ஜனசக்தி ஆயுள் காப்புறுதி நிறுவனம் தவணைத் தொகையில் 45% வளர்ச்சியைப் பதிவாக்கியுள்ளதுடன், ஏனைய தொழிற்பாட்டு வருமானமும் 111% ஆல் எழுச்சி கண்டுள்ளது 

இலங்கையில் முன்னணி ஆயுள் காப்புறுதி சேவை வழங்குநராகத் திகழ்ந்து வருகின்ற ஜனசக்தி ஆயுள் காப்புறுதி நிறுவனம், 2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில் மகத்தான நிதிப் பெறுபேறுகள் குறித்து மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. பல்வேறு முக்கிய பெறுபேறுகள் குறிகாட்டிகள் மத்தியில் சாதனை வளர்ச்சியை நிறுவனம் அடையப்பெற்றுள்ளதுடன், 2023 ஆம் ஆண்டில் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் மொத்த வரையப்பட்ட தவணைத் தொகை (Gross Written Premium – GWP) 45% என்ற குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. நிறுவனத்தின் சீரான வளர்ச்சி மற்றும் விரிவடைத்து வருகின்ற அதன் வாடிக்கையாளர் தளம் ஆகியவற்றை மேற்குறிப்பிட்டப்பட கணிசமான வளர்ச்சி பிரதிபலிக்கின்றது.     

போற்றத்தக்க அளவிலான GWP வளர்ச்சிக்குப் புறம்பாக, கடந்த ஆண்டிலிருந்து இந்த ஆண்டில் 111% என்ற எழுச்சியுடன், ஏனைய தொழிற்பாட்டு வருமானத்திலும் ஜனசக்தி ஆயுள் காப்புறுதி நிறுவனம் கணிசமான அதிகரிப்பைப் பதிவாக்கியுள்ளது. நிறுவனத்தின் சந்தை மூலதனமாக்கமும் கணிசமான வளர்ச்சியைக் கண்டுள்ளதுடன், 2023 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், 2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 43% ஆல் அதிகரித்துள்ளது. நிறுவனத்தின் மூலோபாய முதலீடுகள், பன்முகப்படுத்தப்பட்ட வருமான மார்க்கங்கள் மற்றும் தொடர்ச்சியான முதலீட்டாளர் நம்பிக்கை ஆகியவற்றை இச்சாதனைகள் காண்பிக்கின்றன.     

மேலும், முதல் இரு காலாண்டுகளில், தனது காப்புறுதிதாரர்களுக்கு மிகவும் முக்கியமான தருணங்களில் இழப்பீடுகளை உரிய முறையில் வழங்கும் உறுதிமொழிக்கு அமைவாக, வாடிக்கையாளர்கள் மீதான கடப்பாடுகள் மற்றும் அவர்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் வகையில், ரூபா 2.2 பில்லியனுக்கும் மேற்பட்ட தொகையை ஜனசக்தி ஆயுள் காப்புறுதி நிறுவனம் இழப்பீட்டுக் கோரல்களாக செலுத்தியுள்ளது. ரூபா 3 பில்லியன் தொகையை தனது பங்கிலாபமாக நிறுவனம் வழங்கியுள்ளமை அதன் வலுவான நிதி நிலைமை மற்றும் முதலீட்டார்கள், தொடர்புபட்ட ஏனைய அனைத்து தரப்பினருக்கும் வெகுமதியளிப்பதில் அதன் அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் காண்பிக்கின்றது.     

“தவணைத் தொகைகள், வருமானம் மற்றும் சந்தை மூலதனமாக்கம் ஆகியவற்றில் சாதனைமிக்க வளர்ச்சி, இழப்பீட்டுக் கோரல்களுக்கான கொடுப்பனவுகள் மற்றும் பங்கிலாபங்கள் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள அதிகரிப்புக்கள் போன்றவை எம்முடன் தொடர்புபட்ட அனைத்து தரப்பினருக்கும் மதிப்பை வழங்குவதில் நாம் கொண்டுள்ள அர்ப்பணிப்புக்கு சான்றாக அமைந்துள்ளன,” என்று ஜனசக்தி ஆயுள் காப்புறுதி நிறுவனத்தின் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி ரவி லியனகே அவர்கள் குறிப்பிட்டார். “ஜனசக்தி ஆயுள் காப்புறுதி நிறுவனம் நடப்பு நிதியாண்டில் பெரும் இலட்சியத் திட்டங்களைக் கொண்டுள்ளதுடன், அவற்றை அடையப்பெறுவதில் நாம் முழுமையான அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றோம்,” என்று அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டார்.     

“வாழ்வுகளை மேம்படுத்தி, கனவுகளுக்கு வலுவூட்டுதல்” என்ற தனது நிறுவன நோக்கத்தை உண்மையாக கடைப்பிடித்து, நெறிமுறை ரீதியாகவும் மற்றும் வெளிப்படைத்தன்மையுடனும் தன்னுடன் தொடர்புபட்ட அனைத்து தரப்பினருக்கும் மகத்தான மதிப்பை வழங்கும் முயற்சிகளை ஜனசக்தி ஆயுள் காப்புறுதி நிறுவனம் தொடர்ச்சியாக முன்னெடுத்து வந்துள்ளது. வாடிக்கையாளர்கள் தரப்பை எடுத்துக்கொண்டால், புத்தாக்கமான காப்புறுதித் தீர்வுகள் மற்றும் அவர்களின் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் பரிணாம மாற்றம் காண்கின்ற தேவைகளை நிறைவேற்றும் சேவைகள் ஆகியவற்றினூடாக இந்த காப்புறுதி நிறுவனம் தனது நோக்கத்தை உயிர்ப்பிக்கின்றது. இந்த நோக்கத்தை ஒட்டுமொத்த சமூகத்திற்கும் நீட்டிக்கும் வகையில், பரந்தளவில் சமூகத்தில் அதன் நிலைபேற்றியலுக்கு மகத்தான பங்களிப்பை வழங்குவதிலும் ஜனசக்தி ஆயுள் காப்புறுதி நிறுவனம் பெரும் பற்றுறுதியுடன் இயங்கி வருகின்றது.     

29 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்துள்ள ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி, காப்புறுதித் துறையில் தொடர்ந்தும் புரட்சிக்கு வித்திட்டு, பெயர்பெற்று விளங்கும் மாபெரும் சக்தியாக தொடர்ந்தும் முன்னோக்கிப் பயணித்து வருகின்றது. அதன் நாடளவிய வலையமைப்பின் கீழுள்ள 79 கிளைகள், சமூகத்தில் அனைத்து மட்டங்களையும் சார்ந்த அனைத்து மக்களும் அதன் தனித்துவமான காப்புறுதித் தீர்வுகளை அணுகுவதற்கு இடமளித்து வருகின்றன.   

முற்றும்.

ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி குறித்த விபரங்கள்

1994 ஆம் ஆண்டில் ஒரு ஆயுள் காப்புறுதி நிறுவனமாக ஸ்தாபிக்கப்பட்ட ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி (ஜனசக்தி ஆயுள் காப்புறுதி), 29 ஆண்டுகளுக்கும் மேலான காலப்பகுதியில் புத்தாக்கத்தின் சிற்பியாகவும், அனைத்து இல்லங்களிலும் உச்சரிக்கப்படுகின்ற நாமமாகவும் தொழிற்துறையில் தன்னை முத்திரை குத்தியுள்ளது. ஜனசக்தி ஆயுள் காப்புறுதி நிறுவனம் நாடெங்கிலும் வலுவான பிரசன்னத்தைக் கொண்டுள்ளதுடன், வளர்ச்சி கண்டு வருகின்ற தனது வலையமைப்பின் கீழ் 79 க்கும் மேற்பட்ட கிளைகள் மற்றும் பிரத்தியேக அழைப்பு சேவை மையமொன்றையும் கொண்டுள்ளது. வாழ்வுகளை மேம்படுத்தி, கனவுகளுக்கு வலுவூட்டுதல்என்ற தனது நோக்கித்திற்கு அமைவாக, காப்புறுதி என்பதற்கும் அப்பாற்பட்ட சேவைகளை தனது வாடிக்கையாளர்கள் மற்றும் தன்னுடன் தொடர்புபட்ட அனைத்து தரப்பினருக்கும் வழங்கி, ஆயுள் காப்புறுதித் துறையில் முன்னோடியாக மாறுவதில் ஜனசக்தி ஆயுள் காப்புறுதி நிறுவனம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளது. காப்புறுதி, நிதி மற்றும் முதலீட்டுத் துறைகளில் தொழிற்பாடுகளைக் கொண்டுள்ள ஜனசக்தி குழுமத்தின் ஒரு உறுப்பு நிறுவனமாக ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி இயங்கி வருகின்றது.    

ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சியின் பணிப்பாளர் சபை அங்கத்தவர்களின் விபரங்கள் வருமாறு: பிரகாஷ் ஷாஃப்டர், ரவி லியனகே, ரமேஷ் ஷாஃப்டர், வரினி டி கொஸ்தா, அனிகா சேனாநாயக்க, சிவகிறிஷ்ணராஜா ரெங்கநாதன், கலாநிதி நிஷான் டி மெல், கலாநிதி கிஹான் குணதிலக மற்றும் திலிப் டி எஸ். விஜேரத்ன.     

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *