Hemas Consumer Brands நிறுவனத்தின் முன்னணி, நம்பகமான சலவை வர்த்தகநாமமான தீவா, மதிப்புமிக்க 2024 Effie விருது வழங்கும் விழாவில் வீட்டு உபகரணங்கள் மற்றும் சேவைகள் பிரிவில் வெண்கல விருதையும், சமூக பொருட்கள் பிரிவில் இறுதிப் போட்டிக்கு தெரிவான போட்டியாளர் விருதையும் வென்றது. இந்த விருதுகள் பல ஆண்டுகளாக நுகர்வோர் இவ்வர்த்தகநாமம் தொடர்பில் வைத்துள்ள நம்பிக்கை மற்றும் விசுவாசத்திற்கு ஒரு சான்றாகும். சவாலான காலங்களில் கூட, இலங்கையில் உள்ள வீடுகளுக்கு வலிமையையும் ஆதரவின் தூணாகவும் தீவா அர்ப்பணிப்புடன் இருந்தமையே இந்த அங்கீகாரத்திற்குக் காரணமாகும்.
20 ஆண்டுகளுக்கும் மேலான தனது வளமான பாரம்பரியத்துடன், தரம், கட்டுப்படியான விலை மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றின் முக்கிய மதிப்புகளைப் பேணும் அதே வேளையில், நுகர்வோர் தேவைகளைப் பூர்த்தி செய்ய நிறுவனம் தொடர்ச்சியாக பணியாற்றி வருகிறது. நுகர்வோருடன் இணைந்து செயலாற்றுவதில் தீவா கொண்டுள்ள செயல்திறனை வலுப்படுத்த, நாட்டின் முன்னணி சந்தைப்படுத்தல் நிறுவனங்களில் ஒன்றான இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனத்துடன் (SLIM) இணைந்து வழங்கப்படும் Effie விருதுகள் உதவுகின்றன.
இந்த சாதனை தொடர்பில் நன்றி தெரிவித்து கருத்துத் தெரிவித்த தீவா பிரிவின் முகாமையாளர் நாமல் பெர்னாண்டோ, “எமது பயணத்தில் எம்முடன் இணைந்திருந்த எமது நுகர்வோர்களுக்கு இந்த விருதுகள் சொந்தமானவையாகும். அவர்களின் நம்பிக்கையும் ஆதரவும் எமது வெற்றிக்கு உந்து சக்தியாக இருந்து வருகிறது. அதே அர்ப்பணிப்புடனும் விசேடத்துவத்துடனும் அவர்களுக்கு சேவை செய்ய நாம் கடமைப்பட்டுள்ளோம்” என்றார்.
தனது தயாரிப்பு விசேடத்துவத்திற்கு அப்பால், நாடு முழுவதும் உள்ள சமூகங்களுக்கு அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்துவதிலும் தீவா உறுதியாக உள்ளது. ‘தீவா கரத்திற்கு வலிமை தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டுத் திட்டம்’ எனும் அதன் நோக்கம் மிக்க திட்டம் மூலம், பெண்களின் வணிகங்களையும் வாழ்வாதாரங்களையும் மேம்படுத்தத் தேவையான அறிவு மற்றும் திறன்களை வழங்குவதன் மூலம் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான அர்ப்பணிப்பை இவ்வர்த்தகநாமம் உறுதிப்படுத்தியுள்ளது. குடும்பங்களுக்கு வலிமையாகவும் ஆதரவாகவும் இருப்பதன் மூலம், சமூகங்களை வலுவூட்டுவதற்கும் நிலைபேறான வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கும் தீவா உறுதி பூண்டுள்ளது.
இந்த சாதனையை தீவா கொண்டாடும் இவ்வேளையில், இலங்கையில் உள்ள வீடுகளுக்கு தரம் மற்றும் மதிப்பை வழங்குவதோடு, நாடு முழுவதும் உள்ள சமூகங்களிடையே அர்த்தமுள்ள தாக்கத்தை தொடர்ச்சியாக உருவாக்கும் பணியில் இவ்வர்த்தகநாமம் அர்ப்பணிப்புடன் இருந்து வருகின்றது.
Hemas Consumer Brands பற்றி
60 வருடங்களாக வீடு மற்றும் தனிநபர் பராமரிப்புத் தயாரிப்புகளின் இலங்கையின் முன்னணி உற்பத்தியாளரான Hemas Consumer Brands, குடும்பங்கள் சிறந்த நாளைய தினத்தை அனுபவிப்பதற்கு வலுவூட்டுவதில் கவனம் செலுத்துகிறது. வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட முன்மொழிவுகளில் புத்தாக்கத்தை ஏற்படுத்தவும், மேம்படுத்தவும் உள்ளூர் தகவல் தரவுகளைப் பயன்படுத்துவதில் பெருமை கொள்கிறது. இது இலங்கையில் நம்பகமான வீட்டுப் பெயர் வர்த்தக நாமமாக தன்னை நிறுவுதல் எனும் அவர்களது நோக்கத்தை அடைய உதவியுள்ளது. இலங்கையின் நுகர்வோர் பற்றிய ஆழமான புரிதல் மற்றும் அதன் தயாரிப்புகளில் உயர் தரம் மற்றும் பெறுமதியை வழங்குவதற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பினால் உந்தப்பட்டுள்ள Hemas Consumer Brands, நாடு முழுவதும் உள்ள சமூகங்களின் வாழ்க்கையை தொடர்ச்சியாக வளப்படுத்துகிறது.