DIMO உடன் இணைந்து இலங்கையில் Tata Xenon Yodha வாகனத்தை அறிமுகப்படுத்தும் Tata Motors; Pick-up பிரிவில் அதன் பலத்தை உறுதிப்படுத்துகிறது

இலாப நோக்கிற்காக வடிவமைக்கப்பட்ட Tata Xenon Yodha, செயல்திறன், செயற்பாடு, நீடித்த பயன்பாடு ஆகியவற்றில் புதிய அளவுகோல்களை நிர்ணயிக்கின்றது

உலகின் முன்னணி வாகன உற்பத்தியாளர்களில் ஒன்றான Tata Motors, தனது அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான DIMO நிறுவனத்துடன் இணைந்து, பல்துறை பயன்பாடு கொண்ட, நம்பகமான Pick-up வாகனங்களுக்கான சந்தையில் அதிகரித்து வரும் தேவையை நிவர்த்தி செய்யும் வகையில், புதிய Tata Xenon Yodha வினை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு வலுவான மற்றும் ஸ்டைலான செயற்பாட்டுத் திறன் மிக்க Tata Xenon Yodha வாகனமானது, சொகுசையும்  பாதுகாப்பையும் உறுதியளிக்கும் அதே நேரத்தில், தினசரி நடவடிக்கைகளுக்கான சிரமமின்றிய பொருட்கள் போக்குவரத்தையும் உறுதி செய்கிறது.

இந்த வாகனத்தின் அறிமுகம் தொடர்பில் Tata Motors வணிக வாகனப் பிரிவின் சர்வதேச வணிகத் தலைவரான அநுரக் மெஹ்ரோத்ரா (Anurag Mehrotra) கருத்துத் தெரிவிக்கையில், “ஒரு முன்னணி வர்த்தக வாகனங்களுக்கான வர்த்தகநாமம் எனும் வகையில், வாடிக்கையாளர்களின் தெரிவுகளுக்கமைய அவற்றை மேம்படுத்துவது தொடர்பில் நாம் ஆழமான புரிதலைக் கொண்டுள்ளோம். அத்துடன் மேம்படுத்தப்பட்ட பயணம் மற்றும் சரக்குப் போக்குவரத்துக்கான வாகன அறிமுகங்கள் மூலம் அவற்றை நிவர்த்தி செய்வதில் நாம் உறுதியாக இருக்கிறோம். புதிய Tata Xenon Yodha ஆனது, வாகனத்தின் உரிமையாளராவதற்கான செலவு மற்றும் அதிக இலாபத்துடன், சிறந்த வாகன செயற்றிறனை தேடும் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனம் தரம், நீடித்த ஆயுள் மற்றும் செயற்றிறன் ஆகியவற்றில் புதிய வரையறைகளை அமைக்குமென, நாம் நம்புகிறோம். DIMO உடனான எமது ஆறு தசாப்த கால கூட்டாண்மை மற்றும் விரிவான நாடு தழுவிய சேவை வலையமைப்பு, சிறந்த விற்பனை மற்றும் சேவை வழங்கல் போன்றவற்றில் தரத்தை பேணுவதற்கு இது உறுதியளிக்கிறது.” என்றார்.

இதேவேளை, DIMO நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஜீவ் பண்டிதகே தெரிவிக்கையில், “Tata Motors உடன் இணைந்து உள்நாட்டில் ஒன்றிணைக்கப்படும் Tata Xenon Yodha வாகனத்தை அறிமுகப்படுத்துவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். நீண்ட கால பங்காளிகள் எனும் வகையில், நீண்ட ஆயுள், எரிபொருள் திறன், சொகுசு ஆகியவற்றில் இந்த வாகனம் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கு அப்பால் செல்லும் என நாம் நம்புகிறோம். இது இலங்கையில் உள்ள வாடிக்கையாளர்களின் அதிகரித்து வரும் வாகனத் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்யும் என்பதோடு, தனிப்பட்ட பயன்பாடு மற்றும் வணிகப் பயன்பாடு ஆகிய இரண்டையும், தேவைக்கேற்ப தடையின்றி பூர்த்தி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. வெலிவேரியவில் உள்ள வாகனங்கள் ஒன்றிணைக்கும் DIMO

தொழிற்சாலையில் ஒன்றிணைக்கப்படும் Tata Xenon Yodha வாகனங்களின் அறிமுகமானது, இலங்கையின் வாகனத் துணைத் தொழில்துறைகளின் வளர்ச்சிக்கும் உள்ளூர் மக்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் உதவும். நாடு முழுவதும் 17 இடங்களில் நிலை கொண்டுள்ள நாம், எமது வாடிக்கையாளர்களுக்கு உயர்தர தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குவதில் உறுதியாக இருந்து வருகிறோம்.” என்றார்.

இந்த ஸ்மார்ட் Pick-up ஆனது, 4×2 கட்டமைப்புடன், 1250 கிலோகிராம் எடையுள்ள சரக்குகளை ஏற்றும் திறனைக் கொண்டுள்ளது. 3.0-litre டீசல் எஞ்சின் மூலம் இயங்கும் இது, 85hp (குதிரை வலு) மற்றும் 250Nm முறுக்குவிசையை வழங்குகிறது. இப்பிரிவில் அதிக chassis (சேஸி) தடிப்பத்துடன், வலுவான முன்புற front overhang, உயர்ந்த உலோகத் தரம், மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் மூலம் இவ்வாகனம் உச்சபட்ச பாதுகாப்பு மற்றும் பாவனைக்காலம் ஆகியவற்றை உறுதி செய்கிறது. நிலப்பரப்பிற்கும் வாகனத்திற்கும் இடையிலான 210 mm இடைவெளி மற்றும் பவர் ஸ்டீரிங் ஆகியன அதனை இலகுவாக செலுத்த வழிவகுக்கிறன. இந்த அம்சமானது, சவால்மிக்க நிலப்பரப்புகளிலும் அதிக சுமைகள் கொண்ட சந்தர்ப்பங்களிலும் சிறப்பாக செயற்பட அனுமதிக்கிறது. புதிய Tata Xenon Yodha வாகனங்கள், 18 மாதங்கள் அல்லது 100,000 கிலோமீற்றர் எனும் விரிவான உத்தரவாதத்தையும் கொண்டுள்ளன.

புதிய Tata Xenon Yodha வாகனங்கள் வெலிவேரியவில் உள்ள DIMO நிறுவனத்தின் அதிநவீன வாகனங்கள் ஒன்றிணைக்கும் தொழிற்சாலையில் ஒன்றிணைக்கப்படுகிறன. இது இலங்கையில் DIMO பட்டா என பிரபலமாக அறியப்படும் Tata Ace வாகனங்களை ஒன்றிணைக்கும் தொழிற்சாலையாகும். இத்தொழிற்சாலையானது, தரம் தொடர்பான சிறந்த அர்ப்பணிப்புடன், இறுக்கமான கட்டுப்பாட்டு அம்சங்களைக் கொண்ட நடவடிக்கைகளை கடைப்பிடிக்கிறது. அத்துடன் தற்போதைய வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் சுறுசுறுப்பாக உள்ள இத்தொழிற்சாலை, சந்தையின் தேவைக்கு ஏற்ப புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதற்கான மூலோபாய ரீதியான தயார் நிலையில் உள்ளது.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *