பயிற்சியளிக்கப்பட்ட தொழில்நுட்ப நிபுணர்கள், 24/7 வீதிவழி உதவிச் சேவை மற்றும் உரிய பராமரிப்புத் திட்டங்கள் மூலம், Mercedes-Benz OH1626L பஸ்களை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த விற்பனைக்குப் பிந்தைய சேவையை வழங்குகிறது.

“இலங்கையின் போக்குவரத்து துறையின் முன்னேற்றத்திற்கு எப்போதும் வழிகாட்டியாக இருந்து வரும் DIMO நிறுவனம், Mercedes-Benz OH1626L பஸ் மூலம் நம்பகமான உயர் ரக போக்குவரத்து தீர்வுடன் சொகுசான அனுபவத்தை வழங்கும் வாய்ப்பை நாம் பெற்றுள்ளோம்,” என DIMO நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஜீவ் பண்டிதகே தெரிவித்தார்.

இந்த புதிய பஸ்ஸிற்கு போட்டித்தன்மை வாய்ந்த லீசிங் தீர்வுகளை வழங்கும் நோக்கில், முன்னணி நிதி நிறுவனங்களுடன் லீசிங் கூட்டாண்மைகளை DIMO நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது. Mercedes-Benz பஸ் கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களின் வசதி கருதி, விசேட வாடிக்கையாளர் தொடர்பு அதிகாரிகளை நியமித்துள்ளதோடு, சாரதி பயிற்சித் திட்டங்கள், மொபைல் சேவை பிரிவுகள் மற்றும் டிஜிட்டல் சேவைகள் மூலம் சிறந்த வாடிக்கையாளர் சேவையை வழங்குவதற்கான நடவடிக்கைகளை DIMO முன்னெடுள்ளது.

இதன் மூலம் DIMO மற்றும் Mercedes-Benz இணைந்து, இலங்கையின் சுற்றுலா மற்றும் பயணிகள் போக்குவரத்து தொழில்துறைக்கு புதிய யுகத்தை உருவாக்குகின்றன.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *