சலவை பராமரிப்பை மேம்படுத்தும் தீவா; புதிய வடிவமைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட கலவை வெளியீடு

இலங்கையில் சலவை மற்றும் தனிநபர் பராமரிப்புத் துறையை மீள்வரையறை செய்யும் வகையில், புத்துணர்ச்சி மற்றும் புத்துயிர் பெற்ற  தீவா ஃப்ரெஷ், தீவா பவர், தீவா சோப் ஆகிய தயாரிப்புகளை மீள் அறிமுகப்படுத்துவதில் தீவா பெருமிதம் கொள்கிறது. அதன் செயற்பாட்டு பண்புகள் மற்றும் மதிப்பை மேம்படுத்தும் வகையில் கவனம் செலுத்தி, ஒரு புதுப்பிக்கப்பட்ட வர்த்தகநாம மாற்றத்துடன் தீவா தற்போது வெளிவருகிறது. இதன் மூலம் வளர்ந்து வரும் சந்தையில், அதிகரித்து வரும் நுகர்வோர் தேவைகளைப் புரிந்துகொண்டு அவற்றை நிவர்த்தி செய்கிறது.

இந்த மாற்றமானது, தீவாவின் வர்த்தகநாம அர்ப்பணிப்பு மற்றும் அதன் நோக்கத்துடன் இணைந்தவாறான நவீன மற்றும் எழுச்சியூட்டும் தோற்றத்தை காண்பிக்கிறது. இவை தீவாவின் முக்கிய தயாரிப்புகளான தீவா ஃப்ரெஷ், தீவா பவர், தீவா சோப் ஆகியவற்றிற்கு வர்த்தகநாம மதிப்பை சேர்க்கின்றன. Hemas Consumer Brands இனது சலவைப் பராமரிப்பு பிரிவின் தலைவி, திருமதி அனுஷ்கா சபாநாயகம், இந்த புதிய தோற்றம் மற்றும் நுகர்வோர் எதை எதிர்பார்க்கலாம் என்பது பற்றி தெரிவிக்கையில், “விசேடத்துவம் மற்றும் புத்தாக்கங்கள் ஆகியவற்றின் மூலம் தீவாவின் பயணம் தொடர்கிறது. எமது புதுப்பிக்கப்பட்ட தயாரிப்புகள் இலங்கையில் சலவை பராமரிப்புப் பிரிவில் தெளிவான வேறுபாடாக அமைகின்றன. புதிய தீவா ஃப்ரெஷ், தீவா பவர், தீவா சோப் உற்பத்திகள், விசேடத்துவம், பாதுகாப்பு, செயற்றிறனுக்கான அர்ப்பணிப்பை காட்டுகிறது. இந்த மாற்றங்கள் எமது வாடிக்கையாளர்களுக்கு புதிய சலவை அனுபவங்களைப் பெற உதவுகிறது.” என்றார்.

தீவா ஃப்ரெஷின் வசீகரத் தன்மையானது, 3 அடிப்படை அம்சங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அதில் முதலாவதாக பெர்ஃப்யூம் மெஜிக், ஒரு நீடித்த மற்றும் வசீகரிக்கும் நறுமணத்தை அளித்து, துணிகளில் நீடித்து நிற்க செய்கிறது. துணியை துவைத்த பின்னற் ஒரு புத்துணர்ச்சியூட்டும் வாசனையை உட்செலுத்துகிறது. இரண்டாவது அம்சம் ஃபைபர் க்ளீன் தொழில்நுட்பமாகும். ஆடையின் ஒவ்வொரு துவைத்தலுக்கும் பின்னர் ஆடைகளை அவற்றின் அழகிய நிலையில் பேண உதவும் ஒரு புரட்சிகர கண்டுபிடிப்பு இதுவாகும். இறுதி அம்சம் ஒப்டிகல் பிரைட்னர்ஸ் ஆகும். இது துணிகளுக்குள் புத்துணர்ச்சியை செலுத்தி அதனை புதுப்பிப்பதன் மூலம், நம்பிக்கையையும் தன்னம்பிக்கையையும் உருவாக்குகின்றது. தீவா ஃப்ரெஷ் வகைகளில் ரோஸ், லோட்டஸ், ஜெஸ்மின், சேபாலிகா, அரலிய ஆகிய பல்வேறு தெரிவுகள் காணப்படுகின்றன.

ஆடைகளுக்கான பாதுகாவலராக தீவா பவர் உயர்ந்து நிற்கிறது. இது கிருமிகளுக்கு எதிராகவும் நிறம் மங்காமலும் பாதுகாப்பை உறுதி செய்கிறது. பாதுகாப்பிற்கு இணையான நற்பெயரை நுகர்வோர் மத்தியில் நிறுவியுள்ளதன் மூலம், இலங்கையிலுள்ள குடும்பங்களுக்கிடையில் இது ஒரு சரியான தெரிவாக அமைந்தள்ளது. இது 99.9% ஆன கிருமிகளை திறனாக அழிக்கும் வகையிலான, கிருமிகளிடமிருந்தான பாதுகாப்பு போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளதன் மூலம், முழுக் குடும்பத்தின் ஆரோக்கியத்தையும் சுகவாழ்வையும் இது உறுதி செய்கிறது. இதனை மேலும் முழுமைப்படுத்தும் வகையில், UK இல் உள்ள சலவை நிபுணர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட மேம்பட்ட Colour Guard (வர்ணப் பாதுகாப்பு) தொழில்நுட்பம், அழகிய வண்ணங்களைப் பாதுகாத்து, ஆடையின் ஆயுளை நீடிக்கச் செய்கிறது. சலவை இயந்திரங்களிலோ அல்லது கைகள்  மூலமாகவோ துணிகளை துவைப்பதற்குப் பயன்படுத்தப்பட்டாலும் இத்தயாரிப்பு தனித்துவமாக இருப்பதோடு, எந்தவொரு சலவை முறையிலும் இன்றியமையாத பல் அம்சம் கொண்ட தயாரிப்பாகும். தீவா பவர் ரேஞ்ச் ஆனது, திரவம் மற்றும் தூள் ஆகிய இரு வடிவங்களிலும் கிடைக்கிறது.

தீவா சோப் ஆனது, தரம் மற்றும் கட்டுப்படியான விலையின் ஒரு அம்சமாக தன்னை அடையாளப்படுத்துகிறது. இது நீண்ட நேரம் நிலைக்கும் வாசனைத் திரவிய அம்சத்தைக் கொண்டுள்ளதோடு, நுகர்வோரின் தூய்மைப்படுத்தல் நடைமுறைகளுக்கு மாற்றத்தை வழங்குகிறது. அத்துடன் நாள் முழுவதும் நீடித்த, மயக்கும் நறுமணத்தை கொண்டுள்ளது.

20 வருடங்களுக்கும் மேலான பயணத்தை கொண்டாடும் தீவா வர்த்தக நாமமானது, இலங்கையிலுள்ள நுகர்வோரின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் சலவைப் பராமரிப்பு மற்றும் வீட்டுப் பராமரிப்பு பொருட்களை வழங்குகின்றது. இந்த தயாரிப்புகள் தரம், கட்டுப்படியான விலை, புத்தாக்கம் ஆகியவற்றை வழங்கும் வகையில் பல்வேறு வகைகளாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

Hemas Consumer Brands பற்றி

வீடு மற்றும் தனிநபர் பராமரிப்பு தயாரிப்புகளின் இலங்கையின் முன்னணி உற்பத்தியாளரான Hemas Consumer Brands, பல ஆண்டுகளாக வலுவான நோக்கம் கொண்ட தரக்குறியீடுகள் கொண்ட தயாரிப்புகள் மற்றும் முற்போக்கான நிலைபேறான தன்மையான நடைமுறைகள் மூலம், நுகர்வோர் இதயங்களை வென்றுள்ளது. Hemas Consumer Brands ஆனது உலகத் தரம் வாய்ந்த தயாரிப்புகளின் வரிசைகள் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் தனிநபர் பராமரிப்பு தீர்வுகளை வழங்கி வருகிறது. வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட புத்தாக்கம் மிக்க குழுக்கள் மூலம், உள்ளூர் தேவைகளை அறிந்து அதன் மூலம் சந்தையில் முன்னணியில் உள்ள மற்றும் விருது வென்ற தயாரிப்புகளை உருவாக்குவது தொடர்பில் அது பாராட்டைப் பெற்றுள்ளது. அந்த வகையில், அர்த்தமுள்ள சலுகைகளை உருவாக்கி, நம்பகமான கூட்டாண்மைகளை வளர்த்து, மேலும் சூழலுக்கு உகந்த உலகத்தை உருவாக்குவதன் மூலம் நாட்டின் அனைத்து பாகங்களிலுமுள்ள சமூகங்களின் வாழ்க்கையை சென்றடைகிறது.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *