DIMO தனது நவீன கட்டட சேவை தீர்வுகள் மூலம் Cinnamon Life திட்டத்தின் உட்கட்டமைப்பை வலுப்படுத்துகிறது

இலங்கையின் பொறியியல் விசேடத்துவத்தின் முன்னணி நிறுவனமான DIMO, தனது கூட்டாளரான Siemens நிறுவனத்துடன் இணைந்து நாட்டின் முக்கிய அபிவிருத்தித் திட்டங்களில் ஒன்றான Cinnamon Life இற்கு பல்வேறு நவீன கட்டட சேவைத் தீர்வுகளை வழங்கியுள்ளது. ஆடம்பரமான ஹோட்டல், குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகம் போன்ற வசதிகளை உள்ளடக்கிய இந்தத் திட்டமானது, DIMO நிறுவனத்தின் அதி நவீன மற்றும் எதிர்காலத்திற்கு ஏற்ற கட்டட உட்கட்டமைப்பு தொழில்நுட்பங்கள் மூலம் வலுவூட்டப்பட்டுள்ளது.

மனித உயிர்களையும் சொத்துகளையும் பாதுகாக்கும் வகையில், உலகளாவிய ரீதியில் நம்பகத்தன்மை மற்றும் துல்லியத் தன்மைக்காக அங்கீகரிக்கப்பட்ட Siemens Sinteso Fire Detection and Alarm System இந்தத் திட்டத்தில் நிறுவப்பட்டுள்ளது. ASAtechnology™ அம்சத்துடன் கூடிய இந்த கட்டமைப்பானது, பல்வேறு உணர்திறன் மிக்க சென்சர்கள் மூலம் தவறான எச்சரிக்கைகளுக்கு செயற்படாமல், துல்லியமாக அபாயங்களை கண்டறியக்கூடிய உயர்தர திறனைக் கொண்டுள்ளது.

மேலும், FK-5-1-12 Clean Agent தொழில்நுட்பத்துடன் கூடிய Siemens Sinorix 5112 Fire Suppression System மூலம் அதிவேகமாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலுமான தீயணைப்புத் தீர்வுகள் இதில் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சொத்துகள் மற்றும் தரவுகளுக்கு ஏற்படும் அபாயங்களை குறைத்தவாறு, முக்கிய செயற்பாட்டுப் பகுதிகள் பாதுகாக்கப்படுகின்றன.

இத்திட்டத்தில் HVAC, மின்விளக்குகள், தீயிலிருந்தான பாதுகாப்பு, மின் சக்தி கட்டமைப்புகள், மின்னுயர்த்தி, நீர் வழங்கல் கட்டுப்பாடுகள் உள்ளிட்ட அனைத்தும் Siemens Building Management System (BMS) மூலம் தன்னியக்க முறைமைப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் திறன் மிக்க மின் சக்தி பயன்பாடு, வசதியான மற்றும் செயற்பாட்டு விசேடத்துவத்தை Cinnamon Life திட்டத்தினால் அடையக்கூடியதாக உள்ளது.

Cinnamon Life திட்டத்திற்கான கட்டட சேவைத் தீர்வுகளை வழங்குவதில் DIMO நிறுவனத்தின் முக்கிய கூட்டாளராக உலகப் புகழ்பெற்ற தொழில்நுட்பப் வர்த்தகநாமமான Siemens செயற்பட்டது. இத்திட்டத்தின் வடிவமைப்பு முதல் நடைமுறைப்படுத்தும் நிலை வரை Siemens தனது பங்களிப்பை வழங்கியது. சர்வதேச தரநிலைகளுக்கிணங்க இந்த விசேட அபிவிருத்தித் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு DIMO நிறுவனத்திற்கு சரியான வழிகாட்டலையும் அறிவையும் Siemens வழங்கியிருந்தது.

மேலும் இதன் மற்றுமொரு அங்கமாக, DIMO நிறுவனம் உயர் செயல்திறனுடைய மின்விளக்குகள் மூலமான ஒளியூட்டும் தீர்வுகளையும் வழங்கியுள்ளது. இந்த ஸ்மார்ட் தீர்வுகள் மூலம் மின்விளக்குகள் தன்னியக்கமாக கட்டுப்படுத்தப்படுகின்றன. சர்வதேச தரநிலைகளுக்கிணங்க அதன் லொபி, கொரிடோ மற்றும் பொதுவான இடங்கள் உள்ளிட்ட பகுதிகள் ஒளியூட்டப்பட்டுள்ளன. இதன் மூலம் மின் சக்தி நுகர்வு மற்றும் செயற்பாட்டுச் செலவுகள் குறைக்கப்பட்டு, அந்த இடத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் சிறந்த அனுபவம் வழங்கப்படுகிறது.

உயர்தர Access Control System மூலம் RFID Cars, Biometrics, PIN Pads, Vehicle Recognition போன்ற அம்சங்களைப் பயன்படுத்தி பாதுகாப்பான மற்றும் எளிதாக நுழைவதற்கான வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியானது, Fire Alarms, CCTV, BMS தளங்களுடன் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குடியிருப்புகள், வணிக வலயங்கள் மற்றும் சேவை வழங்கும் பகுதிகளின் பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.

Dome, Bullet, PTZ, Thermal, ANPR கெமராக்களைக் கொண்ட CCTV கண்காணிப்பு கட்டமைப்பு மூலம் 7 நாட்களும் 24 மணித்தியால பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இங்குள்ள Public Address System மூலம் தினசரி அறிவிப்புகள் முதல் அவசர கால வெளியேற்றங்கள் வரை துரிதமான மற்றும் தெளிவான தகவல் பரிமாற்ற வசதி உறுதி செய்யப்பட்டுள்ளது. உள்ளக மற்றும் வெளிப்புற பகுதிகளில் இருந்து விரைவான தகவல் பரிமாற்றத்தை சாத்தியமாக்கும் வகையில் இந்தத் தகவல் தொடர்பு கட்டமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன.

இது குறித்து தனது கருத்துகளை தெரிவித்த, DIMO நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் விஜித் புஷ்பவெல, “Cinnamon Life திட்டத்திற்கான உரிய தீர்வுகளை வழங்கும் சரியான வழங்குநரான DIMO நிறுவனம் தெரிவு செய்யப்பட்டமைக்கு, விரிவான மற்றும் ஒருங்கிணைந்த கட்டட சேவைத் தீர்வுகளை வழங்கும் DIMO நிறுவனத்தின் திறமையே முக்கிய காரணமாக அமைந்தது.” என்றார்.

DIMO நிறுவனம் எதிர்காலத்திற்கு ஏற்ற, பாதுகாப்பான, நிலைபேறான கட்டட உட்கட்டமைப்பு வசதிகளுக்கான நவீன தீர்வுகளை வழங்கியதன் மூலம், Cinnamon Life திட்டத்திற்கு தனது பங்களிப்பை வழங்கியுள்ளதோடு, அதன் மூலம் DIMO நிறுவனம் கொண்டுள்ள பொறியியல் திறன்கள் மிகவுm  தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *