66% வருடாந்த வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள Adani Green Energy Ltd

தெற்காசியாவின் மிகப்பெரிய மற்றும் வேகமாக வளர்ந்து வரும் தூய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனங்களில் ஒன்றான அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் (Adani Green Energy Ltd – AGEL) ஆனது, 2023 செப்டெம்பர் 30 இல் நிறைவடையும் அதன் காலாண்டு மற்றும் அரையாண்டுக்கான நிதிப் பெறுபேறுகளை அறிவித்துள்ளது.

அதற்கமைய, நிறுவனத்தின் நிதிச் செயற்பாடானது கடந்த வருடத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காண்பித்துள்ளதோடு, வருடாந்த ரொக்க இலாபத்தில் குறிப்பிடும் வகையிலான 63% அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. அதுமாத்திரமன்றி, அதன் எரிசக்தி விற்பனையானது, வருடாந்த அடிப்படையில் 78% எனும் அதிகரிப்புடன் சுவாரஸ்யமான வகையிலான பதிவைக் காண்பிக்கின்றது.

அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அமித் சிங் இது தொடர்பில் தெரிவிக்கையில், “எமது குழுவின் இடைவிடாத முயற்சியின் விளைவாகவே எமது ஒட்டுமொத்த செயற்றிறன் மேம்பாடு அடைந்துள்ளது. எமது அடுத்த மைல்கல்லான, குஜராத்தின் கௌடாவில் உள்ள உலகின் மிகப்பெரிய புதுப்பிக்கக்கத்த எரிசக்தி (RE) கொத்தணியை உருவாக்குவதை தொடர்வதற்காக, நாம் ஏற்கனவே 5,000 இற்கும் அதிக பணியாளர்களை பணிக்கு அமர்த்தியுள்ளோம். மிகவும் மேம்பட்ட TOPCon சூரியமின்கலத் தொகுதிகள் மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் மிகவும் திறனான 5.2 மெகாவாட் காற்றாலை விசையாழிகளில் ஒன்றை நாம் கௌடாவில் நிறுவவுள்ளோம். இந்த முயற்சிகள், எரிசக்திக்கான குறைந்த அளவிலான செலவை அடைவதற்கு எமக்கு உதவும். எதிர்காலத்தை கருத்திற்கொண்டு, எமது செயற்பாடுகளில் இயந்திர பயன்பாட்டை அதிகரிப்பதையும், விரிவான டிஜிட்டல் மயமாக்கல், AI/ML ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் மூலம் ஒவ்வொரு பெறுபேறையும் மேலும் அதிக நுண்ணறிவுடன் மேற்கொள்வதை நாம் நோக்கமாகக் கொண்டுள்ளோம். நிலைபேறான தன்மை மற்றும் மிக உயர்ந்த மட்டத்திலான நிர்வாகத்திற்கான எமது அர்ப்பணிப்பு எமது எதிர்கால வளர்ச்சியின் அடித்தளமாக அமையும்.” என்றார்.

நிறுவனம் அதன் சாகதமான பாதையைத் தக்கவைப்பதற்காக, எதிர்வரும் வருடங்களில் தொடர்ச்சியான விரிவாக்கத்தை அடைவதனை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் அதன் பங்குதாரர்களின் நல்வாழ்வில் அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்தவும்; சூழல், சமூக, பெருநிறுவன நிர்வாக (ESG) திட்டங்களை முன்னெடுப்பதிலும் முக்கியமான பங்கை நிறுவனம் கொண்டுள்ளது.

Adani Green Energy Limited (AGEL) ஆனது, இந்தியாவைத் தளமாகக் கொண்ட அதானி குழுமத்தின் கீழ் உள்ள ஒரு நிறுவனமாகும். இது ஒட்டுமொத்தமாக 20.4 ஜிகாவாட் எரிசக்தியைக் கொண்ட மிகப்பெரிய உலகளாவிய புதுப்பிக்கத்தக்க சக்தி உற்பத்திகளில் ஒன்றாகும். செயற்படுத்துதல், கட்டுமானம், முதலீட்டு தர மூன்றாம் தரப்பினர்களுக்கு ((investment-grade counterparties) வழங்கப்படும் திட்டங்கள் ஆகியன இதில் அடங்கும். இந்நிறுவனம், பயன்பாட்டு அளவு அடிப்படையிலான கிறிட்களுடன் இணைக்கப்பட்ட சூரிய சக்தி மற்றும் காற்றாலைத் திட்டங்களை உருவாக்குதல், நிர்மாணித்தல், சொந்தமாக வைத்திருத்தல், செயற்படுத்துதல், பராமரித்தல் ஆகியவற்றை மேற்கொள்கிறது. AGEL இன் முக்கிய வாடிக்கையாளர்களில், Solar Energy Corporation of India (SECI), National Thermal Power Corporation (NTPC) உள்ளிட்ட பல்வேறு மாநில அடிப்படையிலான விநியோக நிறுவனங்கள் அடங்குகின்றன. AGEL ஆனது, இந்தியா தனது COP26 இலக்குகளை அடைய உதவுகின்ற, 2018 இல் பட்டியலிடப்பட்ட புதுப்பிக்கத்தக்க சக்தி நிறுவனமாகும்.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *