VMware இலங்கையின் டிஜிட்டல் உள்கட்டமைப்பு, விரைவான கண்காணிப்பு வணிக புத்தாக்கம் மற்றும் நெகிழ்திறன் ஆகியவற்றிற்கு உள்ளார்ந்த பாதுகாப்பை வழங்குகிறது

நிறுவன மென்பொருளில் முன்னிலை வகிக்கும் புத்தாக்குனரான VMware, Inc., அதன் உள்ளார்ந்த பாதுகாப்பு உற்பத்தி வரிசையில் புதிய மேம்பாடுகளுடன், இலங்கையிலுள்ள நிறுவனங்களுக்கு பல் அமைவிட தொழிற்படை மற்றும் தனியார் மற்றும் பொது மேகக்கணினிகளில் (clouds) புதிய டிஜிட்டல் யதார்த்தத்தில் தங்கள் வணிகத்தை சிறப்பாகப் பாதுகாக்கும் திறன்களை வழங்குகின்றமை தொடர்பில் இன்று அறிவித்துள்ளது. விஸ்தரிக்கப்பட்ட பாதுகாப்பு உற்பத்தி வரிசை பொது மற்றும் தனியார் மேகக்கணினிகள் (clouds), பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பல் அமைவிட பணியாளர்களுக்கான பாதுகாப்பை மேம்படுத்துவதுடன், தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரிகள் நெகிழ்திறன் கொண்ட மற்றும் எதிர்காலத்திற்கு சிறப்பாக முகங்கொடுக்கத் தயாரான வணிகங்களைக் கட்டியெழுப்பும் முயற்சியில் எந்தவொரு செயலிக்கும் (app), எந்த மேகக் கணினியிலும் (cloud), எந்தவொரு சாதனத்திற்கும் (device) வழங்கப்படும் அணுகலை சாதுரியமாக நிர்வகிக்கவும், பாதுகாப்பாக செயல்படுத்தவும் உதவுகிறது.

VMware Carbon Black’s Global Threat Report[1]  என்ற அறிக்கையின்படி, கொவிட்-19 ஐ அடுத்து உலகளாவிய இணைய அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாகவும், உலகளாவிய பாதுகாப்பு வல்லுநர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில், வீட்டிலிருந்து பணியாற்றும் ஊழியர்கள் காரணமாக ஒட்டுமொத்த இணைய தாக்குதல்களில் அதிகரிப்பு காணப்படுவதாகவும் 91% ஆனோர் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. உலகளாவில் பதிலளித்தவர்களில் 32% பேர் இணைய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தங்களுக்கு புலப்படுவதில் குறிப்பிடத்தக்க இடைவெளிகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ள அதே நேரத்தில் கணக்கெடுப்பு நடாத்தப்பட்டவர்கள் மத்தியில் கால்வாசிக்கும் அதிகமானோர் (28%) தொலைவியக்க அடிப்படையிலான பணியாளர்களை நிர்வகிப்பதில் கடுமையான மற்றும் குறிப்பிடத்தக்க இடைவெளிகள் இருப்பதாக உணர்வதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இந்த புதிய உயர் மட்ட பல் அமைவிட வணிகச் சூழலில், முன்னெப்போதையும் விட பலவிதமான தந்திரோபாயங்களையும் நுட்பங்களையும் பயன்படுத்தி இணைய தாக்குதல் நடத்துபவர்களின் வளர்ந்து வரும் நுட்பங்;களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வணிகங்கள் பாதுகாப்பு தொடர்பான தமது அணுகுமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

“பொருளாதாரரீதியாக நிச்சயமற்ற இந்த காலகட்டத்தில் இலங்கையில் உள்ள வணிகங்கள் டிஜிட்டல் புத்தாக்கங்களை பெரிதும் நம்பியுள்ளதுடன், மேலும் தங்கள் வணிகங்கள் இச்சூழ்நிலைகளுக்கு பதிலளிப்பதற்கும், தம்மை இசைவாக்கிக் கொள்வதற்கும் மற்றும் துரிதப்படுத்துவதற்கும் கூடுதலான அளவில் நிறுவன நெகிழ்திறன் மற்றும் பாதுகாப்பை மையமாகக் கொண்டு தமது நீண்டகால வெற்றிக்கு உத்தரவாதத்தை தேடிக்கொள்ள வேண்டும்,” என்று VMware இன் இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான உள்நாட்டு விற்பனை முகாமையாளரான தேவேந்திரா மானுவல் அவர்கள் குறிப்பிட்டார். “VMware இலங்கையில் உள்ள வணிகங்களை தமது உள்ளார்ந்த பாதுகாப்பிற்கான எங்கள் அணுகுமுறையுடன் தமது வணிகத்தின் பாதுகாப்பினை செயல்படுத்துவதில் உதவுவதற்கு அர்ப்பணிப்புடன் உள்ளதுடன், எப்போதும் மாற்றம் கண்டுவரும் வணிகச் சூழலில் நிலையான வளர்ச்சியை செயல்படுத்த புத்தாக்கங்களை முடுக்கிவிடும்போது அவற்றின் மாற்றத்தை தங்குதடையின்றி மற்றும் பாதுகாப்பாக முன்னெடுப்பதை செயல்படுத்துகிறது,” என்று அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டார்.

VMworld 2020 இல், இலங்கையின் நிறுவனங்கள் பல தசாப்தங்களில் மிகவும் கொந்தளிப்பான ஒரு சந்தைச் சூழலில் நிலைபெற்று, தலைநிமிர உதவும் வகையில் பலவிதமான தீர்வுகளையும் சேவைகளையும் VMware வழங்கி வருகிறது. VMware இன் மேகக் கணினி (cloud), செயலி (app) நவீனமயமாக்கல், வலையமைப்பு, பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் பணியிட தளங்கள் எங்கு வேண்டுமானாலும் பயன்பாடுகளை உருவாக்க, இயக்க, நிர்வகிக்க, இணைக்க மற்றும் பாதுகாக்க ஒரு நெகிழ்வான, நிலையான டிஜிட்டல் அத்திவாரத்தை உருவாக்குகின்றன.

தனியார்மற்றும்பொதுமேகக்கணிக்கான (cloudபாதுகாப்பு

நிறுவனங்கள் மேகக்கணினி வளர்ச்சி மாற்றம் மற்றும் பயன்பாட்டு நவீனமயமாக்கலுக்கான பயணத்தைத் தொடர்கையில், அவர்களுக்கு சக்தி வாய்ந்த மற்றும் இலகுவான தொழிற்பாடுகளைக் கொண்ட நவீன பாதுகாப்புத் தீர்வுகள் தேவைப்படுகின்றன. இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள, VMware Carbon Black Cloud WorkloadTM ஆனது தாக்குதல் மேலெழுவதைக் குறைப்பதற்கும் பாதுகாப்பு தோரணையை வலுப்படுத்துவதற்கும் நவீன பணிச்சுமைகளை சிறப்பாகப் பாதுகாப்பதற்காக மேம்பட்ட பாதுகாப்பு நோக்கத்திற்காக கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த புத்தாக்கமான தீர்வு, மெய்நிகராக்கப்பட்ட, தனியார் மற்றும் கலப்பு மேகக்கணினி சூழல்களில் இயங்கும் பணிச்சுமைகளைப் பாதுகாக்க, தொழில்துறையில் முன்னிலை வகிக்கும் தடுப்பாற்றல் கொண்ட, கண்டறியக்கூடிய மற்றும் பதில் நடவடிக்கை திறன்களுடன் முன்னுரிமைப்படுத்தப்பட்ட பாதிப்பு அறிவிப்பு மற்றும் அத்திவார பணிச்சுமைகளை கடினப்படுத்தும் செயற்பாட்டை ஒருங்கிணைக்கிறது.

இத்தீர்வானது Carbon Black இன் பாதுகாப்பு நிபுணத்துவத்தை VMware இன் தரவு மையங்களைப் பற்றிய ஆழமான அறிவோடு பணிச்சுமையில் பாதுகாப்பை கட்டியெழுப்புவதை இணைக்கின்றது.

vSphere உடன் இறுக்கமாக ஒருங்கிணைக்கப்பட்ட, VMware Carbon Black Cloud Workload முகவரற்ற பாதுகாப்பை வழங்குவதுடன், இது உட்கட்டமைத்தல் மற்றும் நிர்வாக செலவுகளைத் தணிவித்து, பல பணிச்சுமை பாதுகாப்பு பயன்பாட்டு நிகழ்வுகளுக்கு பரிவர்த்தனை (telemetry) சேகரிப்பை ஒருங்கிணைக்கிறது. இந்த ஒருங்கிணைந்த தீர்வு பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு அணிகளுக்கு பாதுகாப்பு வாழ்க்கைச் சுழற்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் புதிய மற்றும் இருக்கும் பணிச்சுமைகளை தானாகவே சிறப்பாகப் பாதுகாக்க உதவுகிறது. அதே நேரத்தில், செயல்பாடுகளை எளிதாக்குவதுடன், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு அடுக்கை ஒருங்கிணைக்கிறது. பாதுகாப்பு அணிகளுக்கு, VMware Carbon Black Cloud Workload வழங்கும் பயன்கள்:

இடர்மற்றும்கடினமானபணிச்சுமைகளைஅடையாளம்காண்பதற்கானதெரிவுநிலை: Carbon Black Cloud Workload பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு அணிகள் தங்கள் சூழல்களில் அதிக ஆபத்துள்ள பாதிப்புகள் மற்றும் பொதுவான மோசடிகளில் கவனம் செலுத்த உதவுகிறது. ஏனெனில் இது மிகவும் பாதிப்புகளைக் கண்டறிவது அல்ல – மாறாக சரியானவற்றைக் கண்டறிவது தொடர்பானது.

மேம்பட்டதாக்குதல்களைதடுத்தல்கண்டறிதல்மற்றும்பதிலளித்தல்: மிகவும் ஆற்றல் மிக்க மெய்நிகராக்கப்பட்ட தரவு மைய சூழல்களில் பாதுகாப்பு குழுக்களுக்கு பெரும்பாலும் தென்படுநிலை மற்றும் கட்டுப்பாடு போதுமாக இருப்பதில்லை. Carbon Black Cloud Workload இந்த சூழல்களில் இயங்கும் பணிச்சுமையை தொழில்துறையில் முன்னிலை வகிக்கும், அடுத்த தலைமுறை வைரஸ் தடுப்பு (NGAV), பணிச்சுமை நடத்தை கண்காணிப்பு மற்றும் பணிச்சுமைகளுக்கான இறுதிப்புள்ளி கண்டறிதல் மற்றும் பதில் நடவடிக்கை (EDR) ஆகியவற்றுடன் இணைப்பதன் மூலம் பாதிப்பு மதிப்பீடு மற்றும் பணிச்சுமை கடினப்படுத்துதலை இணைப்பதன் மூலம் பாதுகாக்கிறது.

தகவல்தொழில்நுட்பம்மற்றும்பாதுகாப்புஅணிகளுக்கானஎளிமையானசெயல்பாடுகள்: VMware உள்ளார்ந்த அணுகுமுறை மெய்நிகர் கட்டமைப்புக்குள் பாதுகாப்பை கட்டியெழுப்புவதுடன், பணிச்சுமைகள் பயன்படுத்தப்படுகின்ற எல்லா இடங்களிலும் பாதுகாப்பை செயல்படுத்துகிறது. மேலும் பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டு எளிமைக்கு இடையிலான இடைவெளியைப் போக்குகிறது.


Carbon Black Cloud Workload இந்த ஆண்டின் பிற்பகுதியில் விரிவாக்கப்பட்ட வரப்பிரசாதங்களை அறிமுகப்படுத்தும், இதில் Kubernetes பணிச்சுமைகளை கடினப்படுத்துவதற்கும் சிறப்பாகப் பாதுகாப்பதற்கும் புதிய Carbon Black Cloud தொகுதியும் அடங்கியுள்ளது. புதிய திறன்கள் பாதுகாப்பு அணிகளுக்கு நிர்வாகக் கொள்கையையும், Kubernetes சூழல்களின் கட்டுப்பாட்டையும் வழங்கும்.

பாதுகாப்புநடவடிக்கைகளின்எதிர்காலம்

பாதுகாப்பு சம்பவத்தைக் கண்டறிதல் மற்றும் பதில் நடவடிக்கை இதற்கு முன்னர் ஒருபோதும் இந்த அளவிற்கு மிகவும் முக்கியமானதாகவோ அல்லது சவாலானதாகவோ இருந்ததில்லை. நிறுவனங்களுக்கு முடிவுப்புள்ளி, பணிச்சுமை, வலையமைப்பு, பயனர் மற்றும் பயன்பாடு ஆகியவை அடங்கிய “கேமரா கோணங்களின்” (camera angles) பரந்த தொகுப்பு தேவை. பணிச்சுமைகளின் இணைக்கப்பட்ட தன்மை மற்றும் அவை உருவாக்கும் பயன்பாடுகளின் அடிப்படையில் அந்த அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்க அவர்களுக்கு இன்னும் முழுமையான அணுகுமுறை தேவை.

விரிவாக்கப்பட்ட கண்டறிதல் மற்றும் பதில் நடவடிக்கை (Extended Detection and Response – XDR) அதைச் செய்வதற்கான வாய்ப்பினை வழங்குகிறது.  பாதுகாப்பு சம்பவங்களைக் கண்டறிதல் மற்றும் பல களங்களை மேம்படுத்தக்கூடிய பதில் நடவடிக்கைக்கு முடிவுப்புள்ளியிலிருந்து பணிச்சுமை, பயனர் மற்றும் வலையமைப்பு என ஒரு ஒருங்கிணைந்த அணுகுமுறையை வழங்குகிறது.

பல்அமைவிடபணியாளர்களுக்கானபாதுகாப்பு

பல் அமைவிட பணியாளர்கள் தொடர்பில் பணியாளர்களை பணியில் இணைத்தல், தென்படுநிலை மற்றும் இணக்கம், பாதுகாப்பு, பணியாளர் பாதுகாப்பு மற்றும் பலவற்றிலிருந்து பல சவால்களை ஏற்படுத்துகின்றது. இந்த சவால்களை எதிர்கொள்வதற்கும், பணியின் எதிர்காலத்தை வெற்றிகரமாக ஏற்றுக்கொள்வதற்கும், நிறுவனங்கள் தகவல் தொழில்நுட்ப சூழலுடன் தொடர்புடைய பாதுகாப்பு, அனுபவம் மற்றும் செயல்பாட்டு சிக்கலான தன்மையை எவ்வாறு அணுகுகின்றன என்பதை மீண்டும் சிந்திக்க வேண்டும். இதை இயக்க,  VMware SASE Platform, Workspace Security VDI மற்றும் Workspace Security Remote  மேம்படுத்தும் ஆற்றல்களை VMware இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிய தீர்வுகள் முழுமையான பூரண நம்பிக்கை கொண்ட பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் மற்றும் எளிமையான பேணல் நிர்வாகத்தை வழங்குவதுடன், Secure Access Service Edge மற்றும் தொழில்துறையில் முன்னிலை வகிக்கும் Digital Workspace மற்றும் Endpoint Security தொழில்நுட்பங்கள் எந்தவொரு மேகக்கணியிலும் எந்தவொரு சாதனத்திலும் அனைத்து பயன்பாடுகள் மத்தியிலும் ஒத்திசைவுடன் செயல்படுகின்றன.

Zscalerஉடன்ஒருகிளிக்மூலமானஒருங்கிணைப்புகள்

இன்று அறிவிக்கப்பட்டுள்ளவாறு, VMware மற்றும் Zscaler ஆகியவை முழுமையான தென்படுநிலை மற்றும் பல் அமைவிட பணியாளர்களுக்கான பாதுகாப்பிற்கான புதிய ஒருங்கிணைப்புகளை அறிமுகப்படுத்துகின்றன. ஒரு கிளிக் மூலமான ஒருங்கிணைப்புகள் பரஸ்பர வாடிக்கையாளர்களுக்கு அச்சுறுத்தல்களை தடுக்க உதவும் என்பதுடன் மற்றும் உள்வாரி பயன்பாடுகளுக்கு அச்சுறுத்தல்களைச் சமாளிக்கும் உண்மையான நம்பிக்கை நிபந்தனை அணுகலுக்கு இடமளிக்கும்.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *