2025 வைர தின விழா மற்றும் Paragon மீள் அறிமுகம் மூலம் புகழ் பரப்பும் ராஜா ஜுவலர்ஸ்

தங்க உலகின் முடிசூடா மன்னனாக திகழும் ராஜா ஜுவலர்ஸ், தனது வருடாந்த பிரசாரத் திட்டங்களில் முக்கிய இடத்தைப் பிடிக்கும், 2025 வைர தின (Diamond Day Celebration 2025) நிகழ்வை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

அந்த வகையில் இவ்வருட வைர தின விழாவை, Paragon Diamond Collection இன் மீள் அறிமுகம் மறக்க முடியாத அனுபவத்துடன் சிறப்பித்திருந்தது. அதன் புதுப்பிக்கப்பட்ட அணிகலன்கள், காலத்தால் அழியாத அழகு மற்றும் நேர்த்தியான செழுமை ஆகியவற்றின் மூலம் விருந்தினர்களை கவர்ந்தது. இலங்கை பெண்களின் வலிமை, நவீனத்துவம் மற்றும் பெருமையை வெளிப்படுத்தும் வகையில், “You are a Diamond,” (நீயே ஒரு வைரம்) எனும் கருப்பொருளுடன் இணைந்ததாக இவை உருவாக்கப்பட்டுள்ளன.

இலங்கையின் விளையாட்டு பிரபலங்களான தருஷி கருணாரத்ன மற்றும் நெத்மி அஹின்சா போன்றவர்களை கௌரவித்த ராஜா ஜுவலர்ஸ், இவ்வருடமும் வலிமையான எமது நாட்டு பெண் ஜாம்பவான்களை கௌரவிக்கும் தனது பாரம்பரியத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றது. அந்த வகையில் இவ்வருட பிரசாரமானது, உள்ளக அழகு மற்றும் சாதனை, ஈடுகொடுக்கும் திறன் ஆகியவற்றை கொண்டாடுகின்ற ஆழமான கதை கூறல் மற்றும் கதைகளால் காட்சியை வெளிப்படுத்தும் வாடிக்கையாளர்களை உணர்ச்சிவசப்படச் செய்தது.

ஓகஸ்ட் 14 முதல் 17 வரை இடம்பெற்ற இந்த நான்கு நாள் விற்பனை நடவடிக்கையின் போது, நிறுவனத்தின் காட்சியறைகளிலும் ஒன்லைன் தளங்களிலும் கணிசமான வாடிக்கையாளர்கள் இணைந்திருந்தனர். புதிய Paragon Diamond Collection இன் தெரிவு செய்யப்பட்ட வைர நகைகளுக்கு 50% வரை தள்ளுபடி, ஒன்று வாங்கினால் மற்றொன்று இலவசம் ஆகிய சலுகைகள் வாடிக்கையாளர்களை மிகவும் ஈர்த்தன. அத்துடன், தெரிவு செய்யப்பட்ட கடனட்டைகளுக்கான வட்டி அற்ற (0%) தவணை முறை கொடுப்பனவு வசதிகள் மற்றும் சிறந்த சந்தை விலையில் நகைகளை வாங்கும் வாய்ப்பும் வழங்கப்பட்டன.

இந்த 2025 பிரசாரமானது, விற்பனையை அதிகரித்ததோடு, புதுப்பிக்கப்பட்ட Paragon தயாரிப்பு வரிசை தொடர்பில் தெளிவூட்டும் விழிப்புணர்வை உருவாக்கியதோடு, ராஜா ஜுவலர்ஸ் ஆனது ஒரு பிரமாண்டமான, உற்சாகமும் ஊக்கமும் அளிக்கும் வர்த்தகநாமம் என்பதை உறுதிப்படுத்தியது. இந்த கோலாகலமான நிகழ்வின் மூலம், கைவினைப் படைப்பாற்றல், பாரம்பரியம் மற்றும் தமது வணிக குறிக்கோளை தாங்கிய செயன்முறைகளை ஒன்றிணைத்து, இத்துறையில் முன்னணியில் நிற்கும் நிறுவனம் என்பதை ராஜா ஜுவலர்ஸ் மீண்டும் நிலைநிறுத்தியுள்ளது.

வைர தினத்தின் சுவடுகள் ஓய்வடைந்த போதிலும், அதன் பிரகாசம் என்றும் மிளிர்ந்துகொண்டே இருக்கும்.

END

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *