Hemas Consumer Brands நிறுவனத்தின் முதன்மையான சலவை வர்த்தகநாமமும், புத்தாக்கத்தின் கலங்கரை விளக்கமுமான தீவா, அதன் புத்தம் புதிய தயாரிப்பான Diva Fresh Gardenia & Rose சலவைத் தூளை அறிமுகப்படுத்துவதில் பெருமை அடைகிறது. சலவை செய்யும் போது நுகர்வோர் எதிர்கொள்ளும் மிக முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றான துணிகளில் நீங்காத துர்வாடையை எதிர்த்துப் போராடும் வகையில், இப்புதிய தயாரிப்பில் மேம்பட்ட வாசனைத் தொழில்நுட்பம் உட்செலுத்தப்பட்டுள்ளது.
மேம்பட்ட இரண்டு படிகளைக் கொண்ட “மேம்பட்ட வாசனைத் தொழில்நுட்ப” செயன்முறையைக் கொண்டுள்ள Diva Fresh Gardenia & Rose ஆனது, ஒரு சாதாரண சலவைத் தூளிலும் பார்க்க மேம்பட்டதாகும். இதன் மேம்பட்ட வாசனைத் தொழில்நுட்பமானது, வியர்வை, உணவுக் கறை, சூழல் மற்றும் சலவையின் போதான துர்நாற்றம் உள்ளிட்ட துர்வாடைகளை திறம்பட நீக்குவதோடு மாத்திரமல்லாமல், கார்டேனியா மற்றும் ரோஜா ஆகிய மலர்களின் நீண்ட நேர புத்துணர்ச்சியூட்டும் நறுமணத்தை ஆடைகள் மற்றும் துணிகளுக்குள் உட்செலுத்துகிறது. இதன் மூலம், பல முறை சலவை செய்ய வேண்டிய தேவையை Diva Fresh Gardenia & Rose இல்லாமல் செய்கிறது.
மலரின் நறுமணங்களைக் கொண்ட இந்த தனித்துவமான கலவையானது, உள்நாட்டு நுகர்வோரின் எதிர்பார்ப்பை எதிரொலிக்கிறது. குறிப்பாக கார்டேனியா மலரானது, இலங்கையரின் வாழ்க்கையுடன் இணைந்த, புத்துணர்ச்சியூட்டும் தன்மையை வழங்குகிறது. செயற்பாட்டு ரீதியிலும் கலாசாரத்தை மையமாகக் கொண்டதாகவும் தனது தயாரிப்புகளை உருவாக்குவதற்கு முன்னுரிமை அளிக்கும் தீவாவின் நெறிமுறைகளுடன் இணைந்த, இந்த புதிய உற்பத்தியானது, சலவைத் தயாரிப்புகளில் சிறந்த விருப்பத் தெரிவு எனும் உயர்ந்த இடத்தை அடைவதில் தீவா கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பை நுகர்வோரிடம் பிரதிபலிக்கிறது.
Hemas Consumer Brands இன் சந்தைப்படுத்தல் பிரிவின் பொது முகாமையாளர் டெரிக் அந்தனி தெரிவிக்கையில், “எமது வாடிக்கையாளர்களுடன் ஒன்றிணைந்த ஒரு வர்த்தகநாமம் எனும் வகையில், ஆடைகளில் ஏற்படும் துர்வாடை என்பது அவர்கள் எதிர்நோக்கும் தீர்க்கப்படாத பிரச்சினை என்பதை நாம் அறிவோம். அந்த வகையில் புத்தாக்கங்களில் எப்போதும் தீவா முன்னணியில் உள்ளதால், எமது வாடிக்கையாளர்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதில் நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம். அந்த வகையில், இந்த அற்புதமான தயாரிப்பை எமது நுகர்வோருக்கு அறிமுகப்படுத்த முடிந்ததில் நாம் உண்மையிலேயே பெருமைப்படுகிறோம்.” என்றார்.
Diva Fresh Gardenia & Rose சலவைத் தூளானது நேர்த்தியான, நவீன பொதிகளில் வருகிறது. இது அவ்வர்த்தகநாமத்தின் புத்தாக்கமான அணுகுமுறையையும் சலவைப் பராமரிப்பு பிரிவில் முன்னணியில் திகழ்வதற்கான அதன் அர்ப்பணிப்பையும் எடுத்துக் காட்டுகிறது. இத்தயாரிப்பானது முழுக் குடும்பத்திற்கும் பிரகாசத்தை கொண்டு வருவதோடு, ஆடைகளை சுத்தமானதாகவும் புதியதாகவும் பேண உறுதியளிக்கிறது. இதிலுள்ள மேம்பட்ட வாசனைத் தொழில்நுட்பமானது, புத்துணர்ச்சி நீண்ட நேரத்திற்கு நீடிப்பதை உறுதி செய்கிறது.
புத்தாக்கமான தீர்வுகள் மூலம் நுகர்வோரின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்புக்கு இந்த புதிய தயாரிப்பு ஒரு சான்றாகும். நுகர்வோருடன் எப்போதும் ஒன்றிணைந்து பயணிக்கும் ஒரு வர்த்தகநாமமான தீவா, தொடர்ச்சியாக புத்தாக்கங்களை உருவாக்கி, அவர்களது வாழ்க்கையில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தும் தயாரிப்புகளை வழங்கி வருகின்றது.
Hemas Consumer Brands பற்றி
கடந்த 60 வருடங்களாக வீடு மற்றும் தனிநபர் பராமரிப்புத் தயாரிப்புகளின் இலங்கையின் முன்னணி உற்பத்தியாளராக திகழும் Hemas Consumer Brands நிறுவனம், குடும்பங்கள் சிறந்த நாளைய தினத்தை அனுபவிப்பதற்காக அவர்களை வலுவூட்டுவதில் கவனம் செலுத்துகிறது. இலங்கையில் நம்பகமான வீட்டுப் பெயர் வர்த்தக நாமமாக தங்களை நிறுவ உதவிய நுகர்வோரை மையமாகக் கொண்ட இந்நிறுவனம், முன்மொழிவுகளில் புத்தாக்கத்தை ஏற்படுத்தவும், மேம்படுத்தவும் உள்ளூர் தகவல் தரவுகளைப் பயன்படுத்துவதில் பெருமை கொள்கிறது. இலங்கையின் நுகர்வோர் பற்றிய ஆழமான புரிதல் மற்றும் அதன் தயாரிப்புகளில் உயர் தரம் மற்றும் பெறுமதியை வழங்குவதற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பினால் உந்தப்பட்டுள்ள Hemas Consumer Brands, நாடு முழுவதும் உள்ள சமூகங்களின் வாழ்க்கையை தொடர்ச்சியாக வளப்படுத்துகிறது.