CMA சிறப்பு ஒன்றிணைந்த அறிக்கையிடல் விருதுகள் 2024 இல் First Capital விருது வென்றுள்ளது

முதலீட்டு துறையின் முன்னணி நிறுவனமாக திகழும் First Capital, 10ஆவது CMA ஒன்றிணைந்த அறிக்கையிடல் சிறப்பு விருதுகள் வழங்கும் நிகழ்வில் முதலீட்டு வங்கியியல் துறையில் வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வு கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் டிசம்பர் 3ஆம் திகதி நடைபெற்றது. இந்த பெருமைக்குரிய நிகழ்வு, இலங்கை சான்றளிக்கப்பட்ட முகாமைத்துவ கணக்காளர் நிறுவகம் (CMA ஸ்ரீ லங்கா) ஏற்பாடு செய்திருந்தது. நிதிசார் வெளிப்படைத்தன்மையில் எய்திய சாதனைகளுக்காகவும், ஒன்றிணைந்த அறிக்கையிடலுக்கான சிறப்பு போன்றவற்றுக்காக First Capital கௌரவிக்கப்பட்டிருந்தது. மேலும், ஒன்றிணைந்த அறிக்கையிடலுக்கான ஒட்டுமொத்த சிறப்புக்கான மெரிட் விருதை நிறுவனம் பெற்றுக் கொண்டதுடன், நிதிசார் துறையில் முன்னோடி எனும் தனது நிலையை மேலும் உறுதி செய்திருந்தது.

CMA ஒன்றிணைந்த அறிக்கையிடல் சிறப்பு விருதுகள் நிகழ்வுக்கு கொழும்பு பங்குப்பரிவர்த்தனை வருடாந்தம் ஆதரவளிக்கின்றது. அரச மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த பட்டியலிடப்பட்ட மற்றும் பட்டியலிடப்படாத நிறுவனங்களை ஒன்றிணைந்த அறிக்கையிடல் கொள்கைகளை பின்பற்றுவதற்கு ஊக்குவிக்கும் முறையாக  இவ்விருதுகள் அமைந்துள்ளன.  இந்த கொள்கைகள், பாரம்பரிய நிதிசார் அறிக்கையிடலுக்கு அப்பால் அமைந்திருப்பதுடன், நிதிசார் மற்றும் நிதிசாரா தகவல்களை உள்ளடக்கி, நிறுவனத்தின் வினைத்திறனை பரிபூரணமான வகையில் அனுமதிக்கும் வகையில் அமைந்திருக்கும். முதலீட்டாளர்கள் மற்றும் பங்காளர்களுக்கு நிறுவனங்களின் பெறுமதிகளை வெளிப்படுத்துவதற்கான பொறிமுறையாக இந்த விருதுகள் அமைந்திருப்பதுடன், அறிக்கையிடலில் தெளிவுபடுத்தல், கூட்டாண்மை பொறுப்புக்கூறல் மற்றும் மேலோட்டத்தை வழங்குவதில் சர்வதேச நியமங்களை பின்பற்றி அமைந்திருக்கும்.

இந்த ஒன்றிணைந்த வழிமுறையினூடாக, ஒழுக்கமான வியாபார செயற்பாடுகள், சூழல்சார் வழிநடத்தல்கள், சமூக பொறுப்புக்கூறல் மற்றும் ஆளுகை போன்றவற்றை கொண்டிருப்பதில் First Capital இன் நிதிசார் வெற்றிகரமான அர்ப்பணிப்பை காண்பிப்பதாக அமைந்துள்ளது. நிலைபேறான வளர்ச்சியில் நிறுவனத்தின் நோக்கு தீர்மானமெடுத்தல் செயன்முறைகளினூடாக, மூலோபாய செயற்பாடுகள் மற்றும் பொது மக்கள் மத்தியில் அதன் இலக்குகளை வெளிப்படுத்தல் போன்றவற்றை அவதானிக்க முடிகின்றது. இந்த விருதுகளை சுவீகரித்தமையானது, நிறுவனங்களுக்கு நிதிசார் பெறுமதிகளை பெற்றுக் கொள்ள உதவுவது மாத்திரமன்றி, சமூகம் மற்றும் சூழலுக்கு நேர்த்தியாக பங்களிப்பு வழங்கவும் உதவியாக அமைந்திருக்கும்.

First Capital ஹோல்டிங்ஸ் பிஎல்சியின் முகாமைத்துவ பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி தில்ஷான் வீரசேகர கருத்துத் தெரிவிக்கையில், ‘CMA உடன் தொடர்புடைய விருதுகள், நிறுவனங்களுக்கு பரிபூரண வழிமுறையை பின்பற்ற உதவியாக அமைந்திருக்கும் என்பதுடன், சகல பங்காளர்களுக்கும் பெறுமதி உருவாக்கத்தை கட்டியெழுப்புகின்றன. கூட்டாண்மை நிலைபேறாண்மை தொடர்பில் அவை தெளிவான எடுத்துக்காட்டாக அமைந்துள்ளதுடன், நிதிசார் மற்றும் நிதிசாரா அறிக்கையிடல் தொடர்பான தரத்தை மேம்படுத்துவதாக அமைந்துள்ளது. மேலும், இந்த நிகழ்வுகள் வெளிப்படைத்தன்மை மற்றும் இடர் மதிப்பீடு மற்றும் நிர்வாகத்தை அணுகும் வகையில் அமைந்துள்ளன. ஒன்றிணைந்து, துரித மற்றும் நிலைபேறான சந்தை மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றின் மையத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. CMA சிறப்பு ஒன்றிணைந்த அறிக்கையிடல் விருதுகளினூடாக கிடைத்த கௌரவிப்பு என்பது, வெளிப்படைத்தன்மை மற்றும் சிறப்பு ஆகியவற்றில் உயர் நியமங்களை பின்பற்றும் எமது அணியினரின் அர்ப்பணிப்புக்கான எடுத்துக்காட்டாக அமைந்திருக்கும்.’ என்றார். 

First Capital Holdings PLC இன் பிரதம நிதிசார் அதிகாரி மங்கல ஜயஷாந்த கருத்துத் தெரிவிக்கையில், ‘CMA ஒன்றிணைந்த அறிக்கையிடல் சிறப்பு விருதுகள் வழங்கும் நிகழ்வில் துறையின் வெற்றியாளர் எனும் கௌரவிப்பை பெற்றுக் கொள்வதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். வெளிப்படைத்தன்மை, நிலைபேறாண்மை மற்றும் பெறுமதி அடிப்படையிலான அறிக்கையிடல் போன்றவற்றுக்கான எமது அர்ப்பணிப்புக்கு கிடைத்த கௌரவிப்பாக அமைந்துள்ளது. First Capital இல், எமது மூலோபாயம், வினைத்திறன் மற்றும் எதிர்கால வளர்ச்சி போன்றன தொடர்பான பரிபூரண நோக்கை பங்காளர்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதில் ஒன்றிணைந்த அறிக்கையிடலின் வலிமையில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். எமது நிதிசார் வினைத்திறன் மற்றும் நிதிசாரா அறிக்கையிடல் காரணிகள் போன்றன எமது வெற்றிகரமான செயற்பாடுகள் பற்றிய புரிந்துணர்வை ஒன்றிணைந்த அறிக்கைகள் வழங்குகின்றன.’ என்றார்.

CMA ஒன்றிணைந்த அறிக்கையிடல் சிறப்பு விருதுகள் வழங்கலில் First Capital க்கு கிடைத்த கௌரவிப்பு, நிதிசார் அறிக்கையிடல் சிறப்பு மற்றும் வியாபார செயன்முறைகள் போன்றவற்றில் நிறுவனத்தின் ஒப்பற்ற அர்ப்பணிப்புக்கான சிறப்பு வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளன.  நிதிசார் மற்றும் நிதிசாரா தகவல் போன்றவற்றில் சர்வதேச அறிக்கையிடல் கட்டமைப்புகளை பின்பற்றி First Capital, முதலீட்டு வங்கியியல் துறையில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் நீண்ட கால பெறுமதி உருவாக்கம் போன்றவற்றில் நிர்ணயிப்பதாக அமைந்துள்ளது.

###.

First Capital Holdings PLC பற்றி

இலங்கையில் காணப்படும் பட்டியலிடப்பட்ட முழு-சேவை முதலீட்டு நிறுவனமாக First Capital Holdings PLC திகழ்வதுடன், பிரதான வணிகர், கூட்டாண்மை நிதி ஆலோசகர், வெல்த் முகாமையாளர் மற்றும் பங்குமுகவராக இயங்குகின்றது. உறுதித்தன்மையை கட்டியெழுப்புவது, போட்டிகரமான அனுகூலத்தை ஊக்குவிப்பது மற்றும் சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை பெற்றுக் கொடுப்பது போன்றவற்றில் உறுதியான கவனத்தை செலுத்துவதுடன், ஜனசக்தி குழுமத்தின் ஆதரவுடன், First Capital, ‘செயலாற்றுகை முதலில்’ எனும் தனது கோட்பாட்டுக்கமைய திகழ்வதில் கவனம் செலுத்துகின்றது. தொடர்ச்சியாக இரண்டு வருட காலமாக முதலீட்டு வங்கியியல் துறையில் மிகவும் பெறுமதி வாய்ந்த நுகர்வோர் வர்த்தக நாமமாக First Capital கௌரவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. SLIM வர்த்தகநாம சிறப்புகள் விருதுகள் வழங்கும் நிகழ்வில் “ஆண்டின் சிறந்த வர்த்தக நாமம்” எனும் உயர்ந்த கௌரவிப்பையும் First Capital பெற்றுள்ளது. First Capital Holdings PLC க்கு LRA இடமிருந்து [SL] A உடன் Positive outlook தரப்படுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *